வரமெல்லாம் தரும் வைகாசி சுக்கிர வார அமாவாசை; தர்ப்பணம்

By வி. ராம்ஜி

வைகாசி சுக்கிர வார அமாவாசையில், தர்ப்பணம் செய்து முன்னோரை வணங்கி வழிபட்டால், கேட்டதெல்லாம் கிடைக்கும், நினைத்ததெல்லாம் நிறைவேறும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். வரும் 22.5.2020 வெள்ளிக்கிழமை அமாவாசை.


அமாவாசை என்பது முன்னோருக்கான நாள். பித்ருக்களுக்கான நாள். ஒவ்வொரு அமாவாசையிலும் தர்ப்பணம் செய்யச் சொல்லி, அறிவுறுத்துகிறது சாஸ்திரம். இதேபோல், வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் என்றும் விவரிக்கிறது.


அமாவாசையிலும் தமிழ் மாதப் பிறப்பிலும் தர்ப்பணம் செய்யவேண்டும். முன்னோர்களின் படங்களுக்கு பூக்களிட்டு தூப தீப ஆராதனை காட்டி, நமஸ்கரித்து பிரார்த்தனை செய்யவேண்டும்.


வைகாசி அமாவாசை விசேஷம். வெள்ளிக்கிழமைக்கு சுக்கிரவாரம் என்று பெயர். சுக்கிரவார அமாவாசை ரொம்பவே விசேஷம். இந்தநாளில், பித்ருக்களை நினைத்து தர்ப்பணம் செய்யுங்கள். எள்ளும் தண்ணீரும் விட்டு செய்யப்படுகிற தர்ப்பணத்தை, தில தர்ப்பணம் செய்வார்கள். தில தர்ப்பணம் என்பது எள் கொண்டு தர்ப்பணம் செய்வது!


எனவே, அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்து, முன்னோரை ஆராதியுங்கள்.அவர்களுக்குப் பிடித்த உணவை நைவேத்தியமாகப் படைத்து வேண்டிக் கொள்ளுங்கள். அன்றைய நாளில், முன்னோரை நினைத்து ஐந்துபேருக்காவது உணவுப் பொட்டலம் வழங்குங்கள். தயிர்சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம் என ஏதேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள்.


உங்கள் இல்லத்தில் உள்ள குறைகளையெல்லாம் போக்கியருள்வார்கள் பித்ருக்கள். கேட்ட வரங்களையெல்லாம் தந்தருள்வார்கள். நீங்கள் நினைத்ததையெல்லாம் நடத்தித் தந்தருள்வார்கள்.


வரும் 22.5.2020 வெள்ளிக்கிழமை, அமாவாசை. மறக்காமல் தர்ப்பணம் செய்யுங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

10 days ago

ஆன்மிகம்

10 days ago

ஆன்மிகம்

12 days ago

மேலும்