இறைவனின் விஸ்வரூபத்தைக் கண்டு அரசன் திகைத்து நிற்க, அரசனின் உடல் அளவு உருவத்தை எடுத்து நின்ற பூலாநந்தீஸ்வரர், சிவகாமி அம்மையுடன் உடனுறையும் ஆலயம் தேனி மாவட்டத்தில் சின்னமனூரில் அமைந்துள்ளது.
அரசன் இராசசிம்ம பாண்டியன், குறுவடிவம் எடுத்து நின்ற சிவபெருமானை ஆனந்தத்தில் ஆரத்தழுவினான். முகம் புதைத்து அழுதான். சிவலிங்கத்தில் அரசனுடைய முகமண்டலமும், மார்பில் அணிந்திருந்த ஆரமும் அவனது கைக்கடங்களும் தன் திருமேனியின் பதியும் வண்ணம் குழைந்து அருளினார் இறைவன். அந்த அடையாளங்கள் இன்றைக்கும் மூலவரின் மேனியில் தெரிவதாகக் கூறப்படுகிறது.
சிவபெருமாள் பூலா ஆரண்யத்தில் இருந்தமையால் பூலோவணேசா மற்றும் பூலாநந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் என்று தலவரலாறு கூறுகிறது. இக்கோவிலில் பூலா மரம் தல விருட்சமாக உள்ளது. மூலஸ்தனத்தில் நின்று சாமி தரிசனம் செய்யும்போது எந்த இடத்தில் நின்று நாம் வணங்கினாலும் நமது அளவுக்கு அவர் காட்சி அளிப்பார். அதனால் மூலவரை அளவுக்கு அளவானவர் என்றும் ஆணவத்தை அழிப்பவர் எனவும் பக்தர்கள் நம்புகிறார்கள்.
கோவிலின் வரலாறு
எம்மண்டலமும் கொண்டருளிய மாறவர்மன் திரிபுவன சக்ரவர்த்தி முதலாம் குலசேகர வர்மன்(1268 -1303) ஜடாவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டியன், சடைமாறன் ஆகிய பாண்டிய மன்னர்களின் காலத்தில் இத்திருக்கோவிலுக்கு நிலம், பொன், ஆடு முதலியவை தானமாக வழங்கப்பட்ட செய்திகளை இக்கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
மாறவர்மன் குலசேகரின் கல்வெட்டு ஒன்றில் திருப்பூலாந்துரை உடையார் அல்லது இராசசிம்ம சோழீச்சுரமுடையார் என இக்கோவில் குடிகொண்டுள்ள ஈசன் குறிப்பிடப்பட்டுள்ளார்.
1100 ஆண்டுகளுக்கு முற்பட்ட இத்திருக்கோவிலில் தினசரி ஆறு கால பூஜையும், காலை ஆறு மணி முதல் 11.30 வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நடை திறக்கப்படுகிறது. சித்திரை மாதத்தில் தீர்த்தவாரி சித்திரை பெருந்திருவிழா 15நாட்கள் நடைபெறும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago