மேஷ ராசி வாசகர்கள்
உங்கள் ராசிநாதன் செவ்வாய் வலுத்திருக்கிறார். சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் கலந்துகொள்வீர்கள். பேச்சில் இனிமை கூடும். வசீகரச் சக்தி உண்டாகும்.
கணவன் மனைவி இடையே நல்லுறவு நீடிக்கும். 14-ம் தேதி முதல் சூரியன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதால் உஷ்ணாதிக்கம் கூடும். 15-ம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெறுவதால் நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகள் சேரும். தொழிலில் சீரான வளர்ச்சி காண வழிபிறக்கும். ஞான மார்க்கத்தில் ஈடுபாடு உண்டாகும். அஷ்டமச் சனியைக் குரு பார்க்கும் நிலை அமைவதால் தொல்லைகளும், பிரச்சினைகளும் குறையும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 10. 14, 15.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: புகை நிறம், சிவப்பு, இளநீலம்.
எண்கள்: 4, 6, 9.
பரிகாரம்: சனிப் பிரீதி செய்வது நல்லது.
ரிஷப ராசி வாசகர்கள்
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பலம் பெற்றிருக்கிறார். 3-ல் வக்கிர குருவும், 11-ல் சூரியனும், கேதுவும் உலவுவது சிறப்பாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும் நேரமிது. புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றின் சேர்க்கை நிகழும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள்.
வசீகரச் சக்தி கூடும். கால் நடைகளால் ஆதாயம் கிடைக்கும். பண்ணை வைத்து நடத்துபவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். 14-ம் தேதி முதல் சூரியன் 12-மிடம் மாறி செவ்வாயுடன் கூடுவது சிறப்பாகாது. உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். கண் உபத்திரவம் உண்டாகும். 15-ம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெற்று 3-ல் உலவுவதும் சிறப்பாகாது. பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 14, 15.
திசைகள்: வடமேற்கு, கிழக்கு, தென்கிழக்கு..
நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம், ஆரஞ்சு..
எண்கள்: 1, 3, 6, 7.
பரிகாரம்: பராசக்தியை வழிபடவும். நரசிம்மரை வழிபடுவதும் நல்லது.
மிதுன ராசி வாசகர்கள்
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 6-ல் சனியும், 10-ல் சூரியனும் கேதுவும் 11-ல் செவ்வாயும் புதனும் 12-ல் சுக்கிரனும் உலவுவதால் எதிர்ப்புகள் விலகும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பொதுப் பணியாளர்கள் போற்றப்படுவார்கள். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். பிரச்சினைகள் எளிதில் தீரும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். பண நடமாட்டம் திருப்தி தரும்.
திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். 14-ம் தேதி முதல் சூரியன் 11-மிடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். தந்தையாலும் உடன்பிறந்தவர்களாலும் நலம் ஏற்படும். 15-ம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெறுவதால் குடும்பத்தில் நல்ல காரியங்கள் நிகழும். பொருளாதார நிலை உயரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். நல்லவர்களின் தொடர்பு கிட்டும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 10, 14 (பிற்பகல்), 15.
திசைகள்: தென்மேற்கைத் தவிர இதர திசைகள் சிறப்பானவை.
நிறங்கள்: பச்சை, நீலம்.
எண்கள்: 1, 3, 5, 6, 7, 8, 9.
பரிகாரம்: விஷ்ணு துர்கையை வழிபடவும்.
கடக ராசி வாசகர்கள்
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 10-ல் செவ்வாயும் புதனும் 11-ல் சுக்கிரனும் உலவுவதால் எதிர்ப்புகள் விலகும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். புதியவர்களது தொடர்பு பயன்படும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்புக் கூடிவரும். வியாபாரிகள் வளர்ச்சி காண்பார்கள்.
கலைத் துறையினருக்கு சுபிட்சம் கூடும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகள் சேரும். 14-ம் தேதி முதல் சூரியன் 10-ஆமிடம் மாறி, வலுப்பெறுவதால் தொழிலில் நல்ல வளர்ச்சி காணலாம். தந்தை நலம் சீர்பெறும். 15-ம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெறுவதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 10, 13.
திசைகள்: தெற்கு, தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு..
நிறங்கள்: சிவப்பு, புகை நிறம், இளநீலம், பச்சை.
எண்கள்: 4, 5, 6, 9.
பரிகாரம்: சனிபகவானுக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும்.
சிம்ம ராசி வாசகர்கள்
உங்கள் ராசிக்கு 9-ல் செவ்வாயும் 10-ல் சுக்கிரனும் உளவுவது கோசாரப்படி சிறப்பாகாது என்றாலும் தர்ம கர்மாதிபதிகள் வலுத்திருப்பதால் நலமே உண்டாகும். சுப காரியங்கள் நிகழும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும். மாதர்களது நிலை உயரும். 14-ம் தேதி முதல் சூரியன் 9-மிடம் மாறினாலும் செவ்வாயுடனும் புதனுடனும் கூடுவதால் தொலைதூரத் தொடர்பு பயன்படும்.
நற்காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். 15-ம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெற்று 12-ல் உலவுவது சிறப்பாகாது. மக்கள் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். இடமாற்றம் உண்டாகும். 4-ல் சனி இருப்பதால் அலைச்சலும் உழைப்பும் அதிகரிக்கவே செய்யும். நண்பர்கள், உறவினர்களால் தொல்லைகள் சூழும். தாய் நலனில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்.10, 14, 15.
திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: இளநீலம், பொன் நிறம்.
எண்கள்: 3, 6, 9.
பரிகாரம்: சூரிய வழிபாடு அவசியமாகும். சர்ப்ப சாந்தியும் செய்து கொள்ளுங்கள், அர்த்தாஷ்டம சனிக்கும் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது.
கன்னி ராசி வாசகர்கள்
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 8-ல் புதனும் 9-ல் சுக்கிரனும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். நல்ல தகவல் வந்து சேரும். சமுதாய நல முன்னேற்றப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். ஜன்ம ராசியில் ராகுவும் 7-ல் சூரியனும் கேதுவும் 8-ல் செவ்வாயும் உலவுவதால் உடல்நலனில் கவனம் தேவை. அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்கள், இன்ஜினீயர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்பட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம்.
14-ம் தேதி முதல் சூரியன் 8-மிடம் மாறுவதும் சிறப்பாகாது. தந்தை நலனில் கவனம் தேவை. 15-ம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெற்று 11-மிடத்தில் பலம் பெற்று உலவும் நிலை அமைவதால் பொருளாதார நிலை உயரும். நண்பர்கள், உறவினர்கள், கூட்டாளிகள் ஆகியோரால் அனுகூலம் ஏற்படும். ஜலப்பொருட்கள் லாபம் தரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 10, 14, 15.
திசைகள்: மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை, பொன் நிறம்..
எண்கள்: 3, 5, 6, 8.
பரிகாரம்: சூரியன், செவ்வாய், ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைத் தொடர்ந்து செய்வது நல்லது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
2 hours ago
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago