துலாம்
உங்கள் ராசிக்கு 4-ல் புதனும், சுக்கிரனும், 6-ல் கேதுவும் உலவுவதால் செல்வாக்கும் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். குடும்ப நலம் சீராகும். பொருள்வரவு அதிகரிக்கும். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரால் அனுகூலம் உண்டாகும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். குரு வக்கிரமாக இருப்பதால் பொருளாதார நிலை சீராகவே இருக்கும். ராகு 12-ல் இருப்பதால் பயணத்தின்போது விழிப்புத் தேவை. வீண் செலவுகளைத் தவிர்க்கவும். 5-ம் வீட்டோன் சனி 2-ல் இருப்பதாலும் 2-ம் வீட்டோன் செவ்வாய் 5-ல் இருப்பதாலும் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறச் சந்தர்ப்பம் உருவாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 16, 18.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு, கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, மெரூன், வெண்மை, வான் நீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 5, 6, 7.
பரிகாரம்: துர்கைக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
விருச்சிகம்
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் சுக்கிரனும் 9-ல் குருவும் 11-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். அரசு சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். முக்கியஸ்தர்களும், மேலதிகாரிகளும் உங்களுக்கு உதவுவார்கள். பிதுரார்ஜித சொத்துகள் சேரும். வாரப் பின்பகுதியில் பண நடமாட்டம் கூடும். போட்டிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் குதூகலம் கூடும். ஜன்ம ராசியில் சனி இருப்பதால் அதிகம் உழைக்க வேண்டிவரும். அலைச்சலும் அதிகமாகும். 5-ல் கேது இருப்பதால் மக்கள் நலனில் கவனம் செலுத்திவருவது நல்லது. ராகு 11-ல் இருப்பதால் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் வலுக்கும். மாணவர்கள் படிப்பில் முழுக் கவனம் செலுத்தினால்தான் முன்னேற்றம் காண முடியும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ,ஜனவரி 16, 18.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, வெண்சாம்பல் நிறம், இளநீலம்.
எண்கள்: 1, 4, 6.
பரிகாரம்: புதன், சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது.
தனுசு
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும் 3-ல் செவ்வாயும் 8-ல் வக்கிர குருவும் 10-ல் ராகுவும் உலவுவதால் முக்கியமான எண்ணங்களில் ஒன்றிரண்டு நிறைவேறும். வியாபாரம் விருத்தி அடையும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும். தர்ம சிந்தனை வளரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். தொழில் முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். கடனாகக் கேட்டுருந்த பணம் வாரப் பின்பகுதியில் கிடைக்கும். சனி 12-ல் இருப்பதால் குடும்பத்தை விட்டுச் சிலர் பிரிந்திருக்க வேண்டிவரும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். வாரக் கடைசியில் பல வழிகளில் வருமானம் வந்து சேரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 18, 20.
திசைகள்: தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: பச்சை, இளநீலம், சிவப்பு, வெண்மை.
எண்கள்: 4, 5, 6, 9.
பரிகாரம்: சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது.
மகரம்
உங்கள் ராசியில் சுக்கிரனும் 3-ல் கேதுவும் 11-ல் சனியும் உலவுவதால் முக்கியமான காரியங்கள் வார முன்பகுதியில் நிறைவேறும். இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். கலைத் துறையினருக்குப் பாராட்டுகள் குவியும். மாதர்களது நிலை உயரும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உடல்நலமும் மன நலமும் சிறக்கும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள், விளைபொருட்கள் ஆகியவை லாபம் தரும். ஜன்ம ராசியில் சூரியன் இருப்பதால் அலைச்சல் அதிகமாகும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. 2-ல் செவ்வாய் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் வேகத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. வீண்வம்பு, வழக்குகளில் ஈடுபடலாகாது. தலை சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும். வாரப் பின்பகுதியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்:,ஜனவரி 16, 20.
திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, மெரூன்.
எண்கள்: 6, 7, 8..
பரிகாரம்: சூரிய நாராயணரை வழிபடவும். ஆதித்ய ஹ்ருதயம் படிப்பதும் கேட்பதும் நல்லது.
கும்பம்
உங்கள் ராசிக்கு 10-மிடத்தில் சனி உலவுவது சிறப்பாகும். சுக்கிரன் 12-ல் உலவுவதும் அனுகூலமாகும். தொலைதூரத் தொடர்புகளால் நலம் உண்டாகும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். சூரியனும் புதனும் 12-ல் உலவுவதால் அரசுப்பணியாளர்களும் அரசியல்வாதிகளும் பொறுப்புடன் காரியமாற்றினால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். மகன் அல்லது மகளுக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். மேற்படிப்புக்காகவும் வெளிநாடு செல்ல வேண்டிவரும். ஜன்ம ராசியில் செவ்வாய் இருப்பதால் எக்காரியத்திலும் அவசரம் கூடாது. 2-ல் கேதுவும் 8-ல் ராகுவும் உலவுவதால் புதியவர்களை நம்பி எக்காரியத்திலும் ஈடுபட வேண்டாம். பயணத்தின்போது எச்சரிக்கை தேவை. கண், கால் பாதம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 16, 18.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு.
நிறங்கள்: வெண்மை, நீலம்.
எண்கள்: 6, 8 .
பரிகாரம்: திருமாலுக்கும் மகாலட்சுமிக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
மீனம்
உங்கள் ராசிக்கு 11-ல் சூரியனும் புதனும் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். புதிய பதவி, பட்டங்கள் பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். நிர்வாகத் திறமை பளிச்சிடும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். நண்பர்கள், உறவினர்கள், பங்குதாரர்கள் ஆகியோரால் அனுகூலம் உண்டாகும். மக்கள் நலம் சீராகும். ஜன்ம ராசியில் கேதுவும் 7-ல் ராகுவும் இருப்பதால் புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை. செவ்வாய் 12-ல் இருப்பதால் வீண் செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். சகோதர நலனில் கவனம் தேவை. பயணத்தின்போது விழிப்புத் தேவை. எக்காரியத்திலும் வேகம் கூடாது; விவேகம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 16, 18, 21.
திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: இளநீலம், பச்சை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 5, 6. வார பின்பகுதியில் எண் 2-ம் நலம் தரும்.
பரிகாரம்: விநாயகர், துர்கை, சுப்பிரமணியர் ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
23 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago