துலாம்
உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் 9-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். மனத்துக்கினிய சம்பவங்கள் நிகழும். மூத்த சகோதர, சகோதரிகளால் ஓரளவு நலம் உண்டாகும். வியாபாரம், கணிதம், எழுத்து, விஞ்ஞானம், ரசாயனம், மருத்துவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னேறுவார்கள். தொலைதூரத் தொடர்பு நலம் தரும். தொழில் திட்டங்களை நிறைவேற்றச் செலவு செய்வீர்கள். ஜன்ம ராசியில் வக்கிர சனியும், ராகுவும், 6-ல் சுக்கிரனும் உலவுவதால் அலைச்சல் அதிகமாகும்.
உடல்நலம் பாதிக்கும். 7-ல் சூரியனும் கேதுவும், 12-ல் செவ்வாயும் இருப்பதால் பிறரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு தேவை. எதிரிகள் இருப்பார்கள் என்பதால் யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழகலாகாது. குடும்பத்தில் உள்ளவர்களே உங்களுக்கு எதிராகச் செயல்படுவார்கள்; குரு பலம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள்.
l அதிர்ஷ்டமான தேதிகள்: மே 9, 14. l திசைகள்: வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: பச்சை, பொன் நிறம். l எண்கள்: 3, 5.
பரிகாரம்: . முருகனையும், ஆஞ்சநேயரையும் வழிபடவும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்யவும்.
விருச்சிகம்
ராசிநாதன் செவ்வாய் 11-ம் இடத்தில் உலவுவது சிறப்பாகும். சூரியன், சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். மனத் துணிவு கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும்.
செந்நிறப் பொருட்கள் லாபம் தரும். அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்கள், நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கு அனுகூலம் ஏற்படும். போட்டிகளிலும் வழக்கு வியாஜ்ஜியங்களிலும் வெற்றி கிட்டும். வாரப் பின் பகுதியில் சந்திரன் 12-ம் இடம் மாறி, வக்கிர சனியுடனும் ராகுவுடன் கூடுவதால் எதிர்பாராத செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்வது நல்லது. சிக்கன நடவடிக்கை அவசியம்.
l அதிர்ஷ்டமான தேதிகள்: மே 11, 12. l திசைகள்: கிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, இளநீலம், வெண்மை, மெரூன், சிவப்பு. l எண்கள்: 1, 6, 7, 9.
பரிகாரம்: குரு, ராகு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைத் தொடர்ந்து செய்வது நல்லது. தட்சிணாமூர்த்தியையும் துர்கையையும் வழிபடவும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருக்கவும்.
தனுசு
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும், 6-ல் புதனும், 7-ல் குருவும், 10-ல் செவ்வாயும், 11-ல் சனி, ராகு ஆகியோரும் உலவுவது சிறப்பாகும். 5-ல் சூரியன் தன் உச்ச ராசியில் இருப்பதால் நலம் புரிவார். செல்வாக்கும் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். சுப காரியங்கள் நிகழும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். காரியத்தில் வெற்றி கிட்டும்.
கலைத் துறையினருக்கும் மாதர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவும். பொருள் வரவு கூடும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிட்டும். பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் உதவுவார்கள். வியாபாரம் பெருகும். வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். முக்கியமான எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். சுபிட்சம் கூடும்.
l அதிர்ஷ்டமான தேதிகள்: மே 11, 12, 14. l திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு, மேற்கு, வடகிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: நீலம், சிவப்பு, ஆரஞ்சு, பொன் நிறம். l எண்கள்: 7-ஐத் தவிர இதர எண்கள்.
பரிகாரம்: கணபதி ஜப, ஹோமம் செய்வது நல்லது. பிள்ளையாருக்கு ரோஜா மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
மகரம்
உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும், 10-ல் ராகுவும் உலவுவதால் கலைத் துறையினருக்கு வாய்ப்புகள் கூடிவரும். பயணம் சம்பந்தமான இனங்களால் ஆதாயம் கிடைக்கும். 4-ல் சூரியனும் கேதுவும் இருப்பதாலும், 9-ல் செவ்வாய் வக்கிரமாகவும் இருப்பதால் அலைச்சல் கூடும். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. 5-ல் புதனும் 6-ல் குருவும் இருப்பதால் மக்களால் பிரச்னைகள் சூழும்.
பொருளாதாரம் தொடர்பாக விழிப்புத் தேவை. சுப காரியங்களுக்குக் குறுக்கீடுகள் உண்டாகும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக வேண்டிவரும். தொழிலில் முழுக்கவனம் செலுத்துவது நல்லது. 10-ம் தேதி முதல் செவ்வாய் வக்கிர நிவர்த்தி பெற்று, நேர்கதியில் 9-ம் இடத்தில் உலவுவதும் சிறப்பாகாது. வாரப் பின் பகுதியில் சந்திரன் 10-ம் இடம் மாறுவதால் பண வரவு சற்று அதிகரிக்கும். முக்கியமானதொரு காரியம் நிறைவேறும்.
l அதிர்ஷ்டமான தேதிகள்: மே 13, 14. l திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: இளநீலம், வெண்மை, கறுப்பு. l எண்கள்: 4, 6.
பரிகாரம்: சுப்பிர மணியரை வழிபடவும். இளைஞர்களுக்கு உதவி செய்யவும்.
கும்பம்
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும், 3-ல் சூரியனும் கேதுவும், 4-ல் புதனும், 5-ல் குருவும் உலவுவதால் குடும்ப நலம் திருப்தி தரும். வாழ்க்கைத் துணையால் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். நல்லவர் தொடர்பு நலம் சேர்க்கும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். அரசுப் பணியாளர்கள் நோக்கம் நிறைவேறும். ஆன்மிகவாதிகள் மதிப்பு உயரும். கணிதம், எழுத்து, பத்திரிகை, விஞ்ஞானத் துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். பேச்சில் இனிமையும் திறமையும் வெளிப்படும்.
விருந்து உபசாரங்களிலும்; கேளிக்கை, உல்லாசங்களிலும் ஈடுபாடு உண்டாகும். புதிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். அலுவலகப் பணியாளர்கள், ஆசிரியர்கள், கல்வித் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு செழிப்பான சூழ்நிலை நிலவும். 8-ல் செவ்வாய் இருப்பதால் சிறு விபத்து ஏற்படும். அவசரப்படாமல் நிதானமாகச் செயல்படுவது அவசியம். சகோதர நலனில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 9, 14. l திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: மெரூன், பொன் நிறம், இளநீலம், வெண்மை, பச்சை, ஆரஞ்சு. l எண்கள்: 1, 3, 5, 6, 7.
பரிகாரம்: கந்தனை வழிபடவும். கந்தசஷ்டி கவசம், சண்முக கவசம் படிப்பது நல்லது.
மீனம்
ஜன்ம ராசியில் சுக்கிரன் உலவுவதால் பொருள்வரவு கூடும். உற்சாகம் பெருகும். கலைத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வெற்றி கிட்டும். பெண்களுக்கு அனுகூலமான சூழ்நிலை உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் சேரும். எதிரிகள் அடங்குவார்கள். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் குடும்பத்தில் சலசலப்புகள் இருக்கும்.
வியாபாரிகள் அகலக் கால் வைக்கலாகாது. பிறரது மனம் புண்படாமல் நிதானமாகப் பேசவும். பயணத்தால் அனுகூலமிராது. புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வீண்வம்பு வழக்குகளைத் தவிர்க்கவும். வாரப் பின் பகுதியில் சந்திரன் 8-ம் இடம் மாறி, வக்கிர சனியோடும் ராகுவோடும் கூடுவதால் சோதனைகள் அதிகரிக்கும். மக்களால் பிரச்னைகள் ஏற்படும். கெட்டவர்களின் தொடர்பு அடியோடு கூடாது. ஜனன ஜாதகம் வலுத்திருக்குமானால் கவலைப்படத் தேவையில்லை.
l அதிர்ஷ்டமான தேதிகள்: மே 11, 12 (பகல்). l திசை: தென்கிழக்கு.
நிறங்கள்: இளநீலம், வெண்மை. l எண்: 6.
பரிகாரம்: கணபதி, துர்கா, நவக்கிரக ஜப, ஹோமம் செய்வது நல்லது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
21 hours ago
ஆன்மிகம்
12 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago