ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு மனித அவதாரம் எடுத்து வாழ்ந்து காட்டினார் மகாவிஷ்ணு. அவரின் அவதாரங்களிலேயே உன்னதமானதும் மனித வாழ்வுக்கு நெருக்கமானதும் என்று போற்றப்படுவது... ராமாவதாரம். ராமாயணம் என்றால் ராமர் காட்டிய பாதை. அயனம் என்றால் பாதை என்று அர்த்தம். வாழ்க்கைப் பாதையைக் காட்டிய ராமரின் சரிதம் ராமாயணம்.
சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று ராமர் அவதரித்தார் என்கிறது புராணம். அதேசமயம் பங்குனி மாதத்திலும் அவதரித்த தினம் வரும். தசரதரின் மகனாகப் பிறந்த ராமன், தந்தையின் சொல் கேட்டு அவர் சொன்ன ஒரேயொரு வார்த்தைக்காக, காட்டிற்குச் சென்றார். 14 ஆண்டுகள் வனவாசம் இருந்தார். இந்தக் காலகட்டத்தில், மனைவி சீதையையும் பிரிந்தார்.
ஏகபத்தினி விரதனாக இருந்த ராமபிரானின் வாழ்க்கை, மனிதர்களுக்கு பல அரிய வாழ்க்கை முறைகளை போதிக்கிறது.
ராமநவமி நாளில் துளசி அர்ச்சனை செய்து வழிபடுவது பல உன்னதங்களையும் விசேஷங்களையும் தந்தருளும். பூஜையறையில் அமர்ந்து, ’ராமராம’ என்று அவனுடைய திருநாமங்களைச் சொல்லி, பிரார்த்தனை செய்யுங்கள். ராமநாமங்களைச் சொல்லச் சொல்ல, உங்கள் இல்லத்திலும் உலகத்திலும் பல நல்ல நல்ல சத்விஷயங்களை நடத்தித் தந்தருள்வார் ராமபிரான். ஸ்ரீராமஜெயம் என்றும் ஜபிக்கலாம்!
ராமபிரானை வழிபடுவதால் எத்தனை துன்பம் வந்தபோதும் கலங்காத மனதைப் பெறலாம். தம்பதி ஒற்றுமை மேலோங்கும்! எடுத்த செயல்களில் வெற்றி கிடைக்கும்.
விஷ்ணு சகஸ்ரநாமம் சொன்ன பலன் கிடைப்பதற்கு இந்த மந்திரத்தைச் சொல்லச் சொல்கிறது சாஸ்திரம்.
ஸ்ரீராமராமராமேதி ரமே ராமே மனோரமே |
ஸஹஸ்ரநாம தத்துல்யம்ராமநாம வரானனே ||
இந்த மந்திரத்தை மூன்று தடவை கூறினால் விஷ்ணு சகஸ்ரநாமம் முழுவதும் சொன்ன பலன் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
9 hours ago
ஆன்மிகம்
16 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago