துலாம் ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும் 10-ல் புதனும் 11-ல் குருவும் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் செய்து வரும் தொழில் விருத்தி அடையும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். புதிய முயற்சிகள் கைகூடும். தெய்வப்பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். பொருளாதார நிலை உயரும்.
ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். உடன்பிறந்தவர்களாலும், வாழ்க்கைத் துணைவராலும் அனுகூலம் உண்டாகும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, கலை சம்பந்தமான துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் வந்து சேரும். குருவும் சுக்கிரனும் ஐந்தாமிடத்தைப் பார்ப்பதால் மகப்பேறு பாக்கியம் கிடைக்கும். மக்களால் மனமகிழ்ச்சியும் உண்டாகும்.
நிறங்கள்: மெரூன், பச்சை, இள நீலம், வெண்மை, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 5, 6, 7.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 16, 20, 21.
திசைகள்: கிழக்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.
பரிகாரம்: துர்க்கை அம்மனையும் ஆஞ்சநேயரையும் வழிபடவும்.
விருச்சிக ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 11-ல் ராகு உலவுவது விசேடமாகும். இதர முக்கியமான கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் மனத்தில் ஏதேனும் சலனம் இருந்துவரும் காரியத்தில் வெற்றி பெற அரும்பாடுபட வேண்டிவரும். உடல்நலனில் கவனம் தேவை. சிறுவிபத்துக்கு ஆளாக நேரலாம். பதற்றப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது.
வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். செய்து வரும் தொழிலில் அதிக கவனம் செலுத்தவும். மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். 17-ம் தேதி முதல் சூரியன் ஒன்பதாமிடத்திற்கு மாறுவதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வாரக் கடைசியில் சந்திரன் ராகுவுடன் கூடி 11-ம் இடத்தில் உலவும் நிலை அமைவதால் அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். புதியவர்களின் தொடர்பு நலம் தரும். பயணம் சார்ந்து ஆதாயம் கிடைக்கும். மக்களால் மனநிறைவு உண்டு.
நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், ஆரஞ்சு.
திசைகள்: தென்மேற்கு, கிழக்கு.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 20, 21.
எண்கள்: 1, 4.
பரிகாரம்: முருகனுக்குரிய ஸ்லோகங்களைச் சொல்லி வழிபடுவது நல்லது.
தனுசு ராசி வாசகர்களே!
உங்கள் ராசி அதிபதி குரு 9-ல் அமர்ந்து, உங்கள் ராசியையும், மூன்றாம் மற்றும் ஐந்தாம் இடங்களையும் பார்ப்பது விசேடமாகும். புதன், சுக்கிரன், சனி, ராகு ஆகியோரது சஞ்சாரமும் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் குதூகலம் கூடும். பேச்சில் திறமை வெளிப்படும். தொலைதூரத் தொடர்பு பயன்படும் தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்பு வலுக்கும். வெளிநாட்டு வேலைக்காகக் காத்திருப்பவர்கள் அதற்கான வாய்ப்பை வாரப் பின்பகுதியில் பெறுவார்கள். பொருள்வரவு அதிகமாகும். மன மகிழ்ச்சி பெருகும். குழந்தைகள், தந்தை மற்றும் மனைவியால் அனுகூலம் உண்டாகும். அறப்பணிகளில் நாட்டம் கூடும். பயணம் பயன்படும். உத்தியோகஸ்தர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். அலைச்சல் அதிகமாகும்.
எண்கள்: 3, 4, 5, 6, 8.
பரிகாரம்: சுப்பிரமணியரையும் சூரிய நாராயணரையும் வழிபடுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 20, 21.
நிறங்கள்: புகை நிறம். வெண்மை, கறுப்பு, இளநீலம், பொன் நிறம்.
திசைகள்:தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, மேற்கு.
மகர ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 6-ல் சூரியனும் செவ்வாயும் 8-ல் சுக்கிரனும் 10-ல் சனியும் உலவுவதால், துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களிலும் போட்டிப் பந்தயங்களிலும் வெற்றி கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு கூடும். அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள், இயந்திரப் பணியாளர்கள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். நல்லவர்களின் தொடர்பு நலம் சேர்க்கும்.
நல்லவர் அல்லாதவர்களை விட்டு விலகுவது அவசியமாகும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. குரு 8-ல் உலவுவதால் பணம் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முன்னேற்றம் தடைப்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்:ஜூலை 16, 21 (பிற்பகல்).
திசைகள்: மேற்கு, வடமேற்கு, கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, நீலம், மெரூன்.
எண்கள்: 1, 6, 7, 8, 9.
பரிகாரம்:
குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் அர்ச்சனை செய்வது நல்லது.
கும்ப ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 6-ல் புதனும் 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். அறிவாற்றல் பெருகும். நல்லவர்களின் துணையோடு நற்பணிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரம், கணிதம், விஞ்ஞானம், எழுத்து, பத்திரிகை போன்ற இனங்கள் லாபம் தரும். கடல் வாணிபம் செய்பவர்களுக்கு வருவாய் அதிகரிக்கும். மாணவர்கள் தங்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக் காண வழிபிறக்கும்.
உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ரசாயனத்துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான பாதை புலப்படும். 17-ம் தேதி முதல் சூரியன் ஆறாமிடத்திற்கு மாறி, புதனோடு கூடுவதால் தொழில் நுட்பத்திறமை வெளிப்படும். மின்னணு, கணிப்பொறித் துறையினர் லாபம் அடைவார்கள். ஜலப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். இரவுநேரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 16, 20.
திசைகள்: வடக்கு, மேற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: நீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 8.
பரிகாரம்: நாகர் வழிபாடு மூலம் சங்கடங்களைக் குறைத்துக் கொள்ளலாம்.
மீன ராசி வாசகர்களே!
கோசாரப்படி கிரக நிலை சரியாக இல்லை. இதனால் அலைச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கும். மனதில் ஏதேனும் பயம் குடிகொள்ளும். நிம்மதி குறையும். இதயம், மார்பு, சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. அன்றாடப்பணிகளிலும் கூட அதிகம் கவனம் தேவை. பொருளாதார நிலை சீராக இராது.
பெண்களாலும், மனைவியாலும் சங்கடங்கள் சூழும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நம்பி ஏமாற வேண்டாம். கொடுக்கல்-வாங்கலில் விழிப்பு தேவை. எதிரிகள் இருப்பார்கள் என்பதால் யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழகலாகாது. பெற்றோருக்கும் மக்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டு. வார இறுதியில் நல்ல செய்திகள் வரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 20, 21.
திசை: வடக்கு.
நிறங்கள்: பச்சை, ரோஸ்.
எண்: 5
பரிகாரம்: நவக்கிரக வழிபாடு நல்லது. கோளறு திருப்பதிகம் வாசிக்கவும். கணபதி, நவக்கிரக ஜப ஹோமம் செய்யவும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
10 hours ago
ஆன்மிகம்
12 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago