வார ராசிபலன் 30-7-2015 முதல் 5-8-2015 வரை - மேஷம் முதல் கன்னி வரை

By சந்திரசேகர பாரதி

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 3-லும், புதன் 4-லும், குருவும் சுக்கிரனும் 5-லும், ராகு 6-லும் சஞ்சரிப்பது சிறப்பு. வார ஆரம்பத்தில் சந்திரன் 9-ல் அமர்ந்து குருவின் பார்வையைப் பெறுவதால் தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பிறருக்கு தாராளமாக உதவுவீர்கள்.

தொலைதூரத் தொடர்பு நலம் தரும். பெற்றோரால் அனுகூலம் உண்டாகும். புதிய சொத்துகள் சேரும். 31-ம் தேதி முதல் செவ்வாய் 4-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 1-ம் தேதி முதல் புதன் 5-ம் இடம் மாறுவதும் சிறப்பாகாது. வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். 5-ல் உள்ள பொதுவான சுபக்கிரகங்கள் 11-ம் இடத்தைப் பார்ப்பதால் பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும்.

மூத்த சகோதர, சகோதரிகளாலும் பிள்ளைகளாலும் அனுகூலம் ஏற்படும். பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் நாட்டம் அதிகரிக்கும். சுபச் செலவுகள் சற்று கூடும். இடமாற்றம் நல்லவிதமாக அமையும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 31 (முற்பகல்), ஆகஸ்ட் 2 (பிற்பகல்).

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு,வடக்கு.

நிறங்கள்: பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, புகை நிறம், பொன்நிறம், இளநீலம், வெண்மை.

எண்கள்: 3, 4, 5, 6, 9. ‎

பரிகாரம்: விநாயகரை வழிபடவும்.



ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும், 4-ல் சுக்கிரனும், 6-ல் சனியும், 11-ல் கேதுவும் உலவுவதால் அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். முக்கியமானவர்கள் உதவ முன்வருவார்கள். நிர்வாகத்திறமை கூடும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். பெண்களின் நோக்கம் நிறைவேறும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும்.

பொது நலப்பணியாளர்களுக்கு மதிப்பு உயரும். ஆன்மிகவாதிகளும் அறநிலையப் பணியாளர்களும் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். புதிய பதவி, பட்டங்கள் சிலருக்கு வாரப்பின்பகுதியில் கிடைக்கும். 31-ம் தேதி முதல் செவ்வாய் 3-ம் இடம் மாறுவதால் குடும்ப நலம் சீராகும். மனத்துணிவு கூடும். கடல் சார்ந்த தொழில் லாபம் தரும். 1-ம் தேதி முதல் புதன் 4-ம் இடம் மாறுவதால் வியாபாரம் சூடு பிடிக்கும். நண்பர்கள், உறவினர்களால் நலம் உண்டாகும்.

புதிய சொத்துகள் சேரும். சொத்துகளால் வருவாயும் கிடைக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழ அடிகோலப்படும். தாயாராலும் தாய் வழி உறவினர்களாலும் அதிக நலம் ஏற்படும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 31 (முற்பகல்), ஆகஸ்ட் 2 (பிற்பகல்).

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, மேற்கு, கிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, நீலம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 6, 7. 8.

பரிகாரம்: துர்கையையோ, காளியையோ நெய் விளக்கேற்றி வழிபடவும்.



மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் புதன் 2-லும், சுக்கிரன் 3-லும், கேது 10-லும் உலவுவது சிறப்பு. நல்லவர்களது நட்புறவு நலம் தரும். குடும்பத்தில் குதூகலம் கூடும்.

நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு தொழிலில் ஆதாயம் கிடைக்கும். ஆன்மிகப்பணிகளில் நாட்டம் கூடும். 31-ம் தேதி முதல் செவ்வாய் 2-ம் இடம் மாறுவதும் சிறப்பாகாது. குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்பட்டு விலகும். கோபத்தைக் குறைத்துக் கொண்டு, பிறரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. கண், வாய், ரத்தம் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். வீண்வம்பு, வழக்குகளில் ஈடுபட வேண்டாம்.

பொருளாதாரம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும். தேவைகளைச் சமாளிக்கச் சிலர் கடன் வாங்க வேண்டியும் வரலாம். 1-ம் தேதி முதல் புதன் 3-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. வியாபாரிகள், தொழில் அதிபர்கள் எதிலும் அதிகம் பொருளை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. யாருக்கும் வாக்குகொடுக்க வேண்டாம். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதி: ஆகஸ்ட் 2 (பிற்பகல்).

திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: பச்சை, வான்நீலம், மெரூன்.

எண்கள்: 5, 6, 7.

பரிகாரம்: குருப் பிரீதி செய்வது நல்லது. அந்தணர்கள், வேத விற்பன்னர்களுக்கு உதவவும்.



கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் சுக்கிரனும், 3-ல் ராகுவும் உலவுவதால் எதிர்ப்புகளைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். புதியவர்களது தொடர்பு பயன்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்களால் வருவாய் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மன உற்சாகம் பெருகும். விருந்து, உபசாரங்களிலும்; கேளிக்கை, உல்லாசங்களிலும் ஈடுபாடு கூடும்.

உத்தியோகஸ்தர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஆன்மிகவாதிகளுக்கு அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். ஏற்றுமதி-இறக்குமதியால் ஆதாயம் கிடைக்கும். ஜன்ம ராசியில் சூரியனும் புதனும் 4-ல் சனியும் இருப்பதால் உடல் ஆரோக்கியம் கவனிக்கப்பட வேண்டிவரும். 31-ம் தேதி முதல் செவ்வாய் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதும் சிறப்பாகாது. தொழில் ரீதியாக இடமாற்றம் உண்டாகும். உஷ்ணாதிக்கம் அதிகரிக்கும்.

1-ம் தேதி முதல் புதன் 2-ம் இடம் மாறுவதால் வியாபாரம் செழிக்கும். பேச்சில் திறமை வெளிப்படும். நல்ல எண்ணங்கள் மனதில் உருவாகும்; அவை நிறைவேறவும் சந்தர்ப்பம் கூடிவரும்.

அதிர்ஷ்டமான தேதி: ஜூலை 31 (முற்பகல்) ஆகஸ்ட் 4.

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: புகை நிறம், இளநீலம், பொன் நிறம்.

எண்கள்: 3, 4, 6.

பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடவும்.



சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும், 3-ல் சனியும், 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பு. மனதிற்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். புத்திர, புத்திரிகளால் அனுகூலம் ஏற்படும். திடீர் பொருள்வரவு உண்டாகும். எதிர்ப்புகள் விலகும். தோற்றப்பொலிவு கூடும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். போட்டிகள், பந்தயங்கள், வழக்குகள், விளையாட்டுகளில் வெற்றி கிட்டும்.

பொது நலப்பணிகளில் ஆர்வம் அதிகமாகும். இயந்திரங்கள், எரிபொடுர்கள், நிலபுலங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம். பெண்களால் அனுகூலம் ஏற்படும். 31-ம் தேதி முதல் செவ்வாய் 12-ம் இடம் மாறுவதால் ஜல பயம் ஏற்படும். சகோதரராலும் தந்தையாலும் செலவுகள் கூடும்.

அரசு விவகாரங்களில் விழிப்புத் தேவை. 1-ம் தேதி முதல் புதன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதால் மனதில் ஏதேனும் சலனம் ஏற்பட்டு விலகும். புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 31 (முற்பகல்), ஆகஸ்ட் 2 (பிற்பகல்).

திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, மேற்கு.

நிறங்கள்: நீலம், சிவப்பு.

எண்கள்: 6, 8, 9.

பரிகாரம்: ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வது நல்லது. ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்வது சிறப்பு. நாக பூஜை செய்யவும்.



கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாயும், 11-ல் சூரியனும் புதனும், 12-ல் சுக்கிரனும் உலவுவதால் நல்லவர்களின் தொடர்பால் நலம் கூடும். புதிய சொத்துகள் சேரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். இன்ஜினீயர்களது நிலை உயரும். உடன்பிறந்தவர்களாலும், தந்தையாலும் அனுகூலம் ஏற்படும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். இசைக்கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும்.

அரசாங்கத்தாரால் எதிர்பார்த்துக் காத்திருந்த காரியங்கள் இப்போது நிறைவேறும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் தொழிலில் லாபம் கிடைக்கும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். 31-ம் தேதி முதல் செவ்வாய் 11-ம் இடம் மாறுவது விசேஷம். கடல் சார்ந்த தொழிலில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு வருவாய் அதிகரிக்கும்.

1-ம் தேதி முதல் புதன் 12-ம் இடம் மாறுவதால் தொழிலில் சிறு பிரச்சினை ஏற்பட்டு விலகும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக் கொடுத்துப் பழகிவருவது நல்லது. கூட்டுத் தொழிலில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 31 (முற்பகல்), ஆகஸ்ட் 2 (பிற்பகல்).

திசைகள்: கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: சிவப்பு, வெண்மை, நீலம், ஆரஞ்சு, பச்சை.

எண்கள்: 1, 5, 6, 9.

பரிகாரம்: குரு, ராகு, கேதுவுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

12 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்