துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், புதன், கேது சஞ்சரிப்பதால் அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். நிர்வாகத்திறமை பளிச்சிடும். எதிர்ப்புகள் குறையும். இஞ்ஜீனியர்களது நோக்கம் நிறைவேறும். 2-ல் சனி, 7-ல் செவ்வாய், சுக்கிரன் உலவுவதால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் சூழும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
விட்டுக் கொடுத்துப் பழகுவது அவசியம். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. 12-ல் ராகு இருப்பதால் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. முக்கியமானதொரு எண்ணம் நிறைவேறும். 6-ம் தேதி முதல் புதன் 7-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. 7-ம் தேதி முதல் சுக்கிரன் 8-ம் இடம் மாறி வலுப்பெறுவதால் கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்.6, 8.
திசைகள்: கிழக்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, மெரூன், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 5, 7.
பரிகாரம்: துர்கைக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசி அதிபதி செவ்வாய் 6-ல் உலவுவது சிறப்பு. 9-ல் குரு, 11-ல் ராகு சஞ்சரிப்பதால் தொழிலில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். பொருளாதார நிலை உயரும். இயந்திரப்பணியாளர்கள், இஞ்ஜீனியர்களுக்கு வெற்றிகள் குவியும். பயணத்தால் முக்கியமானதொரு எண்ணம் ஈடேறும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும்.
போக்குவரத்துச் சாதனங்கள், கறுப்பு நிறப்பொருட்கள், தோல் பொருட்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வாரப் பின்பகுதியில் செலவுகள் சற்று அதிகரிக்கும். சுக்கிர பலம் குறைந்திருப்பதால் வீண் செலவுகள் ஏற்படும். கலைஞர்கள் பொறுப்புடன் காரியமாற்றுவது நல்லது. பிள்ளைகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். குரு பலத்தால் அவை விலகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 3, 8.
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தெற்கு.
நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், பொன் நிறம், சிவப்பு.
எண்கள்: 3, 4, 9.
பரிகாரம்: ஸ்ரீ மகாலட்சுமியை வழிபடவும். ஏழைப் பெண்களுக்கு உதவவும். சுமங்கலி பூஜை செய்வது நல்லது.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் புதனும், 5-ல் சுக்கிரனும், 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. செவ்வாய் 5-ல் சொந்த வீட்டில் உலவுவதால் நலம் புரிவார். கணிதம், விஞ்ஞானம், வியாபாரம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகள் லாபம் தரும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். கலைஞர்களுக்கு சுபிட்சம் கூடும். பயணத்தால் ஒரு காரியம் நிறைவேறும்.
முக்கியமான எண்ணங்கள் ஒன்றிரண்டு இப்போது நிறைவேறும். சனி 12-ல் இருப்பதாலும், சந்திரன் வாரக்கடைசியில் சனியுடன் கூடுவதாலும் எதிர்பாராத செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். விரும்பதகாத இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும். தாய் நலனில் கவனம் தேவை. வேலையாட்களை நம்பி ஏமாற வேண்டாம்.
அதிர்ஷ்டமான தேதி: ஏப்.6.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடக்கு.
நிறங்கள்: இளநீலம், வெண்மை, பச்சை, சிவப்பு, புகை நிரம்.
எண்கள்: 4, 5, 6, 9.
பரிகாரம்: சனிபகவானுக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது. கால் ஊனமுள்ளவர்களுக்கும் வயோதிகர்களுக்கும் உதவி செய்யவும்.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் சனி 11-ம் இடத்தில் உலவுவது சிறப்பு. சூரியன், சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரமும் சிறப்பாக இருப்பதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். பொருளாதார நிலை திருப்தி தரும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நற்பெயர் கிட்டும். இரும்பு, எஃகு, எண்ணெய் தொழில்களில் ஆதாயம் கிடைக்கும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். முக்கியஸ்தர்கள் உதவுவார்கள்.
புதிய சொத்துகளும் பொருட்களும் சேரும். மன மகிழ்ச்சி பெருகும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். 6-ம் தேதி முதல் புதன் 4-ம் இடம் மாறுவதும் 7-ம் தேதி முதல் சுக்கிரன் 5-ம் இடம் மாறுவதும் விஷேசமாகும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். சுப காரியங்கள் நிகழச் சந்தர்ப்பம் கூடிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்.6, 8.
திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: நீலம், சிவப்பு, வெண்மை, மெரூன்.
எண்கள்: 1, 3, 6, 7, 8.
பரிகாரம்: திருமாலை வழிபடுவது நல்லது.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும், 3-ல் செவ்வாய், சுக்கிரனும், 10-ல் சனியும் உலவுவது சிறப்பு. போட்டிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழ அடிகோலப்படும். உழைப்பு வீண்போகாது. பொதுநலப்பணியாளர்களுக்கு மதிப்பு உயரும். தொழிலாளர்கள், விவசாயிகளுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும்.
6-ம் தேதி முதல் புதன் 3-ம் இடம் மாறுவதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. 7-ம் தேதி முதல் சுக்கிரன் 4-ம் இடம் மாறி வலுப்பெறுவதால் நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகள் சேரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத்திரவியங்களின் சேர்க்கை நிகழும். சுகானுபவம் உண்டாகும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்.6, 8.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு.
நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை, சிவப்பு.
எண்கள்: 5, 6, 8, 9.
பரிகாரம்: சர்ப்ப சாந்தி செய்து கொள்வது நல்லது. துர்கை, விநாயகரை தொடர்ந்து வழிபடவும்.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், சுக்கிரன், 5-ல் குரு உலவுவது சிறப்பு. பொருளாதார நிலை திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். சுப காரியங்கள் நிகழும். பெற்றோர் நலனில் கவனம் தேவை. 6-ம் தேதி முதல் புதன் 2-ம் இடம் மாறுவதால் கணிதம், எழுத்து, பத்திரிகை,தரகு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.
நண்பர்கள், உறவினர்கள் உதவி புரிய முன்வருவார்கள். 7-ம் தேதி முதல் சுக்கிரன் 3-ம் இடம் மாறி, வலுப்பெறுவதால் நல்ல தகவல் வந்து சேரும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். கணவன்- மனைவி உறவு நிலை சீராகும். ஜன்ம ராசியில் சூரியன், கேது உலவுவதால் உடல் நலனில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்.3, 8.
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, தெற்கு.
நிறங்கள்: இளநீலம், சிவப்பு, பொன் நிறம்.
எண்கள்: 3, 6, 9.
பரிகாரம்: சூரியன், புதன், ராகு, கேதுவுக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்யவும். துர்கை,விநாயகரைத் தொடர்ந்து வழிபடவும். சூரிய நமஸ்காரம் செய்யவும். தன்வந்திரி ஜபம் செய்வது நல்லது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
2 hours ago
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago