மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 9-ல் சுக்கிரன், 10-ல் செவ்வாய் உலவுவதால் தொழில் ரீதியாக மாற்றம் உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல் ஆரோக்கியம் சீராகும். போட்டிப் பந்தயங்களிலும், விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி கிட்டும். 28-ம் தேதி முதல் புதன் 10-ம் இடம் மாறுவதால் வியாபாரம் பெருகும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். எதிரிகள் அடங்குவார்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். தொழிலாளர்களும் விவசாயிகளும் பொறுப்புடன் காரியமாற்றுவது நல்லது. எதிலும் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. தெய்வப் பணிகளால் மன அமைதி கிடைக்கும்.
அதிர்ஷ்டமான நாட்கள்: டிசம்பர் 25, 26.
திசைகள்: தென்மேற்கு, தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: புகை நிறம், வான் நீலம், சிவப்பு.
எண்கள்: 1, 4, 6, 9.
பரிகாரம்: சனிப் பிரீதி செய்வது நல்லது. ஆஞ்சநேயர், விநாயகரை வழிபடவும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வது நல்லது.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 8-ல் புதன், சுக்கிரன், 11-ல் கேது சஞ்சரிப்பதால் தொலைதூரத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்களால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். கணிதம், எழுத்து, பத்திரிகை, விஞ்ஞானம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் தேடிவரும். 28-ம் தேதி முதல் புதன் 9-ம் இடம் மாறுவது சிறப்பாகாது என்றாலும் மக்கள் நலம் சீராகும். 30-ம் தேதி முதல் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 9-ம் இடம் மாறுவது விசேஷமாகும். தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு கூடும். அரசு விவகாரங்களில் விழிப்புத் தேவை. பிள்ளைகளாலும் தந்தையாலும் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான நாட்கள்: டிசம்பர் 25, 26, 28.
திசைகள்: வடமேற்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம், பச்சை.
எண்கள்: 5, 6, 7.
பரிகாரம்: சூரிய வழிபாடு செய்யவும். ராகுவுக்காக துர்கையம்மனை வழிபடவும்.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 10-ல் கேது சஞ்சரிப்பதால் தொழில் ரீதியாக வளர்ச்சி காணலாம். எதிர்ப்புகளின் கரம் வலுக்குறையும். தொழிலாளர்கள், விவசாயிகள், சமுதாய நலப் பணியாளர்கள் ஆகியோருக்கெல்லாம் அனுகூலமான போக்கு தென்படும். பொருள்வரவு கூடும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு மந்த நிலை விலகும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும்.
மாணவர்களது நிலை உயரும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவு ஏற்படும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாரப் பின்பகுதியில் ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு கூடும். தர்ம காரியங்களில் நாட்டம் உண்டாகும். எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்டமான நாட்கள்: டிசம்பர் 26, 28.
திசைகள்: வடமேற்கு, மேற்கு.
நிறங்கள்: மெரூன், நீலம்.
எண்கள்: 7, 8.
பரிகாரம்: துர்கை, திருமுருகனை வழிபடவும்.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 6-ல் சூரியன், புதன் உலவுவதால் புதியவர்களது தொடர்பு பயன்படும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். உயர் பதவிகளும் பட்டங்களும் தேடிவரும். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியங்கள் நிறைவேறும். எலெக்ட்ரானிக் துறை லாபம் தரும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அயல்நாட்டுத் தொடர்பு ஆக்கம் தரும்.
ஆடவர்களுக்குப் பெண்டிரால் அவப்பெயர் ஏற்படும். கேளிக்கை, உல்லாசங்களைத் தவிர்ப்பது நல்லது. 5-ல் சனியும், 9-ல் கேதுவும் இருப்பதால் மக்களாலும் தந்தையாலும் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். மறதியால் அவதி உண்டாகும். வாழ்க்கைத் துணை நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். பிறரிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 25, 28.
திசைகள்: தென்மேற்கு, வடக்கு, கிழக்கு.
நிறங்கள்: புகை நிறம், பச்சை, வெண்மை.
எண்கள்: 1, 4, 5, 9.
பரிகாரம்: சுக்கிரன், சனி ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல் செவ்வாய் உலவுவதால் முக்கியமான ஓரிரு காரியங்கள் இப்போது நிறைவேறும். நிலபுலங்களின் சேர்க்கையோ, ஆதாயமோ கிடைக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கூடிவரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பொறியியல், சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள்.
28-ம் தேதி முதல் புதன் 6-ம் இடம் மாறுவதால் வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நற்பெயர் கிடைக்கும். 30-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. கணவன்-மனைவி உறவு நிலை பாதிக்கும். விட்டுக்கொடுத்துப் போகவும். வாரப் பின்பகுதியில் வீண் செலவுகள் கூடும்.
அதிர்ஷ்டமான நாட்கள்: டிசம்பர் 25, 26.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: இளநீலம், சிவப்பு, வெண்மை.
எண்கள்: 6, 9.
பரிகாரம்: துர்கை, ஆஞ்சநேயரை வழிபடவும். விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து நெய்விளக்கேற்றி வழிபடவும்.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 4-ல் புதன், சுக்கிரன், 11-ல் குரு உலவுவது சிறப்பாகும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். உழைப்புக்குரிய பயன் கிடைத்துவரும். புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். திறமை வீண்போகாது. வியாபாரிகளுக்கு லாபம் கூடும். எழுத்துத் துறையினருக்கு வரவேற்பு கூடும்.
பணப்புழக்கம் அதிகரிக்கும். 28-ம் தேதி முதல் புதன் 5-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. பிள்ளைகளால் சில பிரச்சினைகள் ஏற்படும். சமாளித்துவிடுவீர்கள். 30-ம் தேதி முதல் சுக்கிரன் 5-ம் இடம் மாறுவது விசேஷமாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். பெண்களால் அனுகூலம் உண்டாகும். கலைஞர்களுக்கு சுபிட்சம் கூடும். மகப்பேறு பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான நாட்கள்: டிசம்பர் 25, 26, 28.
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, மேற்கு.
நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை.
எண்கள்: 5, 6, 8.
பரிகாரம்: ராகு, கேதுவுக்குப் பிரீதி, பரிகாரங்களைத் தொடர்ந்து செய்து வருவது நல்லது. ஆதித்தனை வழிபடவும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
23 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago