வார ராசி பலன் 10-4-14 முதல் 16-4-14 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

By சந்திரசேகர பாரதி

மேஷம்

உங்கள் ராசிக்கு 11-ல் சுக்கிரன் உலவுவதாலும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், சனி 7-ல் வக்கிரமாக இருப்பதாலும் நண்பர்கள், தொழில் பங்குதாரர்களால் நலம்பெறு வீர்கள். பெண்களின் எண்ணம் ஈடேறும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். வழக்கில் வெற்றி கிடைக்கும். பயணத்தால் ஒரு காரியம் நிறை வேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். 14-ம் தேதி முதல் சூரியனும் புதனும் ஜென்ம ராசிக்கு இடம் மாறுவது கோச்சாரப்படி சிறப்பல்ல என்றாலும் சூரியன் தன் உச்ச ராசியில் உலவத் தொடங்குவதால் நலம் புரிவார். அரசு காரியங்களில் வெற்றி கிடைக்கும். புதனால் தலை சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப். 13, 14. திசை: தென்கிழக்கு, தெற்கு.

நிறம்: வெண்மை, பொன் நிறம், சிவப்பு. எண்: 6, 9.

பரிகாரம்: சர்ப்ப சாந்தி செய்வது நல்லது. திருமாலை வழிபடவும். ஏழை மாணவர்கள் கல்வி பயில உதவவும்.



ரிஷபம்

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 6-ல் ராகுவும், 11-ல் சூரியனும் புதனும் உலவுவது சிறப்பு. உடன்பிறந்தவர்கள் உதவிபுரிவார்கள். நண்பர்கள், உறவினர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். சுப காரியங்கள் நிகழும். வீடு, மனை, வாகன யோகம் கிடைக்கும். பயணத்தால் நலம் உண்டு. அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறையினர் முன்னிலை பெறுவார்கள். 14-ம் தேதி முதல் சூரியனும் புதனும் 12-ம் இடம் மாறுவதால் செலவு அதிகரிக்கும். அரசு விவகாரங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. பிள்ளைகளால் மன அமைதி குறையும். மறதியால் அவதி ஏற்படும். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்துவது நல்லது.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 13, 14. திசை: வடகிழக்கு, தென்மேற்கு.

நிறம்: பொன் நிறம், நீலம், பச்சை, வெண்மை. எண்: 1, 3, 4, 5, 6.

பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடவும். குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கவும்.



மிதுனம்

சூரியன், புதன், சுக்கிரன், கேது அனுகூலமாக உலவுவதால் அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். உயர் பதவி, பட்டங்கள் தேடிவரும். நிர்வாகத்திறமை வெளிப்படும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உடன்பிறந்தவர்களால் நலம் உண்டு. குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். மாணவர்கள், கலைத் துறையினரின் நிலை உயரும். பெண்களின் எண்ணம் நிறை வேறும். பிள்ளைகளால் நலம் உண்டு. 14-ம் தேதி முதல் சூரியனும் புதனும் 11-ம் இடம் மாறுவது விசேஷம். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். அரசு உதவி கிடைக்கும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்களால் அதிக லாபம் கிடைக்கும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் உதவுவார்கள்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 13, 14, 16. திசை: கிழக்கு, தென்கிழக்கு, வடக்கு.

நிறம்: ஆரஞ்சு, இளநீலம், வெண்மை, மெரூன். எண்: 1, 5, 6, 7.

பரிகாரம்: துர்கா கவசம் படிக்கவும். முருகனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.



கடகம்

3-ல் வக்கிர செவ்வாய், 4-ல் வக்கிர சனி, 8-ல் சுக்கிரன், 10-ல் கேது உலவுவது சிறப்பாகும். சந்திர பலமும் கூடியிருப்பதால் முக்கியமான ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். கடல் வாணிபம் செய்பவர்களுக்கு ஆதாயம் கூடும். குடும்ப நலம் சீராகும். விருந்து, உபசாரங்கள், கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். அலைச்சல் வீண்போகாது. பெண்களின் நிலை உயரும். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். 14-ம் தேதி முதல் சூரியனும் புதனும் 10-ம் இடம் மாறுவது விசேஷம். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். அரசுப் பணியாளர்களுக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் வளர்ச்சி பெறுவார்கள். உடன்பிறந்தவர்களாலும் தந்தையாலும் அனுகூலம் உண்டு.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப். 13, 14. திசை: வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறம்: மெரூன், சிவப்பு, வெண்மை. எண்: 6, 7, 9.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியையும், துர்கை அம்மனையும் தொடர்ந்து வழிபடவும்.



சிம்மம்

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 8-ல் புதன், 11-ல் குரு உலவுவதால் புதியவர்களது தொடர்பு பயன்படும். பயணத்தால் அனுகூலம் உண்டு. வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். புதிய துறைகளில் முதலீடு செய்வீர்கள். பொன்நிறப் பொருட்கள் லாபம் தரும். சுப காரியங்கள் கைகூடிவரும். குழந்தை பாக்கியம் உண்டாகும். 14-ம் தேதி முதல் ராசிநாதன் சூரியனும் புதனும் 9-ம் இடம் மாறுவது கோச்சாரப்படி சிறப்பாகாது என்றாலும் சூரியன் தன் உச்ச ராசியில் உலவத் தொடங்குவதால் நலம் புரிவார். மதிப்பு, அந்தஸ்து உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். தெய்வப் பணிகளிலும் தர்மப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். பெரியவர்களும் தனவந்தர்களும் ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 13, 14, 15. திசை: தென்மேற்கு, வடக்கு, வடகிழக்கு.

நிறம்: பொன் நிறம், சிவப்பு, புகை நிறம். எண்: 3, 4, 5.

பரிகாரம்: சூரிய வழிபாடு நலம் கூட்டும். மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திரம் படிக்கவும்.



கன்னி

கோச்சாரப்படி கிரக நிலை சிறப்பாக இல்லாததால் எதிர்ப்புகள் இருக்கும். புதிய நபர்களிடம் வெளிப்படையாகப் பேசிப் பழகலாகாது. எக்காரியத்திலும் நிதானம் தேவை. குடும்பத்தில் சலசலப்பு கூடும். யாருடனும் வீண்வம்பு வேண்டாம். தேவைகளைச் சமாளிக்க கடன்பட நேரலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றமுடியாமல் போகும். கூட்டாளிகள் விலகுவார்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. 14-ம் தேதி முதல் சூரியனும் புதனும் 8-ம் இடம் மாறுவதால் வீண் செலவுகள், இழப்புகள் ஏற்படும். அரசியல், நிர்வாகத் துறையினர் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. வியாபாரிகள் வளர்ச்சி காண்பார்கள். ஜனன கால ஜாதக பலம் இருக்குமானால் சுப பலன்கள் உண்டாகும். ஜாதக பலம் இல்லாதவர்கள் இறைவழிபாட்டில் ஈடுபடுவதால் சங்கடங்களைக் குறைத்துக் கொள்ளலாம்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 13, 14, 16. திசை: வடக்கு, வடமேற்கு.

நிறம்: வெண்மை, இளநீலம், பச்சை. எண்: 2, 5.

பரிகாரம்: நவகிரகங்களை வழிபடவும். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்று அதன்படி செயல்படவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்