பிள்ளைகள் சரியாகப் படிக்கவில்லை என்றால் “நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு” என்று வசை பாடுவார்கள். இன்னும் சில பெற்றோர் “நாலு வெள்ளாடு வாங்கித் தர்றேன்” போய் மேய்ச்சுட்டு வா” என்பார்கள்.
ஆனால் அது அத்தனை சுலபமான வேலையா? உலகின் தலைசிறந்த கௌ பாய்கள் என்று போற்றப்படுபவர்கள் இருக்கிறார்கள். அதாவது மேய்ப்பர்கள். உண்மையில் மிகவும் கடினமான காரியம் ஒன்று இருக்குமானால் அது நல்ல மேய்ப்பனாக விளங்குவதுதான்.
கிறிஸ்து இயேசுவை நல்ல மேய்ப்பர் என்று நாம் புரிந்துகொள்கிறோம். எதற்காக? உலகத்தைப் படைத்த பரலோகத் தந்தையின் மகனாக இருக்கும் அவர், உலகில் வாழும் தன் மக்களாகிய மந்தைகளை ஆபத்துக்கள் இல்லாத பசும்புல் வெளிகளுக்கு அழைத்துச் சென்று இளைப்பாறுதல் தருகிறார். பெற்றோர்களைத் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல மேய்ப்பர்களாக இருக்கும்படி அவர் கேட்டுக்கொள்கிறார்.
பெற்றோர்களும் மேய்ப்பர்களே
பெற்றோர்கள் எப்படி மேய்ப்பர்களைப் போல் இருக்கிறார்கள்? அக்காலத்தில் மேய்ப்பர்கள் பல சவால்களைச் சந்தித்தார்கள். “மழை, வெயில், பனி என்று பார்க்காமல் வயல்களில் தங்கி ஆடுகளை மேய்த்தார்கள். எதிரிகளிடமிருந்தும் கொடிய விலங்குகளிடமிருந்தும் ஆடுகளைப் பாதுகாத்தார்கள். காயப்பட்ட ஆடுகளுக்கும் வியாதிக்குள்ளான ஆடுகளுக்கும் தேவையானதைச் செய்தார்கள்.
ஆட்டுக்குட்டிகளை இன்னும் நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள்” (40:11) என்று ஏசாயா புத்தகம் விவரிக்கிறது. பெற்றோர்களும் மேய்ப்பர்களைப் போல்தான் இருக்கிறார்கள். பிள்ளைகளை “பரலோகத் தந்தைக்கு ஏற்ற முறையில்” வளர்க்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் அது அவ்வளவு எளிதானதில்லை. ஏனென்றால், பிள்ளைகளுக்கு சாத்தான் நிறைய சோதனைகளைக் கொடுக்கிறான்;
இளமைப் பருவத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் உடல், மன ரீதியான ஆசைகளோடு பிள்ளைகள் போராட வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெற்றோர்கள் எப்படித் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல மேய்ப்பர்களைப் போல் இருக்க முடியும்? விவிலியம் வழிகாட்டுவதைப் பாருங்கள்.
எதைச் செலவிட வேண்டும்?
தன் மந்தையில் உள்ள ஆடுகள் ஒவ்வொன்றும் எப்படி இருக்கிறது என்று ஒரு நல்ல மேய்ப்பர் அடிக்கடி கவனிப்பார். “உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்; உன் மந்தைகளின்மேல் கவனமாயிரு”(27:23) என நீதிமொழி எடுத்துக் காட்டுகிறது. உங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று நீங்கள் கவனிக்க வேண்டும்; என்ன நினைக்கிறார்கள், எப்படி உணர்கிறார்கள் என்று புரிந்துகொள்ள வேண்டும். இதை எப்படிச் செய்வது? மிக எளிதானது. அடிக்கடி உங்கள் பிள்ளைகளிடம் மனந்திறந்து பேசுங்கள். பிள்ளைகள் உங்களிடம் மனந்திறந்து பேசவில்லை என்றால்?
இளமை பருவத்தில் பிள்ளைகள் பெற்றோர்களிடம் உண்மைதான் மனந்திறந்து பேசத் தயங்குவார்கள். இதைச் சரிசெய்ய உங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடுங்கள். அல்லது உடபயிற்சி செய்யுங்கள். அவர்களோடு சேர்ந்து சாப்பிடுங்கள். அல்லது அவர்களுக்குப் பிடித்தமான விஷயம் பேசும்போது அதில் உங்களுக்குத் தெரிந்ததைக் கூறி உங்களுக்கும் அவர்களுக்குமான மனத்தடையை உடைத்தெறியுங்கள். இப்படி அவர்களோடு போதுமான அளவு நேரம் செலவிட்டால், பிள்ளைகள் உங்களிடம் மனந்திறந்து பேச முன்வருவதைப் பார்ப்பீர்கள்.
கேட்பதும் முக்கியம்
மற்றவர்கள் பேசுவதைக் கூர்மையாகவும் பொறுமையுடனும் கேட்பது ஒரு சிறந்த பழக்கம். உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் இன்னும் பொறுமையைக் கையாளலாம்.
நீங்கள் பொறுமையாகக் கேட்கிறீர்கள் என்று பிள்ளைகளுக்குத் தெரிந்தால்தான் பிள்ளைகள் உங்களிடம் மனந்திறந்து பேசுவார்கள். நீங்கள் எப்போதும் வேலை வேலை என்று இருந்தால் உங்களிடம் பேசத் தயங்குவார்கள். உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் நல்ல நண்பர்களாகவும் இருக்க வேண்டும்; அப்போதுதான் வெளிப்படையாகப் பேசுவார்கள்.
“என்னை உன் ஃப்ரெண்டு மாறி நினைச்சுக்கோ, எதுவா இருந்தாலும் சொல்லு” என்று உதட்டளவில் சொன்னால் மட்டும் போதாது. அவர்கள் ஒரு பிரச்சினையைப் பற்றிச் சொல்லும்போது அதை அசட்டை செய்யாமல், அவர்களுடைய இடத்தில் உங்களை வைத்துப் பார்க்க வேண்டும். அதேபோல், பிள்ளைகள் விஷயத்தைச் சொல்லி முடிப்பதற்குள் உணர்ச்சிவசப்படாதீர்கள்.
பண்டிகைக் காலம்போல எப்போதோ ஒருமுறை பிள்ளைகளோடு மனம் திறந்து பேசுவது பலன் அளிக்காது. அவர்களுடன் அடிக்கடி பேசும்போது அவர்களுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அழமாகவும் அவர்களது பிரச்சினைகளின் வேரையும் புரிந்துகொள்ள முடியும். அப்படிப் புரிந்துகொண்டால்தான் சரியான தீர்வை எடுக்க அவர்களுக்கு நீங்கள் உதவ முடியும்.
மேய்ச்சல் நிலம்
நீங்கள் நல்ல மேய்ப்பர் என்றால் உங்கள் ஆடுகளாகிய அன்புப் பிள்ளைகள் எத்தகைய மேய்ச்சல் நிலத்தில் இளைப்பாறிவருகிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்க வேண்டும். மேய்ச்சல் நிலம் ஆபத்துக்கள் நிறைந்ததாக இருந்தால் மந்தையிலுள்ள ஆடு தொலைந்துபோக வாய்ப்பிருக்கிறது என்று ஒரு மேய்ப்பனுக்கு நன்றாகத் தெரியும்.
ஒரு ஆடு, சற்று தூரத்தில் இருக்கும் பசுமையான இடத்தைப் பார்த்து, அங்கிருக்கும் புல்லை மேய்வதற்குச் சென்றுவிடலாம். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வழிமாறிப் போய்விடலாம். அதேபோல், பிள்ளைகளும் கொஞ்சம் கொஞ்சமாகப் பரலோகத் தந்தையை விட்டு விலகிப்போவதற்கு வாய்ப்பிருக்கிறது. “கெட்ட சகவாசமோ, மோசமான பொழுதுபோக்கோ அவர்களைத் தவறாக வழிநடத்திவிடும்” என்கிறது நீதிமொழி.
தேவையான ஆயுதம்
உங்கள் பிள்ளைகள் தவறான வழியில் போகிறார்கள் என்று தெரிந்தால் உடனடியாக அவர்களுக்கு உதவுங்கள். இதற்கு, குடும்பமாக வழிபாடு செய்வது மிகவும் உதவும். உங்கள் வீட்டில் நீங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து விவிலியத்தை வாசித்து பரலோகத் தந்தையை ஆராதனை செய்யும் குடும்ப வழிபாடு தவறாமல் நடக்கிறதா?
நடக்கிறதென்றால் உங்கள் குடும்பத்தாரோடு நீங்கள் ஒன்று கலக்க அங்கே நேரம் அமையும். உங்களை உங்கள் பிள்ளைகள் குடும்பத் தலைவராக அங்கீகரிப்பார்கள். உங்கள் பேச்சைக் கேட்பார்கள். நீங்கள் மேய்ப்பனாக மாறுவீர்கள்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago