சுமார் 30, 40 ஆண்டுகளுக்கு முன்புவரை கிரிக்கெட் டெஸ்ட் பந்தயம் பொங்கலுக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவது வழக்கம். அதற்கான அனுமதிச் சீட்டைப் பெறுவதற்கு முதல் நாள் இரவு குரங்குக் குல்லாய், கம்பளி சகிதமாக வரிசையில் நண்பர் புடைசூழ படுத்துறங்கி மறுநாள் உரிய கட்டணத்தைச் செலுத்தி பெறும்பொழுது, அது ஏதோ மாபெரும் பரிசாகத் தோன்றும்.
இப்பொழுது பொங்கலின்போது போட்டி நடைபெறுவதே இல்லை. வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த அனுபவம் வேறொரு இடத்தில் தொடர்கிறது.
சங்கீத விழாவின்போது, டிசம்பர் மாதத்தில் கச்சேரிகள் பல இடங்களில் நடைபெற்றாலும், சென்னை மியூசிக் அகாடமியில் கேட்கும்பொழுது, அதன் அனுபவமே ஒரு தனிதான்.
2005-ல் என்.முரளி தலைமை ஏற்றபின், அகாடமியின் தன்மையே மாறிவிட்டது. கழிப்பறை முதல் கச்சேரி மேடைவரை அனைத்திலும் வியக்கத்தகு மாற்றங்கள், முன்னேற்றங்கள். சென்னையிலேயே மிகச் சிறந்த ஒலி அமைப்பைச் செய்திருக்கும் அரங்கங்களில் இதுவும் ஒன்று. இப்படி எல்லா விதத்திலும் தனிச் சிறப்போடு விளங்கும் மியூசிக் அகாடமியின் அனுமதிச் சீட்டைப் பெறுவதற்கு டிசம்பர் 1-ஆம் தேதி இரவு முதல் வெளியிலே காத்திருந்து மறுநாள் காலை எட்டு மணிக்கு வாங்கும்பொழுது, அந்த 70-களின் ஞாபகம் அலைமோதியது என்று நண்பர்கள் கூறியதில் ஆச்சர்யம் இல்லை.
அகாடமியில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கான காரணங்களை அறிய மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளியை அணுகினோம்.
“2005-ல் நான் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டபொழுது, பல பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தது. அகாடமியின் மேல் பதிவு செய்யப்பட்ட பல வழக்குகளைச் சந்தித்து வெற்றியும் பெற்றோம். நான் முதலில் மாற்றத்துக்கு எடுத்துக்கொண்டது கழிப்பறைகளைத்தான். முழுவதுமாகச் செப்பனிட்டு மேலை நாட்டுக் கழிப்பறைகளின் தரத்துக்குக் கொண்டுசென்றேன்.
படிப்படியாக அணுகி, முறையே, பிரதான மேடையில் மாற்றங்கள், சாய்வு வசதியுடன்கூடிய புதிய இருக்கைகளைப் பொருத்தினோம். விளக்குகளில் மாற்றம், மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை, ஒலி அமைப்பில் மாற்றங்கள் என எல்லாவற்றையும் செய்து முடித்தோம். இதற்கே ஏழு ஆண்டுகள் ஆகியது. பின்னர் அழகிய பூந்தோட்டத்தையும் உருவாக்கினோம்.
இசைக் கல்வியில் பெரிய முன்னேற்றத்தைக் கொண்டுவந்தோம். டாக்டர் பப்பு வேணுகோபால் ராவ் நிர்வாகக் குழுவில் சேர்ந்தது மிகவும் உதவியாக இருந்தது.
அகாடமிக்குப் பொதுமக்களிடமும் இசை ரசிகர்களிடமும் நல்ல பெயர் நிலவுகிறது. அந்த நம்பிக்கையின் அடையாளம்தான் இந்த முன்னேற்றங்களும். இதற்காகப் பணத்தை லட்சக்கணக்கில் எங்களுக்கு அளித்து உதவிய புரவலர்களால், சென்ற வருடம் சிறிய இசைக் கூடத்தையும் நிர்வாக அலுவலகத்தையும் சரிசெய்துவிட்டோம்” என்கிறார் முரளி.
“அடுத்த கட்ட நவடிக்கை ஏதேனும் இருக்கிறதா” என்று கேட்டோம்.
“இசை விழா நாட்கள் தவிர வாத்திய இசைக் கச்சேரிகளை நடத்தத் தீர்மானம் செய்துள்ளோம். பிறகு தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்குச் சென்று அங்கு உள்ள சபாக்களுடன் இணைந்து இசைக் கச்சேரிகளை அளிக்கப் போகிறோம்” என்றார்.
“நிகழ்ச்சிகளில் முதலில் அங்கத்தினர்களுக்கு முக்கியத்துவம் பிறகு ரசிகர்களுக்கு முக்கியத்துவம் என்று செயல்பட்டு வருகிறோம். இசை விழாப் பட்டங்களுக்கான தேர்ச்சியில் எந்தவித பூடகமும் இல்லாமல் செயல்பட்டுவருகிறோம் இதுவே எங்கள் வெற்றிக்குக் காரணம்” என்று கூறிவிட்டு, அடுத்த கச்சேரிக்குச் செல்ல ஆயத்தமானார்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago