வார ராசி பலன் 22-05-14 முதல் 28-5-14 வரை (துலாம் முதல் மீனம் வரை)

By சந்திரசேகர பாரதி

துலாம்

உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் 9-ல் குருவும் உலவுவதால் நண்பர்களும் உறவினர்களும் உதவிக் கரம் நீட்டுவார்கள். பொருளாதார நிலை உயரும். தொலைதூரத் தொடர்பால் நலம் உண்டாகும். மக்களால் பெற்றோருக்கும் பெற்றோரால் மக்களுக்கும் அனுகூலம் ஏற்படும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். ஜன்ம ராசியில் வக்கிர சனியும் ராகுவும் சுக்கிரன் 6-லும், சூரியன் 8-லும், செவ்வாய் 12-லும் சஞ்சரிப்பதால் உடல்நலனில் கவனம் தேவைப்படும்.

கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் சோதனைகள் சூழும். இயந்திரப் பணியாளர்கள், இன்ஜினீயர்களுக்கு முன்னேற்றம் தடைப்படும். 24-ஆம் தேதி முதல் சுக்கிரன் 7-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகாது. ஆடவர்களுக்குப் பெண்டிரால் சங்கடங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 24, 25. l திசைகள்: வடக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: பச்சை, பொன் நிறம். l எண்கள்: 3, 5.

பரிகாரம்: மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திரம், காயத்ரி படிக்கவும். ஏழைப் பெண்களுக்கு உதவி செய்யவும்.



விருச்சிகம்

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11-ஆமிடத்திலும், சுக்கிரன் 5-லும், கேது 6-லும், சனி 12-ல் வக்கிரமாகவும் உலவுவது சிறப்பாகும். புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். நண்பர்கள் உதவுவார்கள். கலைத் துறையினருக்கு வரவேற்பு கிட்டும். செந்நிறப் ருட்களால் ஆதாயம் கிடைக்கும். மனத் தெளிவும் தன்னம்பிக்கையும் பிறக்கும்.

24-ஆம் தேதி முதல் சுக்கிரன் 6-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. ஆடவர்களுக்குப் பெண்டிரால் சங்கடம் உண்டாகும். மருத்துவச் செலவுகள் சற்று அதிகரிக்கும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் எச்சரிக்கை தேவை. கோபப்படாமல் நிதானமாகப் பேசிப் பழகுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 24, 25, 26. l திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, மெரூன், சிவப்பு. l எண்கள்: 6, 7, 9.

பரிகாரம்: அந்தணர்களுக்கும் வேத விற்பன்னர்களுக்கும் உதவுவது நல்லது. தட்சிணாமூர்த்தியையும், துர்கையையும் தொடர்ந்து வழிபடவும்.



தனுசு

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும் 6-ல் சூரியனும் புதனும் 7-ல் குருவும் 10-ல் செவ்வாயும், 11-ல் சனி, ராகு ஆகியோரும் உலவுவதால் நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் வருவாயும் கிடைக்கும். எதிரிகள் ஒளிவார்கள்.

வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். நிறுவன, நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வளர்ச்சி . பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு வாய்ப்புக் கூடிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 24, 25. l திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு, மேற்கு, வடகிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: நீலம், சிவப்பு, ஆரஞ்சு, பொன் நிறம். l எண்கள்: 7-ஐத் தவிர இதர எண்கள்.

பரிகாரம்: கணபதி ஜப, ஹோமம் செய்யவும். பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடவும்.



மகரம்

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் உலவுவதால் குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பண வரவு சற்று கூடும். கேளிக்கைகளில் ஈடுபாடு கூடும். போட்டிகளில் வெற்றி கிட்டும். நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். பயணம் சம்பந்தப்பட்ட இனங்கள் லாபம் தரும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்களால் ஆதாயம் கிடைக்கும். பெற்றோர் நலனிலும் மக்கள் நலனிலும் அக்கறை தேவைப்படும்.

உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோர் தங்கள் பொறுப்புக்களைச் சரிவர ஆற்றிவருவதன் மூலம் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். 24-ஆம் தேதி முதல் சுக்கிரன் 4-ஆமிடம் மாறுவதால் புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும்.

அதிர்ஷ்டமான தேதி: மே 24, 25. l திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, கறுப்பு. l எண்கள்: 4, 6.

பரிகாரம்: கணபதியை வழிபடவும். குருப் பிரீதி செய்வது நல்லது. பெரியவர்களிடம் பணிவு தேவை.



கும்பம்

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும், 3-ல் கேதுவும், 4-ல் புதனும் 5-ல் குருவும் உலவுவதால் முக வசீகரம் கூடும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். விருந்து விழாக்களில் கலந்துகொள்வீர்கள். பண நடமாட்டம் திருப்திகரமாக இருந்துவரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். பெற்றோராலும் மக்களாலும் அனுகூலம் உண்டாகும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சேரும். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும்.

நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். மகப்பேறு பாக்கியம் கிடைக்கும். மருத்துவர்கள் நற்பெயர் பெறுவார்கள். விஞ்ஞானிகளுக்கு வரவேற்பு கூடும். 24-ஆம் தேதி முதல் சுக்கிரன் 3-ஆமிடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். செவ்வாய் 8-ல் இருப்பதால் எதிலும் அவசரம் கூடாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 24, 25, 26. l திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, வடக்கு.

நிறங்கள்: மெரூன், பொன் நிறம், இளநீலம், வெண்மை, பச்சை.

எண்கள்: 3, 5, 6, 7.

பரிகாரம்: வேலவனை வழிபடவும். ஏழை, எளியவர்களுக்கும் வயோதிகர்களுக்கும் உதவி செய்யவும்.



மீனம்

உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 3-ல் சூரியனும் உலவுவதால் தோற்றப் பொலிவு கூடும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். மாதர்களது நிலை உயரும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். ஜலப் பொருட்கள் லாபம் தரும். அரசியல் வாதிகளுக்கும் அரசுப் பணியாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். முக்கியஸ்தர்கள் தொடர்பு பயன்படும்.

மாணவர்கள், பேச்சாளர்கள், இயந்திரப் பணியாளர்கள், போக்குவரத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் சோதனைகள் அதிகமாகும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. 24-ஆம் தேதி முதல் சுக்கிரன் 2-ஆமிடம் மாறுவதால் பண வரவு சற்று அதிகரிக்கும். என்றாலும் குடும்பத்தில் அமைதி காண அரும்பாடுபட வேண்டிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 24, 25, 28. l திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, ஆரஞ்சு.. ,

எண்கள்: 1, 6.

பரிகாரம்: நவக்கிரக காயத்ரி, ஸ்லோகம், அஷ்டோத்திரம் சொல்வது நல்லது. .கோளறு திருப்பதிகம் வாசிக்கவும். ஏழைகளுக்கு உதவி செய்யவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்