ஆன்மிக நூலகம்: சரணாகதிக்கு உரிய நேரம்

By செய்திப்பிரிவு

சரணாகதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வைணவன், திருமாலும் திருமகளும் சேர்ந்திருக்கும் சமயத்தில் சரணாகதி செய்ய வேண்டும் என்றும், எப்படி ஒரு சாதாரண தாயானவள் தன் குழந்தை செய்த தவறைக் கணவரிடம் கூறும்போது, மிகச் சின்ன குறைதான் என்று எடுத்துச் சொல்லி கணவரின் கோபத்துக்குக் குழந்தை ஆளாகாமல் பார்த்துக்கொள்வாளோ, அதைப் போல லோகநாயகியான பிராட்டியும் திருமாலிடம், நம்மைப்பற்றிக் கூறும்போது, நாம் செய்த தீவினைகள் கடுகளவுதான் என்றும் நாம் செய்த சிறியதான நல்ல காரியத்தை, மலையளவாகப் பெரிசுபடுத்திச் சொல்லி, திருமாலின் திருவருள் நமக்குக் கிடைக்க வழி செய்வாளாம்.

இதற்கு உதாரணமாக, சரணாகதி சாஸ்திரம் என்று புகழப்படும் ஸ்ரீராமாயணத்தில், சீதாராமன் வனவாசத்தில் இருந்தபோது, சீதாப் பிராட்டிக்குத் துன்பம் விளைவித்த காகாசுரன் உயிர் தப்பினான்.

ஆனால் சீதையையும் ராமனையும் பிரித்த ராவணன் அழிந்தான். எனவே, திருமகளை முன்னிட்டு சரணாகதி அடைந்தவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று பராசரப் பட்டர் அருளிச் செய்துள்ளார்.

(‘பெருமாள் கோயில்களில் பெருமைமிகு விழாக்கள்’ நூலிலிருந்து ஒரு பகுதி)

பெருமாள் கோயில்களில் பெருமைமிகு விழாக்கள்,

எம்.என். ஸ்ரீநிவாசன், விலை: ரூ.125,

வெளியீடு: சூரியன் பதிப்பகம், 229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர்,

சென்னை- 600 004. தொலைபேசி: 044-4220 9191.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

9 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்