மேஷ ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் சுக்கிரனும் 6-ல் ராகுவும் உலவுவதால் மடிப்பும் அந்தஸ்தும் உயரும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு உதவுவார்கள். நிலபுலங்கள் சேரும். சொத்துக்களால் வருவாயும் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். பேச்சில் திறமை வெளிப்படும். நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காண வழி பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.
கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். மாதர்களது எண்ணம் ஈடேறும். மாணவர்களது நிலை உயரும். அலைச்சல் என்பது கூடும் என்றாலும் அதற்கான பயனும் கிடைக்கும். புதியவர்களது தொடர்பால் நலம் உண்டாகும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும். புதிய பொறுப்புக்களும் பதவிகளும் சிலருக்கு கிடைக்கும். முக்கியமான எண்ணங்கள் ஒன்றிரண்டு இப்போது நிறைவேறும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 6, 9, 10, 12.
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: புகை நிறம், பொன்நிறம், இளநீலம், வெண்மை.
எண்கள்: 3, 4, 6.
பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடவும்.
ரிஷப ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் செவ்வாயும் 4-ல் புதனும் சுக்கிரனும் 6-ல் சனியும் 11-ல் கேதுவும் உலவுவதால் இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். வார முன்பகுதியில் செலவுகள் சற்று அதிகரிக்கும். சிக்கன நடவடிக்கை தேவை. வார நடுப்பகுதியில் மதிப்பு உயரும். பிறர் உங்களைப் போற்றுவார்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புக்கள் கூடிவரும்.
மாதர்களால் அனுகூலம் உண்டாகும். வாரப் பின்பகுதியில் பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். உல்லாசங்களிலும்; விருந்து, உபசாரங்களிலும் ஈடுபாடு கூடும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். அரசு காரியங்கள் நிறைவேறும். கடல் வாணிபம் லாபம் தரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 9, 10, 12.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, மேற்கு, கிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, நீலம், ஆரஞ்சு.
எண்கள்: 1, 5, 6, 7. 8, 9.
பரிகாரம்: துர்கைக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
மிதுன ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 10-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். வார ஆரம்பத்தில் சந்திரன் 11-லும், செவ்வாய் 2-லும் பரிவர்த்தனையாக இருப்பதால் பண வரவு அதிகரிக்கும். மன மகிழ்ச்சி கூடும். முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு உண்டாகும். மூத்த சகோதர, சகோதரிகளால் நலம் ஏற்படும். ஆசைகள் நிறைவேறும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஜலப் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். பயணத்தில் நாட்டம் கூடும். வார நடுப் பகுதியில் செலவுகள் சற்று அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகும். குடும்ப நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். வாரக் கடைசியில் மக்களாலும், தந்தையாலும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் நஷ்டத்துக்கு ஆளாகாமல் தப்பலாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 6, 10, 12.
திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: வான்நீலம், மெரூன்.
எண்கள்: 6, 7.
பரிகாரம்: மகாவிஷ்ணுவை வழிபடவும். விஷ்ணு துர்கைக்கு நெய்தீபமேற்றவும்.
கடக ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 2-ல் புதன், குரு சுக்கிரன் ஆகியோரும் 3-ல் ராகுவும் உலவுவதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். தொழில் விருத்தி அடையும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவற்றைப் பெறச் சந்தர்ப்பம் உருவாகும். பொருளாதார நிலை திருப்தி தரும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும்.
வேலையில்லாதவர்களுக்குத் தகுந்த வாய்ப்பு வார முன்பகுதியில் கூடிவரும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான பாதை புலப்படும். வார நடுப்பகுதியில் ஆதாயம் கூடும். கலைத்துறை ஊக்கம் தரும். ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கையோ, ஆதாயமோ கிடைக்கும். வாரக் கடைசியில் செலவுகள் சற்று அதிகரிக்கும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 6, 9
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு
நிறங்கள்: புகை நிறம், இளநீலம், பச்சை, பொன் நிறம்
எண்கள்: 3, 4, 5, 6.
பரிகாரம்: ஆஞ்சநேயரையும், விநாயகரையும் வழிபடுவது நல்லது.
சிம்ம ராசி வாசகர்களே!
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 3-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும். பிறருக்கு உதவி புரிவீர்கள். செய்துவரும் தொழிலில் சீரான வளர்ச்சி இருந்துவரும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். பெண்களுக்கு உற்சாகமான பாதை புலப்படும். பொது நலப்பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும்.
தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோர் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் உஷ்ணாதிக்கம் கூடும். எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். குடும்பத்தில் சலசலப்பு இருந்துவரும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. புதியவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். அரசியல், நிர்வாகம், பொறியியல் சார்ந்த துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் காரியமாற்றுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 6, 9, 10, 12 (பகல்)
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு
நிறங்கள்: நீலம், சிவப்பு
எண்கள்: 6, 8
பரிகாரம்:
சூரிய வழிபாடு செய்வது நல்லது.
கன்னி ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 11-ல் சூரியனும் செவ்வாயும் 12-ல் சுக்கிரனும் உலவுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நிறுவன, நிர்வாகத் துறையினருக்கு வரவேற்பு கூடும்.
பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். சிவப்பு நிறப் பொருட்கள் லாபம் தரும். திரவப் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். புதன் பலம் குறைந்திருப்பதால் வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்தவேண்டும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 9, 10, 12
திசைகள்: கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, வெண்மை, நீலம், ஆரஞ்சு
எண்கள்: 1, 6, 9
பரிகாரம்: புதன், குரு, ராகு, கேது ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்துவருவது நல்லது. திருமாலை வழிபடவும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
11 hours ago
ஆன்மிகம்
12 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago