பூர்த்தம் காதாதி கர்ம யத் என்று சம்ஸ்கிருத டிஷ்னரியான 'அமர'த்தில் சொல்லியிருக்கிறது. 'காதம்' முதலான கர்மாக்கள் பூர்த்தம் ஆகும் என்று அர்த்தம்.
அதாவது குளமோ, கிணறோ, வாய்க்காலோ வெட்டி உபகாரம் பண்ணுவது. சாஸ்திரங்களில் விசேஷித்துச் சொல்லியிருக்கிற இந்தப் பூர்த்த தர்மத்தை மறந்தால்தான் ஜலக்கஷ்டம் (Water scarcity) என்று ஓயாமல் அவஸ்த்தைப்படுகிறோம்.
அந்தக் காலத்தில் இந்தக் காரியம் ரொம்பவும் முக்கியமாகக் கருதப்பட்டதால்தான் நாம் கூப்பிட்டு ஒருத்தன் வரவில்லை என்றால், ''அவன் அங்கே என்ன வெட்டிக் கொண்டிருக்கிறானோ?'' என்று கேட்கிற வழக்கம் வந்திருக்கிறது. அதாவது அவன் வெட்டிக்கொண்டிருந்தால் மட்டும் நாம் எத்தனை அவசரத்தில் கூப்பிட்டாலும் வராமலிருக்கலாம் என்று அர்த்தமாகிறது.
இப்போது வெட்டுகிற காரியம் போய், தூர்ப்பதுதான் முக்கியமான காரியமாக இருக்கிறது. குழாயில் தண்ணீர் நின்றுவிட்டாலோ அல்லது பூச்சியும் புழுவுமாகக் குழாய் ஜலம் வரும்போதோ, ''ஏண்டா குளத்தைத் தூர்த்தோம், கிணற்றை மூடினோம்?'' என்று துக்கமாக வருகிறது.
முன்பெல்லாம் ஒரு குளம் என்றால் வாய்க்கால்கள், வடிகால்கள் என்றெல்லாம் போட்டு வெகு சுத்தமாக வைத்துக்கொள்வார்கள். கிணறு என்றால் இழுக்கத் தெரிந்த மநுஷ்யனுக்கு மட்டும்தான் அது பிரயோஜனமாகும். குளமானாலோ வாயில்லாப் பிராணிகளுக்கும், காக்காய், குருவி முதற்கொண்டு சகல ஜீவராசிகளுக்கும் அது பயன்படும்.
பாதை போடுவது ஒரு தர்மம். விருட்சம் வைப்பது இன்னொரு தர்மம். புதிதாக வைப்பதோடு, இருக்கும் விருட்சங்களை வெட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். புதிதாக வைக்கிற செடிக்கு தினம் ஜலம் விட்டு, அது விருட்சமாக வளரப் பண்ண வேண்டும். வனமஹோத்சவம் என்று இன்றைக்குப் பெரிய மநுஷர்கள் வந்து செடி நட்டுவிட்டு நாளைக்கே அதற்கு ஜலம் விட ஆள் இல்லாமல் அது பட்டுப்போனால் என்ன ப்ரயோஜனம்?
பாதை போடுவது ஒரு தர்மம். விருட்சம் வைப்பது இன்னொரு தர்மம். புதிதாக வைப்பதோடு, இருக்கும் விருட்சங்களை வெட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். புதிதாக வைக்கிற செடிக்கு தினம் ஜலம் விட்டு, அது விருட்சமாக வளரப் பண்ண வேண்டும். வனமஹோத்சவம் என்று இன்றைக்குப் பெரிய மநுஷர்கள் வந்து செடி நட்டுவிட்டு நாளைக்கே அதற்கு ஜலம் விட ஆள் இல்லாமல் அது பட்டுப்போனால் என்ன ப்ரயோஜனம்?
இதற்குப் பதில் யாருக்கும் தெரியாமல் ஒருத்தன் ஏதோ ஒரு ஒற்றையடிப் பாதையில் உள்ள முள்ளை, கண்ணாடியை அப்புறப்படுத்தி வந்தால், அதுவே மற்றவர்களுக்கு வழியை சுத்தி பண்ணுவதோடு இவனுக்கும் சித்த சுத்தியைக் கொடுத்துவிடும்.
ஒவ்வோர் அவயவத்தாலும் ஏற்படக்கூடிய தோஷத்தைப் போக்கிக்கொள்ள அந்த அவயவத்தாலேயே செய்யக்கூடிய புண்ய கர்மாக்கள் இருக்கின்றன. குப்பைத் தொட்டியான மனசை சுத்தம் பண்ண அந்த மனசாலேயே தியானம் செய்ய முடிகிறது.
கண்டதைப் பேசுகிற நாக்கை சுத்தப்படுத்திக் கொள்ள அந்த நாக்காலேயே பகவந்நாமாவைச் சொல்ல முடிகிறது. குயுக்தி எல்லாம் பண்ணும் மூளையை சுத்தமாக்கிக் கொள்ள அந்த மூளையாலேயே தத்துவ ஆராய்ச்சி பண்ண முடிகிறது.
இப்படியே, இந்த சரீரத்தால், கையாலும், காலாலும், உடம்பாலும் எத்தனையோ தப்பு தண்டா பண்ணுகிறோமல்லவா? அதை இந்த சரீரத்தாலேயே தான் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.
சரீரப் பிரயாசையாலேயே பண்ணிக்கொள்ளும் இந்த சுத்திதான் பொதுக் காரியங்களான பூர்த்த தர்மங்கள், சோஷல் சர்வீஸ் அத்தனையும். சரீரப் பிரயாசையாலேயே இது சித்த சுத்தியையும் தரக்கூடியது. ஏனென்றால் சரீரத்தால் செய்கிற இந்தக் காரியங்களுக்கு மூலமாகப் பரோபகாரம் என்ற எண்ணம் நம் சித்தத்தில் இருப்பதுதான்.
தயை என்பது ஒவ்வொருவர் மனசிலும் இருக்க வேண்டிய உயர்ந்த குணம். அந்த தயைக்கு உருக்கொடுக்கும்படியான ஒரு காரியத்தை சரீரத்தினாலும் அவசியம் செய்ய வேண்டும்.
விநோபா, 'ச்ரம்தான்' (சிரம தானம்) என்று சொல்லி வருகிறாரே, இதைத்தான் பூர்த்த தர்மம் என்று நம் சாஸ்த்திரங்களில் சொல்லியிருக்கிறது. வாரத்தில் ஒரு நாளாவது இந்த சரீர கைங்கர்யத்தை சகல ஜனங்களும் பண்ண வேண்டும் என்பது என் ஆசை.
யாராயிருந்தாலும் வாரத்துக்கு ஒரு நாள் ஹாலிடே (விடுமுறை) இருக்கிறதல்லவா? அன்றைக்கு லோகோபகாரமாக சரீரத்தால் ஒரு பொதுப்பணி செய்ய வேண்டும். மனப் பூர்த்தியுடன், அல்லது மனப் பூர்த்திக்காக பூர்த்த தர்மம் பண்ண வேண்டும்.
அவரவருக்கும் எத்தனையோ குடும்பக் காரியங்கள் இருக்கும் என்பது வாஸ்தவம்தான். இந்தக் காரியங்களை லீவு நாளில் பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் வைத்திருப்பார்கள். ஆனாலும் இதோடுகூட பார்வதீ, பரமேஸ்வராளின் பெரிய லோக குடும்பத்துக்கும் தன்னாலானதை ஒரு 'ட்யூட்டி'யாகச் செய்யத்தான் வேண்டும். இதற்காக அதையும் விடக் கூடாது. அதற்காக இதையும் விடக் கூடாது. கொஞ்ச நேரமாவது இந்தப் பரோபகாரப் பணி புரிய வேண்டும்.
சரீர கைங்கரியம் உடம்புக்கே ஒரு நல்ல exercise (அப்யாஸம்). அதோடு பரோபகாரமாகப் பண்ணுகிறபோது மனசுக்கும் அலாதியான உற்சாகம் இருக்கும். முடிவில் சித்த சுத்தியைத் தரும். சங்கமாகச் செய்ய வேண்டும். உதிரி உதிரியாக அவரவர்கள் செய்வதைவிட எல்லாரும் சேர்ந்து செய்தால் ஜாஸ்தி உபகாரம் பண்ண முடியும்.
அதைச் செய்யும்போது பலர் பிரேமையில் ஒன்று கூடும் இன்பம் இருக்கிறதே, அதுவே ஒரு பெரிய பயன்.
தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
17 hours ago
ஆன்மிகம்
18 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago