வார ராசிபலன் 04-12-2014 முதல் 10-12-2014 வரை மேஷம் முதல் கன்னி வரை

By சந்திரசேகர பாரதி

மேஷ ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும் 8-ல் புதனும் சுக்கிரனும் 10-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். வாழ்க்கை வசதிகள் கூடும். கணவன், மனைவி உறவு நிலை திருப்தி தரும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். உடன்பிறந்தவர்களால் ஓரிரு காரியங்கள் நிறைவேறும். பொருள்வரவு கூடும்.

நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். தாய் மற்றும் அவர்வழி உறவினர்களால் அதிக நலம் உண்டாகும். 7-ம் தேதி முதல் சுக்கிரன் ஒன்பதாம் இடத்திற்கு மாறுவதால் புனிதப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பந்தயங்களில் வெற்றி கிட்டும். தந்தை நலனில் கவனம் தேவைப்படும். அரசியல்வாதிகளும் அரசுப்பணியாளர்களும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்டமானதேதிகள்: டிசம்பர் 6, 10..

திசைகள்: தென்மேற்கு, தெற்கு, வடக்கு, தென்கிழக்கு.. .

நிறங்கள்: புகை நிறம், வான் நீலம், பச்சை, சிவப்பு. .

எண்கள்: 4, 5, 6, 9.

பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்யவும். ஆஞ்சநேயரை வழிபடவும்.



ரிஷப ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 6-ல் சனியும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். வார முன்பகுதியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்பு ஓரளவு பயன்படும். வார நடுப்பகுதியில் முக்கியமான எண்ணம் ஈடேறும். மதிப்பு உயரும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும். வாரப்பின்பகுதியில் பண வரவு சற்று அதிகரிக்கும்.

நல்ல தகவல் வந்து சேரும். 7-ம் தேதி முதல் சுக்கிரன் எட்டாம் இடம் மாறுவதால் கலைத்துறையினருக்கு மந்தநிலை விலகும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை உருவாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். கணிதம், பத்திரிகை, தரகுத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றமான பாதை உருவாகும். பேச்சில் திறமை வெளிப்படும். விருந்து, உபசாரங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்டமானதேதிகள்: டிசம்பர் 6, 10.

திசைகள்: வடமேற்கு, மேற்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, நீலம்..

எண்கள்: 7, 8.

பரிகாரம்: துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.



மிதுன ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், புதன் ஆகியோரும் 10-ல் கேதுவும் சஞ்சரிப்பதால் தொழில் நுட்பத்திறமை வெளிப்படும். அரசு சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்கு உதவுவார்கள். புதிய பதவி, பட்டம் கிடைக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகள் லாபம் தரும். 3-ல் குருவும் 5-ல் சனியும், 6-ல் சுக்கிரனும் இருப்பதால் மக்கள் நலனில் கவனம் தேவைப்படும்.

அலைச்சல் அதிகரிக்கும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் பெண்களுக்கும் பிரச்னைகள் சூழும். பக்குவமாகச் சமாளிக்கவும். 7-ம் தேதி முதல் சுக்கிரனும் 8-ம் தேதி முதல் புதனும் ஏழாம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. வாழ்க்கைத்துணை நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். எதிர்ப்புக்கள் சற்று அதிகரிக்கும். எதிலும் நிதானமாக ஈடுபடுவது நல்லது.

அதிர்ஷ்டமானதேதிகள்: டிசம்பர் 4, 6, 10.

திசைகள்: வடமேற்கு, கிழக்கு, வடக்கு..

நிறங்கள்: மெரூன், பச்சை, ஆரஞ்சு.

எண்கள்: 1, 5, 7.

பரிகாரம்: பராசக்தியையும் முருகனையும் வழிபடவும். ஏழைப் பெண்களின் முன்னேற்றத்துக்கு உதவி செய்யவும்.



கடக ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 3-ல் ராகுவும் 5-ல் சுக்கிரனும் உலவுவதால் செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். மன உற்சாகம் பெருகும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள் சேரும்.

பயணத்தால் அனுகூலம் உண்டு. குடும்ப நலம் சிறக்கும். 7-ம் தேதி முதல் சுக்கிரன் ஆறாம் இடம் மாறுவதால் சுகம் குறையும். வண்டி, வாகனங்களில் செல்லும்போது விழிப்புடன் இருக்கவும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உதயமாகும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். சுபச்செலவுகள் உண்டு. எதிர்ப்புக்கள் குறையும்.

அதிர்ஷ்டமானதேதிகள்: ,டிசம்பர் 6, 10.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: புகை நிறம், இளநீலம், வெண்மை, பொன் நிறம்..

எண்கள்: 3, 4, 6, 9.

பரிகாரம்: சனிக்கிழமையில் சனிபகவானை வழிபடவும். ஏழைகளுக்கும் வயோதிகர்களுக்கும் உதவுங்கள்.



சிம்ம ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 4-ல் புதனும் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் உலவுவதால் தொலைதூரத் தொடர்பு பயன்படும். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு கூடும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். புதிய பதவி, பட்டம் கிடைக்கும். சமுதாய நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபாடு கூடும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அனுகூலமான போக்கு நிலவிவரும்.

நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைத்துவரும். எதிர்ப்புக்கள் அகலும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். வியாபாரம் பெருகும். 7-ம் தேதி முதல் சுக்கிரன் ஐந்தாமிடத்திற்கு மாறுவதால் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மக்களால் அனுகூலம் உண்டாகும். குரு பார்ப்பதால் மாணவர்களது நிலை உயரும். புத்திசாலித்தனம் கூடும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும்.

அதிர்ஷ்டமானதேதிகள்: டிசம்பர் 6, 9.

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடக்கு, மேற்கு.

நிறங்கள்: நீலம், பச்சை, சிவப்பு, வெண்மை.

எண்கள்: 5, 6, 8, 9.

பரிகாரம்: சர்ப்ப சாந்தி செய்து கொள்ளவும். துர்க்கையையும் விநாயகரையும் தொடர்ந்து வழிபடவும்.



கன்னி ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். வார ஆரம்பத்தில் சந்திரன் 8-ல் இருப்பதால் சிறுசிறு இடர்ப்பாடுகள் உண்டாகும். மனத்துக்குச் சலனத்தைத் தரக்கூடிய சம்பவங்கள் நிகழும். உடல்நலனில் கவனம் தேவைப்படும். வார நடுப்பகுதியிலிருந்து நல்ல திருப்பம் உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். பிதுரார்ஜித சொத்துக்களைப் பெற வாய்ப்பு உண்டாகும்.

எதிர்ப்புக்கள் குறையும். வாரக்கடைசியில் முக்கியமான ஓரிரு காரியங்கள் நிறைவேறும். ஆதாயம் கூடும். 7-ம் தேதி முதல் சுக்கிரனும் 8-ம் தேதி முதல் புதனும் நான்காமிடம் மாறுவதால் சுகானுபவம் உண்டாகும். புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். தாயார், தாய்வழி உறவினர்களால் நலம் உண்டாகும்.

அதிர்ஷ்டமானதேதிகள்: ,டிசம்பர் 6, 10.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: வெண்மை, இளநீலம், பொன் நிறம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 6,2.

பரிகாரம்: ராகு, கேது, சனி ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

14 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்