மேஷ ராசி வாசகர்களே!
உங்கள் ராசிநாதன் செவ்வாய் சூரியனுடன் கூடி ஜன்ம ராசியில் வலுத்திருக்கிறார். சுக்கிரன் இரண்டிலும் , ராகு ஆறிலும் உலவுவதும் சிறப்பாகும். வார ஆரம்பத்தில் நல்ல தகவல் வந்து சேரும். முயற்சி வீண்போகாது. நண்பர்களாலும் உறவினர்களாலும் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். சொத்துக்கள் வாங்க வாய்ப்புக் கூடிவரும். தொழிலில் வளர்ச்சி காணலாம். புதிய பதவிகள், பட்டங்கள் சிலருக்குக் கிடைக்கும். வாரக் கடைசியில் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்பு கூடிவரும்.
26-ம் தேதி முதல் புதன் இரண்டாமிடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு மந்த நிலை விலகும். கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகள் ஆக்கம் தரும். அயல்நாட்டுத் தொடர்பு வலுப்பெறும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் அனுகூலமான போக்கு நிலவிவரும். மக்களால் நலம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 25, 28, 29.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, கிழக்கு..
நிறங்கள்: புகை நிறம், சிவப்பு, இளநீலம்.
எண்கள்: 1, 4, 6, 9.
பரிகாரம்: அஷ்டமச் சனிக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்துகொள்வது நல்லது.
ரிஷப ராசி வாசகர்களே!
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பலம் பெற்றிருக்கிறார். 11-ல் கேது உலவுவதும் சிறப்பாகும். குடும்ப நலம் சிறப்பாக இருந்துவரும். எதிர்ப்புக்களைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். கலைத் துறையினருக்குப் புகழும் பொருளும் சேரும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். குரு மூன்றிலும் ராகு ஐந்திலும், சூரியன், செவ்வாய் ஆகியோர் 12-லும் இருப்பதால் பொருளாதார நிலை சாதாரணமாகவே காணப்படும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். கெட்டவர்களின் தொடர்பு அடியோடு கூடாது.
26-ம் தேதி முதல் புதன் ஜன்ம ராசிக்கு மாறுவது சிறப்பாகாது. என்றாலும் சுக்கிரனுடன் கூடுவதால் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். எரிபொருள், மின்சாரம், ஆயுதங்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. அரசுப் பணியாளர்கள், அரசியல்வாதிகள், பொறியியல் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றம் காணக் குறுக்கீடுகள் முளைக்கும். எதிலும் யோசித்து ஈடுபடுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 25, 28, 29.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம்.
எண்கள்: 6, 7.
பரிகாரம்: குருவுக்கும் ராகுவுக்கும் பிரீதி, பரிகாரங்களைச் செய்துகொள்வது நல்லது. பெரியவர்களிடம் பணிவுடன் பழகவும்.
மிதுன ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு இரண்டில் குருவும், ஆறில் சனியும், பத்தில் கேதுவும் 11-ல் சூரியனும் செவ்வாயும் புதனும் 12-ல் சுக்கிரனும் உலவுவதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல்நலம் சீராகும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றிவருவீர்கள். பேச்சில் திறமை வெளிப்படும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் அனுகூலம் உண்டாகும். முக்கியப் பதவிகளும் பட்டங்களும் தேடிவரும்.
அரசியல்வாதிகளுக்குச் செல்வாக்கு அதிகரிக்கும். அரசுப் பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். நிர்வாகத் திறமை வெளிப்படும். தொழிலாளர்களுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். இயந்திரப் பணியாளர்களுக்கும் இன்ஜினீயர்களுக்கும் வருமானம் அதிகமாகும். முக்கியமான எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். 26-ம் தேதி முதல் புதன் 12-ம் இடத்திற்கு மாறுவதால் இடமாற்றம் உண்டாகும். வெளிநாடு செல்ல சிலருக்கு வாய்ப்புக் கூடிவரும். வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 25, 28, 29.
திசைகள்: கிழக்கு, தெற்கு, வடக்கு, தென்கிழக்கு, வ்டகிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, ஆரஞ்சு, பொன் நிறம், பச்சை, நீலம்.
எண்கள்: 1, 3, 5, 6, 7, 8, 9.
பரிகாரம்: துர்க்கைக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும். துர்கா கவசம் சொல்வது நல்லது.
கடக ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 10-ல் சூரியனும் செவ்வாயும் புதனும் 11-ல் சுக்கிரனும் உலவுவதால் வார ஆரம்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். வார நடுப்பகுதியில் முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். ஜலப் பொருட்கள், வெண்மையான பொருட்கள், கடலிலிருந்து கிடைக்கும் பொருட்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோருக்கு அனுகூலம். வாரப் பின்பகுதியில் பண நடமாட்டம் அதிகரிக்கும்.
அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். முக்கியஸ்தர்களின் தொடர்பு பயன்படும். தொழில் விருத்தி அடையும். புதிய பதவி, பட்டங்கள் சிலருக்குக் கிடைக்கும். எரிபொருள், மின்சாரம், இயந்திரம், நிலபுலங்கள் ஆகியவற்றால் ஆதாயம். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். பெண்களுக்கு மன உற்சாகம் கூடும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். புதிய பொருட்களும் சொத்துக்களும் சேரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 25 (பிற்பகல்), 28, 29.
திசைகள்: தெற்கு, கிழக்கு, தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு..
நிறங்கள்: சிவப்பு, புகை நிறம், இளநீலம், பச்சை, ஆரஞ்சு
எண்கள்: 1, 4, 5, 6, 9.
பரிகாரம்: சனிக்கும் கேதுவுக்கும் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபடவும்.
சிம்ம ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 9-ல் சூரியனும் செவ்வாயும் 10-ல் சுக்கிரனும் உலவுவதால் முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். முக்கியஸ்தர்களது தொடர்பு பயன்படும். தொலைதூரத் தொடர்பு ஆக்கம் தரும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் அபிவிருத்தி காணலாம். தெய்வப் பணிகள் நிறைவேறும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிட்டும்.
அரசு ஆதரவு பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்த வாய்ப்பு கிடைக்கும். சுப காரியங்களுக்குச் செலவாகும். இடமாற்றம், நிலைமாற்றம் ஏற்படும். அலைச்சலும் உழைப்பும் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். தாய் நலனில் கவனம் தேவை. 26-ஆம்தேதி முதல் புதன் 10-ஆமிடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு முன்னேற்றமான பாதை தெரியவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 25, 28, 29. .
திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, கிழக்கு.
நிறங்கள்: இளநீலம், சிவப்பு, ஆரஞ்சு.
எண்கள்: 1, 6, 9.
பரிகாரம்: சனி, ராகு, கேது ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும். வேதம் படித்தவர்களுக்கு உதவுவது நல்லது.
கன்னி ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 8-ல் புதனும் 9-ல் சுக்கிரனும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். சொத்துக்கள் லாபம் தரும். வாழ்க்கைத் துணையால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். கூட்டாளிகள் உதவுவார்கள். தொலைதூரத்தொடர்பு பயன்படும். பொன் நிறப்பொருட்கள் லாபம் தரும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மதபோதகர்கள், ஆன்மிகவாதிகள், கலைஞர்கள், வியாபாரிகள், தொழிலாளர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும்.
வாரக் கடைசியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். 26-ஆம் தேதி முதல் புதன் 9-ஆமிடம் மாறுவது கோசாரப்படி சிறப்பாகாது என்றாலும் சுக்கிரனுடன் சேருவது சிறப்பாகும். தான, தருமம், தெய்வப்பணிகளில் ஈடுபாடு கூடும். சூரியன், செவ்வாய், ராகு, கேது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் சிறுசிறு இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 25, 29.
திசைகள்: மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 6, 8.
பரிகாரம்: சூரியன், செவ்வாய், ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்துவருவது நல்லது. நாக வழிபாடு மூலம் சங்கடம் குறையும். கோபப்படாமல் பேசிப் பழகுவது நல்லது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
7 hours ago
ஆன்மிகம்
8 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago