உலக சுக வாழ்க்கையோ, கடவுளை அறியும் முயற்சியோ மக்களுக்கு உதவியாக எதையும் சாதிக்க கருவிகளாக கண், காது, பேச்சு, பிராணன், மனம் ஆகியவை இருக்கின்றன. மக்கள் நினைத்தபடி அவை தம்மிச்சைப்படி பல சமாச்சாரங்களிலும் பறந்து சென்று இயங்குகின்றன.
`இது ஏன்?’ என்று ஒரு சீடருக்குத் தோன்றியது. தம் குருவைக் கேட்டார்.
“கண் அதன் போக்கில் விருப்பம் போல் அலைகிறதே?
செவி அதன் விருப்பமாய்க் கேட்க ஆவலுறுகிறதே?
மூக்கும் விருப்பமான மணம் முகரவே அலைகின்றதே?
வாயும் கண்டவற்றை விருப்பம் போலப் பேசுகின்றதே?
மனமும் அதனால் அமைதியின்றி அலை பாய்கின்றதே?
இவற்றையெல்லாம் அதனதன் வேலைகளில் ஏவுகின்றவர் யார்?” என்று கேட்டார் சீடர்.
இறைவனைப் பற்றி அறிய வேண்டியதிருக்க, சீடர் உடலிலியங்கும் புலன்களை, மனத்தை, பிராணனைப் பற்றிக் கேட்கிறாரே இவர் என்று நினைத்தார் குரு. பிறகு இவை பற்றிய அறிவு இறைவனை அறிய உதவியாகும் என்றமையும் விதம் பதில் கூறினார். இல்லை எனில் இவை பற்றியே அறியமுடியாதெனில் இறைவனை எங்கே அறிவது? என சீடர் தளர்வுறுவாரல்லவா? இறைவனை அறிய முடியாது என்றறிந்து மோட்சம் பெறும் வண்ணம் உபதேசித்தார்.
“கண்ணுக்குக் கண்ணாய், காதுக்குக் காதாய், இப்படியே மற்ற புலன்களுக்கும் புலன்களாக, மனதையறியும் மனமாய், பிராணனுக்கும் பிராண னாக, அதற்கு இருக்கிறதாகப்படும் சக்தியை அளித்து அவற்றால் அறிய முடியாதபடி பின்னால் இருக்கும் பரமாத்மாவே அவற்றை அவற்றின் வேலைகளில் செலுத்துகின்றவன்” என்றார்.
இந்து மதம்
தொகுப்பாசிரியர்கள்:
அ.வெ.சுகவனேஸ்வரன், ஸ்வாமி, ந.ரா.முருகவேள், ரிஷபானந்தர், பூ.ஜெயராமன், எஸ்.ரகுநாதன் மற்றும் வேதம்
வெளியீடு: கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை,
தியாகராய நகர், சென்னை- 600 017.
தொலைபேசி: 044-2434 5641.
விலை: ரூ.300
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
10 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago