தீன் கூறி நிற்பார் கோடி

By ப.அவுரங்கசீப்

தமிழ் சித்தர் மரபில் வந்தவராகப் போற்றப்படுபவர் ஞானவள்ளல் சூஃபி மெய்ஞானி குணங்குடி மஸ்தான் சாஹிப். அவர் தனது இளம் வயதில் திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் மலையிலும், சதுரகிரி, புறாமலை, நாகமலை, யானைமலை போன்ற இடங்களில் யோக நிட்டையில் ஆழ்ந்து ஞானம் கைவரப் பெற்றார்.

ஒரு முறை குணங்குடியார் தஞ்சைக்குச் சென்ற போது, தஞ்சை மன்னன் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டுத் தனது மாளிகையில் விருந்தளித்தார். அங்கு நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. அழகிய பெண்களின் நடனத்தை குணங்குடியாரும் ரசித்தார். அப்போது தற்செயலாக குணங்குடியாரின் கண்களைப் பார்த்த அரசனுக்கு வியப்பு ஏற்பட்டது. குணங்குடி மஸ்தானின் கண்களில் உலகமாதா நடனமாடிக் கொண்டிருந்த காட்சியைக் கண்டார் மன்னர். தான் சமாதி நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகக் கூறி அங்கிருந்து குணங்குடி அகன்றார்.

கரிய நிறமும் கமல முகமும் அருள் சுரக்கும் கண்களும் கலைந்த முடியும் கக்கத்தில் கம்பளிப் போர்வையும் கொண்டு தெய்வீகக் காதல் போதையில் பித்தனாகி உலகநடை நீங்கிப் பித்தநடை நடக்கத் தொடங்கினார்.

காடுகளில் தங்கியுள்ளபோது, மரக்கிளைகளில் வௌவால் போல் தலைகீழாகத் தொங்கிய நிலையில் யோக நிட்டையில் ஆழ்ந்திருப்பார். இதனைக்கண்ட மக்கள் அவரை மஸ்தான்சாமி என்றழைத்தனர். மஸ்தான் என்ற பாரசீகச் சொல்லுக்கு இரண்டறக் கலத்தல், போதை கொண்டவர் என்று பொருளாகும். அப்புறம்தான் அவர் மஸ்தான் சாமி என்று வணங்கப்பட்டார்.

குணங்குடி அவர்கள் நாகூருக்குச் சென்று சாகுல் ஹமீது ஆண்டவரைத் தரிசிக்க இரவு நேரத்தில் சென்றார். பள்ளிவாசல் மூடப்பட்டிருந்தது. கதவருகில் நின்று “ திக்கு திகந்தமும் கொண்டாடியே வந்து தீன் கூறி நிற்பார் கோடி” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவுடன் கதவு தானாகவே திறந்து வழிவிட்டதாக நம்பிக்கை உண்டு.

சென்னையில் அவரை எல்லாரும் தொண்டியார் என்று அழைத்தனர். அவர் வாழ்ந்த பகுதி தொண்டியார்பேட்டை என அழைக்கப்பட்டது. திரளான மக்கள் அவரிடம் வந்து வாழ்த்து பெற்றுச் சென்றனர். சமய வேறுபாடில்லாமல் வந்தவர்களுக்கு ஆசிகளையும் அருளுரைகளையும் வழங்கினார். வெறும் கற்கண்டும் பாலும் மட்டும் அருந்தி 12 ஆண்டுகள் உயிர்வாழ்ந்தார். அவருக்கு மதம் கடந்து சீடர்கள் இருந்தனர். தனது மரணத்தை முன்கூட்டியே அவரது நண்பர் நாயகத்தின் கனவில் வந்து தெரிவித்தார் என்று கூறப்படுகிறது. ‘எனது உடல் தோப்பில் உள்ளது’ என்பதே அவர் கனவில் வந்து சொன்ன வாக்கியம். அவர் 1835-ல் உயிர்நீத்தார்.

குணங்குடியார் வாழ்ந்த அப்பகுதி தற்போது தண்டையார்பேட்டையாக உள்ளது. அவரது உடல் அடக்கமான சமாதி, சகல சமய மக்களும் பிரார்த்திக்கும் வழிபாட்டுத் தலமாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

7 mins ago

ஆன்மிகம்

35 mins ago

ஆன்மிகம்

36 mins ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

15 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்