மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும், 4-ல் சுக்கிரனும் 6-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு உண்டாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். நல்லவர்களின் தொடர்பு நலம் சேர்க்கும். வாரப் பின்பகுதியில் பண வரவு அதிகமாகும். முக்கியமான எண்ணங்கள் ஈடேற வழிபிறக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.
கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். புதிய ஆடை, அணிமணிகள், அகலங்காரப் பொருட்கள், வாசனைப் பொருட்களின் சேர்க்கை நிகழும். 12-ம் தேதி முதல் சனி வக்கிரமாக 7-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. எதிர்ப்புகள் சற்று கூடும். 15-ம் தேதி முதல் செவ்வாயும் 16-ம் தேதி முதல் சூரியனும் 3-ம் இடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 11, 12, 15.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: புகை நிறம், இளநீலம், வெண்மை, பச்சை.
எண்கள்: 4, 5, 6.
பரிகாரம்:
வள்ளி மணாளனை வழிபடவும். முடிந்தால் வள்ளிமலை சென்று முருகனை வழிபடுவது விசேஷமாகும்.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 3-லும் கேது 11-லும் உலவுவது சிறப்பு. முக்கியமான காரியங்கள் இப்போது நிறைவேறும். ஆன்மிக, அறநிலையப் பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். புதிய பொருட்கள் சேரும். உடன்பிறந்த சகோதரியால் அனுகூலம் உண்டாகும்.
குரு பலம் குறைந்திருப்பதால் பொருளாதாரம் சம்பந்தமான இனங்களில் விழிப்புத் தேவை. புதிய முயற்சிகளை ஒத்திப்போடவும். மக்கள் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். 12-ம் தேதி முதல் சனி 6-ம் இடம் மாறுவதால் எதிர்ப்புகள் குறையும். 15-ம் தேதி முதல் செவ்வாயும், 16-ம் தேதி முதல் சூரியனும் 2-ம் இடம் மாறுவதும் சிறப்பாகாது. எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக ஈடுபடுவது அவசியம். மின்சாரம், தீ, ஆயுதப் பயன்பாட்டில் எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 11, 12, 15.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம்.
எண்கள்: 6, 7.
பரிகாரம்:
நாகத்துடன் கூடிய பராசக்தியை வழிபடவும்.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் சுக்கிரனும், 6-ல் சனியும், 10-ல் கேதுவும் உலவுவதால் பொருளாதார நிலை உயரும். குடும்ப நலம் சிறக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். பிள்ளைகளாலும் வாழ்க்கைத்துணைவராலும் அனுகூலம் உண்டாகும். நல்லவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். மன உற்சாகம் கூடும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு வெற்றிகள் குவியும். பெண்கள் வளர்ச்சி காண்பார்கள். வாரப் பின்பகுதியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அரசாங்கத்தாராலும், உடன்பிறந்தவர்களாலும், தந்தையாலும் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். பக்குவம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 11, 12, 15.
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கு, மேற்கு.
நிறங்கள்: பொன் நிறம், நீலம், மெரூன்.
எண்கள்: 3, 6, 7, 8.
பரிகாரம்:
மகாவிஷ்ணுவுக்கு ஸ்லோகங்கள் சொல்லவும். ஏழை மாணவர்களுக்கு உதவவும். துர்க்கைக்கு நெய்விளக்கேற்றி வழிபடவும்.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும், 3-ல் ராகுவும் 11-ல் சூரியனும் செவ்வாயும் புதனும் உலவுவதால் தோற்றப்பொலிவு கூடும். கலைத்துறை ஊக்கம் தரும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். கேளிக்கை, உல்லாசங்களிலும்; விருந்து உபசாரங்களிலும் ஈடுபாடு கூடும். மனதில் தெளிவும் தன்னம்பிக்கையும் பிறக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி காணலாம்.
எதிரிகள் விலகிப் போவார்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். புதிய சொத்துகள் சேரும். தந்தையாலும் உடன்பிறந்தவர்களாலும் அனுகூலம் உண்டாகும். 12-ம் தேதி முதல் அலைச்சலும் உழைப்பும் கூடும். வீண் செலவுகளும் இழப்புகளும் கூட ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 11, 12, 15.
திசைகள்: தெற்கு, கிழக்கு, தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, புகை நிறம், இளநீலம், பச்சை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 4, 5, 6, 9.
பரிகாரம்:
சனி, கேதுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது. ஹனுமன் சாலீஸா சொல்வதும் கேட்பதும் நல்லது.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சூரியன், செவ்வாய், புதன் ஆகியோரும் 12-ல் சுக்கிரனும் உலவுவதால் செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். புதிய பதவி, பட்டங்கள் தேடிவரும். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்புக் கூடிவரும். அரசியல், நிர்வாகம், பொறியியல் சம்பந்தமான துறைகள் ஆக்கம் தரும்.
இயந்திரப் பணியாளர்களுக்கும் இன்ஜினீயர்களுக்கும் வரவேற்பு கூடும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். எதிரிகள் பயந்து ஓடுவார்கள். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். சமுதாய நலப்பணியாளர்களுக்கு நற்பெயர் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 12 (பிற்பகல்), 15.
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, தெற்கு, கிழக்கு.
நிறங்கள்: இளநீலம், சிவப்பு, பச்சை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 5, 6, 9.
பரிகாரம்:
கேதுவுக்கு அர்ச்சனை செய்யவும். கணபதி ஜபம் செய்யவும். ஹோமங்களுக்கு ஹோமத் திரவியங்கள் வாங்கிக் கொடுக்கவும்.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 11-ல் குருவும் சுக்கிரனும் உலவுவது சிறப்பு. வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கூடிவரும். பெரியவர்களும் தனவந்தர்களும் ஆதரவாக இருப்பார்கள். மனதில் ஏதேனும் சலனம் ஏற்பட்டு விலகும். வாரப் பின்பகுதியில் புனிதமான காரியங்களில் கலந்து கொள்வீர்கள். அதனால் மனத் தெளிவு உண்டாகும். பொருள் வரவு திருப்தி தரும்.
எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். பிள்ளைகளாலும், வாழ்க்கைத் துணைவராலும் நலம் உண்டாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். 12-ம் தேதி முதல் சனி 2-ம் இடம் மாறுவதால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். சமாளிப்பீர்கள். 15-ம் தேதி முதல் செவ்வாயும் 16-ம் தேதி முதல் சூரியனும் 10-ம் இடம் மாறுவது விசேஷமாகும். அரசுப் பணிகள் நிறைவேறும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 11, 15.
திசைகள்: மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, நீலம், பொன் நிறம்.
எண்கள்: 3, 6, 8.
பரிகாரம்:
விநாயகருக்கு நெய் விளக்கேற்றி, ரோஜா மாலை அணிவித்து வழிபடவும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
6 hours ago
ஆன்மிகம்
8 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago