துலாம் ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் செவ்வாயும், கேதுவும் சஞ்சரிப்பதால் எதிர்ப்புக்களை வெல்லும் பராக்கிரமம் உண்டாகும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத்திறனால் சாதனைகளை ஆற்றுவீர்கள். பொறியியல், சட்டம், காவல், ராணுவத் துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். தந்தையாலும், உடன்பிறந்தவர்களாலும் அனுகூலம் உண்டாகும்.
திரவப் பொருட்களால் லாபம் கிடைக்கும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர்களுக்குத் தெளிவான பாதை புலப்படும். கணவன் மனைவி உறவு நிலை சாதாரணமாகவே காணப்படும். அக்கம்பக்கத்தாரிடம் சுமுகமாகப் பழகவும். 21-ம் தேதி முதல் வியாபாரம் பெருகும். வீண் வம்பு கூடாது.
அதிர்ஷ்டமான தேதி: மார்ச் 22.
திசைகள்: கிழக்கு, வடமேற்கு, தெற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, மெரூன், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 5, 7, 9.
பரிகாரம்: துர்க்கைக்கு நெய்தீபம் ஏற்றி, அர்ச்சனை, ஆராதனைகள் செய்து வழிபடுவது நல்லது.
விருச்சிக ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் 9-ல் குருவும் 11-ல் ராகுவும் உலவுவதால் நண்பர்கள், உறவினர்களது தொடர்பு பயன்படும். புதிய உடைமைகள் சேரும். கணிதம், எழுத்து, பத்திரிகை, வியாபாரத் துறைகள் ஆக்கம் தரும். புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். மக்களால் காரியங்கள் நிறைவேறும். மருத்துவம், விஞ்ஞானம், ரசாயனத் துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.
வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். கணவன் மனைவி உறவு நிலை பாதிக்கும். மருத்துவச் செலவுகள் சற்றுக் கூடும். கூட்டுத்தொழிலில் அதிக கவனம் தேவை. 21-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ஆமிடம் மாறுவதால் எதிர்ப்புக்கள் குறையத் தொடங்கும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். இன் ஜினீயர்களது நிலை உயரும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 22, 25.
திசைகள்: வடக்கு, தென்மேற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், பொன் நிறம், பச்சை.
எண்கள்: 3, 4, 5, 9.
பரிகாரம்: கேதுவுக்குப் பிரீதியாக விநாயகரைத் தொடர்ந்து வழிபடவும். மகாலட்சுமி அஷ்டகம் படிப்பது நல்லது. ஏழைப் பெண்களுக்கு உதவி செய்யவும்.
தனுசு ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். நல்ல தகவல் வந்து சேரும். கலைத்துறையினர் சுபிட்சம் காண்பார்கள். மாதர்களது எண்ணம் நிறைவேறும். போக்குவரத்து துறை லாபம் தரும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு கூடும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். மக்களால் பயணத்தின் மூலம் முக்கியமான எண்ணம் ஈடேறும்.
கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். நண்பர்கள், உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். தாய் நலனில் கவனம் தேவை. 21-ம் தேதி முதல் வியாபாரிகளுக்கு மந்த நிலை விலகும். மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். மக்களால் நலம் உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் சற்று அதிகரிக்கும். ஆன்மிகச் சிந்தனை மேலோங்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 22, 25.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: இளநீலம், வெண்மை, புகை நிறம்.
எண்கள்: 1, 4, 6.
பரிகாரம்: செவ்வாய், சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. கால் ஊனமுள்ளவர்களுக்கு உதவி செய்யவும்.
மகர ராசி வாசகர்களே!
உங்கள் ராசிநாதன் சனி 11-ம் இடத்தில் உலவுவது சிறப்பாகும். சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரமும் சிறப்பாக இருப்பதால் பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். பேச்சாற்றல் பளிச்சிடும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத் திறமை கூடும். மாணவர்களது நிலை உயரும்.
முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். மனத்தில் துணிவு கூடும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். இயந்திரப் பணியாளர்களுக்கு லாபம் அதிகமாகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். ஆன்மிகவாதிகளுக்கு நற்பெயர் கிடைக்கும். 21-ம் தேதி முதல் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 22, 25.
திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடமேற்கு, வடக்கு.
நிறங்கள்: நீலம், பச்சை, சிவப்பு, வெண்மை, மெரூன்.
எண்கள்: 1, 5, 6, 7, 8, 9.
பரிகாரம்: சக்தி வழிபாடு நலம் தரும்.
கும்ப ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 10-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். பொதுப்பணிகளில் ஈடுபாடு அதிகமாகும். சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதத் துறையினர் வெற்றிபெறுவார்கள். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அனுகூலமான போக்கு தென்படும்.
2-ல் சூரியன், செவ்வாய், கேது ஆகியோர் உலவுவதால் குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். சண்டை, சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. அரசு விவகாரங்களில் விழிப்புத் தேவை. 21-ம் தேதி முதல் புதன் இரண்டாமிடத்துக்கு மாறுவதால் வியாபாரிகளுக்கு லாபம் கூடும். 21-ம் தேதி முதல் உடன்பிறந்தவர்களால் பரஸ்பரம் அனுகூலம் உண்டாகும். பந்தயங்கள், விளையாட்டுகளில் வெற்றிவாய்ப்பு உண்டு. மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் உருவாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 22, 25.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு.
நிறங்கள்: வெண்மை, நீலம்.
எண்கள்: 6, 8.
பரிகாரம்: கோளறு திருப்பதிகம் வாசிப்பது நல்லது. நாகரை வழிபடுங்கள்.
மீன ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 5-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். பேச்சில் இனிமை கூடும் நேரமிது. குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பொருள் வரவு கூடும். கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். பெண்களால் அனுகூலம் ஏற்படும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். கடல் வாணிபம் லாபம் தரும்.
புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். விருந்துகளில் கலந்துகொள்ளச் சந்தர்ப்பம் உருவாகும். மக்கள் நலம் சீராக இருந்துவரும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. தலை, கண் உபாதைகள் சிலருக்கு ஏற்படலாம். புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். 21-ம் தேதி முதல் பண வரவு மேலும் அதிகமாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 22, 25.
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: இளநீலம், பொன் நிறம்.
எண்கள்: 3, 6.
பரிகாரம்: சூரியன், புதன், ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது. ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும். நாகர் வழிபாடு செய்வது நல்லது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
2 hours ago
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago