கொல்கத்தாவில் குருவாயூரப்பன்

By வினு பவித்ரா

கேரள மாநிலத்தில் அமைந்திருக்கும் குருவாயூர் ஆலயம் ஏராளமான இந்துக்கள் சென்று வணங்கும் ஐந்து இந்திய திருத்தலங்களில் ஒன்று. ஏறத்தாழ 33 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்கத்தா மாநகரில் வசிக்கும் குருவாயூர் பக்தர்கள் சிலர் சேர்ந்து பாகவத சப்தாஹம் கமிட்டியைத் தொடங்கினர்.

இந்த கமிட்டியின் முயற்சியில், மறைந்த பிரம்ம அஞ்சம் மாதவன் நம்பூதிரியை வைத்து  மத் பாகவத சப்தாஹ பாராயணம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தக் கமிட்டிக்கு,  குருவாயூரப்பன் சமாஜம் என்று பெயரிடப்பட்டது. குருவாயூரப்பனுக்கு கொல்கத்தாவிலேயே ஒரு ஆலயத்தை அமைக்கவும் முடிவுசெய்யப்பட்டது.

கேரளத்திலிருந்து அழைத்துவரப்பட்ட புகழ்பெற்ற ஜோதிடர்களால் அஷ்டமாங்கல்ய பிரசன்னம் நடத்தப்பட்டு ஆலயம் எழுப்புவது தொடர்பாக பல சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டன. குருவாயூர் ஆலயத்தின் தந்திரி பிரம்ம பிசி திவாகரன் நம்பூதிரிபாட் மற்றும் அவரது மகன் ஆச்சார்ய ரத்னா டாக்டர் பிசி தினேசன் நம்பூதிரிபாட் ஆகியோர் புதிதாக அமைக்கப்படவிருக்கும் குருவாயூர் ஆலயத்துக்கு தந்திரிகளாக நியமிக்கப்பட்டனர். பிரபல ஆலய கட்டுமானவியலாளரான பிரம்ம கனிப்பாயூர் கிருஷ்ணன் நம்பூதிரிபாட் அழைத்துவரப்பட்டார். காஞ்சி பரமாச்சார்யாள்  ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் இந்த ஆலயத்துக்கான அடிக்கல் 1987-ம் ஆண்டு ஜனவரி 17-ம் நாள் நாட்டப்பட்டது.

கேரளத்தில் உள்ள பட்டாம்பியிலிருந்து கருப்புக் கற்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 10 சிற்பிகள் இரவு பகலாக உழைத்து இந்த ஆலயத்தை நிர்மாணித்தனர்.  குருவாயூரப்பன், விநாயகர், அய்யப்பன், பகவதி மற்றும் அனுமன் விக்கிரகங்கள் கம்பீரமாக எழுந்தன.

அத்தியாவசியமான சடங்குக மற்றும் சம்பிரதாயங்களுடன் தந்திரிகள் குழுவினரால் 1995-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி பிரதான விக்கிரகங்களும் துணை விக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மூன்று நாட்கள் சடங்குகளுக்குப் பிறகு பக்தர்களுக்காக குருவாயூரப்பன் ஆலயம் திறந்துவிடப்பட்டது.

கொல்கத்தாவில் உள்ள கிருஷ்ண பக்தர்கள் கேரளத்தில் உள்ள குருவாயூரப்பனைத் தரிசிக்க விரும்பினால் அங்கேயே தரிசிக்கும் வகையில் துலாபாரப் பிரார்த்தனை உட்பட அனைத்தும் செய்யவும் இங்கே வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் கிழக்குப் பகுதியில் குருவாயூரப்பனின் புகழ் நாராயணா! நாராயணா! என்று எதிரொலிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

18 hours ago

ஆன்மிகம்

23 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்