கரு உருவாக்கும் நாயகி... சுகப்பிரசவம் தரும் தேவி  - திருக்கருகாவூர் அற்புதம்

By வி. ராம்ஜி

தஞ்சாவூர் அருகில் உள்ளது திருக்கருகாவூர். இங்கே பிரத்யட்ச தெய்வமாக, கண் கண்ட தெய்வமாக, கருணையே உருவான தெய்வமாக, கண்களில் ஒளி ததும்பக் காட்சி தந்துகொண்டிருக்கிறாள் கர்ப்ப ரட்சாம்பிகை. அருள் மழை பொழிந்து கொண்டிருக்கிறாள் தேவி.


பெண்களுக்காகவே, பெண்களின் நலனுக்காகவே, பெண்களின் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்காகவே இங்கே இருந்துகொண்டு மொத்த உலகத்துப் பெண்களுக்கு அருள்புரிந்து வருகிறாள் கர்ப்ப ரட்சாம்பிகை.


திருமண பாக்கியம் தந்தருள்கிறாள். நீண்டகாலமாக பிள்ளை வரமின்றிக் கலங்கித் தவிக்கும் பெண்களுக்கு, சந்தான பாக்கியத்தை வழங்குகிறாள் திருக்கருகாவூர் தேவி.
அதேபோல், கர்ப்பமானவர்கள், சுகப்பிரசவத்துக்காகவும் குழந்தை ஆரோக்கியத்துடன் நோயின்றிப் பிறக்கவும் இந்த ஸ்லோகத்தை செவ்வாய், வெள்ளி, ஞாயிறு என்று சொல்லி வரவேண்டும். மற்ற நாட்களிலும் சொல்லிவரலாம்.


வீட்டில் விளக்கேற்றி இந்த ஸ்லோகத்தைச் சொல்லச் சொல்ல, நினைத்தது நிறைவேறும். சுகப்பிரசவம் நிகழும். சத்தான குழந்தை பிறக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஹிமவத்யுத்தரே பாா்ஸ்வே சுரதா
நாம யக் ஷீனி
தஸ்யா ஸ்மா்ண மாத்ரேணா
விசல்யா கா்பிணிபவேது.

ஹே சங்கர ஸ்மரஹப் பிரமதாதி
நாதரி மன்னாத சாம்பசசிசூட
ஹரதிரிசூலின் சம்போக சுக
பிரசவ கிருதபவமே
தயாளோ ஹேமாதவி வனேச
பாலயமாம் நமஸ்தே.

கர்ப்பரட்சாம்பிகைக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை படிப்பதாலும் சகல சௌபாக்கியங்களோடு கர்ப்பப் பையிலுள்ள நோய்கள் விலகி புத்திரபாக்கியம் ஏற்படும். அதோடு பெண்களது கருவளா்ச்சிக்கு உதவும் சக்தி வாய்ந்த மந்திரம் என்றும் மந்திரத்தின் மகோன்னதத்தைச் சொல்லி சிலாகிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
மேலும் இந்த ஸ்லோகத்தை வீட்டில் விளக்கேற்றி, பால் பாயசம் நைவேத்தியம் செய்து அம்பாளைத் துதிக்க, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வந்தால், மகத்தான பலன்கள் நிச்சயம், மகப்பேறு சுபமாக நிகழும். ஆரோக்கியத்துடன் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.

ஸ்ரீ மாதவீகானனஸ்தே
ரக்ஷாம்பிகே
பாஹி மாம் பக்தம் ஸ்துவந்தம்
வாபீதடே வாமபாகே வாம
தேவஸ்யதேவ்ஸ்ய தேவீஸ்திதாத்வம் மாந்யா வரேண்யாவதான்யா-பாஹி
கர்ப்பஸ்த ததா பக்த லோகான் ( ஸ்ரீ)

ஸ்ரீகர்ப்பரக்ஷாபுரயோ திவ்ய
சௌந்தர்ய யுக்தா ஸுமாங்கல்ய
காத்ரி
தாத்ரீ ஜனத்ரீ ஜனானாம் திவ்ய
ரூபாம் தயார்த்ராம் மனோக்ஞாம்
பஜேதாம் ( ஸ்ரீ)

ஆஷாடமாஸே ஸுபுண்யே -சுக்ர
வாரே ஸுகந்தேன கந்தேன லிப்தா
திவ்யாம்பராகல்ப வேஷா வாஜ
பேயாதி யாகஸ்த பக்தைஸ்ஸுத்ருஷ்டா (ஸ்ரீ)

கல்யாண தாத்ரீம் நம்ஸ்யே – வேதி
காட்யஸ்த்ரியாகர்ப்பரக்ஷாகரீம்
த்வாம்
பா லைஸ்ஸதாஸேவிதாங்க்ரிம் –
கர்ப்ப
ரக்ஷார்த்தமாராதுபேதைருபேதாம் ( ஸ்ரீ)

ப்ரம்ஹோத்ஸவே விப்ரவித்யாம் –
வாத்ய
கோஷேண துஷ்டாம் ரதே
ஸந்நிவிஷ்டாம்
ஸர்வார்த்த தாத்ரீம் பஜேஹம் –
தேவ
ப்ருந்தைரபீட்யாம் ஜகன்மாதரம்-
த்வாம் (ஸ்ரீ)

ஏதத்க்ருதம் ஸ்தோத்ரரத்னம் –
தீக்ஷி
தானந்தராமேண
தேவ்யாஸ்ஸுதுஷ்ட்யை
நித்யம் படேத்யஸ்து பக்த்யா – புத்ர
பௌத்ராதி பாக்யம் பவேத்தஸ்ய
நித்யம் ( ஸ்ரீ)


உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கர்ப்பிணிகள், வீட்டில் விளக்கேற்றி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். பால் பாயசம் நைவேத்தியம் செய்து, அருகில் உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு பால்பாயசம் வழங்குங்கள். சத்தான சந்தான பாக்கியம் உறுதி என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்