மேஷ ராசி வாசகர்களே!
உங்கள் ராசிநாதன் செவ்வாய் 12-ம் இடத்தில் கேதுவுடன் கூடியிருப்பது சிறப்பாகாது என்றாலும் குரு பார்வையைப் பெறுவதால் பக்தி மார்க்கத்திலும் ஞானமார்க்கத்திலும் ஈடுபாடு உண்டாகும். இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். சிக்கன நடவடிக்கை தேவை. அதிகம் உழைக்க வேண்டிவரும். வாரப் பின்பகுதியில் புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும்.
முக்கியமான ஓரிரு காரியங்கள் நிறைவேறும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத்துறையினருக்கும் வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் செழிப்புக் கூடும். கணவன்,மனைவி உறவு நிலை திருப்தி தரும். மக்களால் அனுகூலம் உண்டாகும். பிதுரார்ஜித சொத்துக்கள் கிடைக்கும். எழுத்துத் துறையினர் வரவேற்பு பெறுவர்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 15, 18.
திசைகள்: தென்மேற்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, புகை நிறம், இளநீலம்.
எண்கள்: 1, 4, 5, 6.
பரிகாரம்: விநாயகரையும் சுப்பிரமணியரையும் வழிபடவும். சனிப் பிரீதி செய்துவருவது நல்லது.
ரிஷப ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 3-ல் வக்கிர குருவும், 11-ல் செவ்வாயும் கேதுவும் உலவுவது சிறப்பாகும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வழக்குகளில் வெற்றி கிட்டும். பொதுப்பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். நிலபுலம் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும்.
13-ம் தேதி முதல் சூரியன் 10-ம் இடத்திற்கு மாறுவதால் அரசியல், நிர்வாகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். 17-ம் தேதி முதல் மனத்துக்கு இனிய சம்பவங்கள் வாழ்க்கையில் இடம்பெறும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களின் சேர்க்கை நிகழும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதி: பிப்ரவரி 18
திசைகள்: வடமேற்கு, தெற்கு, வடக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, பச்சை.
எண்கள்: 3, 7, 9.
பரிகாரம்: ராகுவுக்குப் பிரீதி செய்வது நல்லது. துர்கை அம்மனை வழிபடவும்.
மிதுன ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 6-ல் சனியும், 8-ல் புதனும் 9-ல் சுக்கிரனும் 10-ல் செவ்வாயும் கேதுவும் உலவுவது சிறப்பாகும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும் நேரமிது. மன மகிழ்ச்சி நிறைந்திருக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பண வரவு திருப்தி தரும். மகப்பேறு பாக்கியம் சிலருக்கு இப்போது கிடைக்கும்.
திருமணம் ஆனவர்களுக்கு இல்லறம் இனிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்பு உருவாகும். பேச்சாற்றல் வெளிப்படும். உத்தியோகஸ்தர்களுக்கும் வியாபாரிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். பெண்களுக்கு உற்சாகம் பெருகும்.
தெய்வப் பணிகளுக்காகச் செலவு செய்வீர்கள். தர்மப் பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். உடன்பிறந்தவர்களால் ஓரிரு காரியங்கள் நிறைவேறும். 13-ம் தேதி முதல் உஷ்ணாதிக்கம் குறையும். 17-ம் தேதி முதல் தொழில்ரீதியாக அருமையான திருப்பம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 14 (பிற்பகல்), 15.
திசைகள்: வடமேற்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: மெரூன், நீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 6, 7, 8.
பரிகாரம்: சூரியனுக்கும் ராகுவுக்கும் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது.
கடக ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 8-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். குரு பார்வையுடன் இருப்பதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சுகானுபவம் ஏற்படும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களின் சேர்க்கை நிகழும். கலைத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். மாதர்களது எண்ணம் ஈடேறும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும்.
பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். குரு வக்கிரமாக இருப்பதாலும் 5-ல் சனி உலவுவதாலும் மக்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். உஷ்ணாதிக்கம் கூடும். தந்தை நலனில் கவனம் தேவைப்படும். அரசுப்பணியாளர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. 13-ம் தேதி முதல் சூரியன் 8-ம் இடத்திற்கு மாறுவதும் சிறப்பாகாது. குடும்ப நலனில் கவனம் தேவை. 17-ம் தேதி முதல் தொலைதூரத் தொடர்பு பயன்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 14 (பிற்பகல்), 15, 18.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: புகை நிறம், கறுப்பு, இளநீலம்.
எண்கள்: 4, 6.
பரிகாரம்: சனிக்கும் சூரியனுக்கும் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.
சிம்ம ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு அதிபதி சூரியன் புதனுடன் கூடி 6-ல் உலவுவது சிறப்பாகும். பொருளாதார நிலை சீராகவே இருந்துவரும். சுபகாரியங்களுக்காகவும் மக்கள் நல முன்னேற்றத்துக்காகவும் செலவு செய்வீர்கள். நல்ல தகவல் வந்து சேரும். நண்பர்களும் உறவினர்களும் ஓரளவு உதவுவார்கள். எலெக்ட்ரானிக் துறையில் லாபம் வரும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
13-ம் தேதி முதல் சூரியன் 7-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. பிறரிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவது நல்லது. 17-ஆம் நேதி முதல் சுக்கிரன் 8-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் உருவாகும். பெண்களுக்குச் சிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். எதிர்பாராத பொருள் கைக்கு வந்து சேரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 15, 18 (பகல்).
திசைகள்: கிழக்கு, வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 5.
பரிகாரம்: அர்த்தாஷ்டம சனிக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.
கன்னி ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். பேச்சில் திறமை வெளிப்படும். பணவரவு அதிகரிக்கும். முகப்பொலிவு கூடும். வெளிவட்டார பழக்கங்கள் நலம் தரும். தொழிலாளர்களது எண்ணங்கள் நிறைவேறும். போட்டிப் பந்தயங்களில் வெற்றி காணலாம். விவசாயம் பெருகும். தோட்டங்கள், ஆலைகள், தொழிற்சாலைகள், சுரங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் வளர்ச்சி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். பொன் நிற, கருநீல நிறப்பொருட்கள் லாபம் தரும்.
கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. விட்டுக்கொடுத்துப் பழகிவருவது நல்லது. வீண்சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியம் நிறைவேறும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணை நலனில் அதிக கவனம் தேவை. கூட்டாளிகளிடம் விழிப்புடன் பழகவும். பயணத்தால் சிறு சங்கடம் ஏற்படும். எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 15, 18.
திசைகள்: வடக்கு, மேற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 8.
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபடவும். நாகரை வழிபடுவதும் அவசியமாகும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
22 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago