வார ராசி பலன் 13-08-2015 முதல் 19-08-2015 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

By சந்திரசேகர பாரதி

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் சுக்கிரனும், 6-ல் ராகுவும் உலவுவதால் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். சுகம் கூடும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். புதிய சொத்துகள் வாங்க வழிபிறக்கும். மகப்பேறு அல்லது பிள்ளைகளால் பாக்கியம் உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும்.

அரசு சம்பந்தமான காரியங்களில் வெற்றி கிட்டும். ஆன்மபலம் கூடும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மந்திர உபதேசம் பெற வாய்ப்பு கூடிவரும். பணப் புழக்கம் பெருகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பயணத்தால் அனுகூலம் ஏற்படும். எதிர்ப்புகள் குறையும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழிலும் வர்த்தகமும் அதிக லாபம் தரும். 18-ம் தேதி முதல் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 13, 15, 16, 17.

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: புகை நிறம், பொன்நிறம், இளநீலம், வெண்மை.

எண்கள்: 3, 4, 6.

பரிகாரம்:

முருகனுக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்து வருவது நல்லது.

ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் செவ்வாயும், 4-ல் புதனும் சுக்கிரனும், 6-ல் சனியும், 11-ல் கேதுவும் உலவுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நல்ல தகவல் வந்து சேரும். எதிரிகள் அடங்குவார்கள். கடல் வாணிபம் செய்பவர்களுக்கு லாபம் கூடும். நண்பர்களும் உறவினர்களும் நலம் புரிவார்கள். க

ணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு, கமிஷன் ஏஜன்ஸி மூலம் ஆதாயம் கிடைக்கும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்கள், இயந்திரப் பணியாளர்களுக்குச் செழிப்பு கூடும். மாணவர்களது திறமை பளிச்சிடும். பெண்களின் நோக்கம் நிறைவேறும். கேளிக்கை, புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் நிச்சயம் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 13, 15, 16, 17.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, நீலம், ஆரஞ்சு, பச்சை.

எண்கள்: 1, 5, 6, 7, 8, 9.

பரிகாரம்:

கர்ப்ப ரட்சாம்பிகை மற்றும் தாயுமானவரை வழிபடவும். சமயபுரம் மாரியம்மனுக்கு நெய்தீபம் ஏற்றவும்.

மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும், 10-ல் கேதுவும் உலவுவது சிறப்பு. பண வரவு சற்று அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். 2-ல் சூரியனும், செவ்வாயுமிருப்பதால் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் கூடும். குருவும் புதனும் 3-ல் இருப்பதால் வியாபாரிகள், தொழிலதிபர்கள், உத்தியோகஸ்தர்கள், கல்வித் துறைகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு முன்னேற்றம் தடைபடும். பொருளாதாரப் பிரச்சினை ஏற்படும்.

நண்பர்கள், உறவினர்களால் தொல்லைகள் சூழும். பிள்ளைகள் நலனில் கவனம் தேவை. அலைச்சல் அதிகமாகும். உடல் சோர்வு உண்டாகும். மனதில் பயம் ஏற்படும். 18-ம் தேதி முதல் சூரியன் 3-ம் இடம் மாறி வலுப்பெறுவதால் அரசு சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். முக்கியஸ்தர்களது சந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். நிர்வாகத் திறமை கூடும்.

அதிர்ஷ்டமான தேதிகள் : ஆகஸ்ட் 13, 15, 16, 17.

திசைகள்:தென்கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: வான் நீலம், மெரூன்.

எண்கள்: 6, 7.

பரிகாரம்: முருகனை வழிபடுவது நல்லது. துர்க்கை கவசம் படிக்கவும்.

கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதன், குரு, சுக்கிரன் ஆகியோரும் 3-ல் ராகுவும் உலவுவதால் குடும்ப நலம் சிறப்பாகும். பொருளாதார நிலை உயரும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு உண்டாகும். காடு, மலை, வனாந்தரங்களில் தொழில் புரிபவர்களுக்கு வருவாய் அதிகரிக்கும். மருத்துவம், ரசாயனம், விஞ்ஞானம், ஆன்மிகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

உணவுப் பொருட்களால் லாபம் கிடைக்கும். ஹோட்டல் தொழிலால் ஆதாயம் கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்பு ஆக்கம் தரும். பிள்ளைகளாலும், வாழ்க்கைத் துணைவராலும் அனுகூலம் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு வரவேற்பு கூடும். எதிர்ப்புகள் கட்டுக்குள் அடங்கியே இருக்கும். 18-ம் தேதி முதல் பொருள்வரவு அதிகமாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 13, 15, 16, 17.

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: புகை நிறம், இளநீலம், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 4, 5, 6.

பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடுவது நல்லது.

சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 3-ல் சனியும் உலவுவது சிறப்பு. வார முன்பகுதியில் எதிர்பாராத செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும். எதிரிகள் இருப்பார்கள். அரசு விவகாரங்களில் விழிப்பு தேவை. அரசியல், நிர்வாகம், பொறியியல் சம்பந்தமானவர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.

வார நடுப்பகுதியில் புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கலைத் துறையினருக்கு வரவேற்பு கூடும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழில் விருத்தி அடையும். வாரப் பின்பகுதியில் சந்திரன் ராகுவுடன் கூடி 2-ம் இடத்தில் உலவும் நிலை அமைவதால் குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்படும். பேச்சிலும் செயலிலும் உணவுப் பழக்கத்திலும் கட்டுப்பாடு தேவை. கண், வாய், முகம் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 15, 16, 17.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு.

நிறங்கள்: நீலம், சிவப்பு

எண்கள்: 6, 8.

பரிகாரம்:

சூரியன், செவ்வாய், ராகு, கேதுவுக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்யவும்.

கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 11-ல் சூரியனும் செவ்வாயும், 12-ல் சுக்கிரனும் உலவுவதால் முக்கியமான எண்ணங்கள் வார முன்பகுதியில் நிறைவேறும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். இயந்திரப் பணிகள் லாபம் கொண்டுவரும். இன்ஜினியர்கள் வரவேற்பு கூடப் பெறுவார்கள். கடல் சார்ந்த தொழில்கள் ஆதாயம் தரும். அரசுப் பணியாளர்கள், அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். வார நடுப்பகுதியில் செலவுகள் அதிகமாகும்.

என்றாலும் அவை பெரும்பாலும் சுப செலவுகளாகவே இருக்கும். வியாபாரிகளுக்கு முன்னேற்றம் தடைபடும். தொழில் ரீதியாக இடமாற்றம் உண்டாகும். சிலர் இருக்கும் உத்தியோகத்தை விட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்லவும் கூடும். வாரப் பின்பகுதியில் அலச்சல் அதிகமாகும். பயணத்தால் சிறு சங்கடம் ஏற்படும். மன உளைச்சல் உண்டாகும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 13, 17 (இரவு).

திசைகள்: கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, வெண்மை, நீலம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 6, 9.

பரிகாரம்: சிவ வழிபாடு நலம் தரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்