வார ராசிபலன் 18-12-2014 முதல் 24-12-2014 வரை மேஷம் முதல் கன்னி வரை

By சந்திரசேகர பாரதி

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் ராகு, 9-ல் சுக்கிரன், 10-ல் செவ்வாய் உலவுவதால் நண்பர்கள், உறவினர்கள், பங்குதாரர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் நன்மைகள் ஏற்படும். கூட்டுத் தொழில் லாபம் தரும். பொருளாதார நிலை உயரும். புதியவர்களது நட்புறவு கிடைக்கும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும்.

8-ல் சனி இருப்பதால் அதிகம் பாடுபட வேண்டிவரும். கெட்டவர்களின் தொடர்பு கூடாது. செய்து வரும் தொழிலில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது. வாரப்பின்பகுதியில் தொலைதூரத் தொடர்பால் நலம் உண்டாகும். தந்தையால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்ற நவீன விஞ்ஞானத் துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். 22-ம் தேதி முதல் நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய பொருட்களின் சேர்க்கையும் நிகழும். வியாபாரிகளுக்குத் திறமைக்குரிய பயன் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்தினால் வளர்ச்சி காணலாம். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்டமான நாட்கள்: டிசம்பர் 18, 24.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தெற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: புகை நிறம், பொன் நிறம், வான் நீலம், சிவப்பு.

எண்கள்: 1, 3, 4, 6, 9.

பரிகாரம்: சனிபகவானை வழிபடவும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது நல்லது. காக்கைக்கு அன்னமிடவும்.



ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் சுக்கிரனும், 11-ல் கேதுவும் சஞ்சரிப்பதால் எதிர்ப்புகள் சற்று குறையும். போட்டிகளிலும் பந்தயங்களிலும் வெற்றி கிடைக்கும். சமுதாய நலப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத பணவரவைப் பெறுவீர்கள். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நிகழும். பேச்சாற்றல் வெளிப்படும். மாணவர்களுக்கும் மாதர்களுக்கும் கலைஞர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். ஞான மார்க்கத்திலும் பக்தி மார்க்கத்திலும் ஈடுபாடு கூடும். 8-ல் சூரியன் இருப்பதால் தந்தை நலனில் கவனம் தேவை.

அரசியல்வாதிகளுக்கும் அரசுப்பணியாளர்களுக்கும் பிரச்சினைகள் சூழும். உஷ்ணாதிக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட நேரலாம்; கவனம் தேவை. பெரியவர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் பணிவோடு நடந்து கொள்வது நல்லது. மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். 22-ம் தேதி முதல் குரு வக்கிரமாக 3-ம் இடம் மாறுவதால் பொருள் கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறுசிறு பிரச்சினைகள் தலைதூக்கும். பக்குவமாகச் சமாளிக்கவும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: டிசம்பர் 18, 24.

திசைகள்: வடமேற்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம், பச்சை.

எண்கள்: 5, 6, 7.

பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. வேதம் படித்தவர்களுக்குக் கோதுமை தானம் கொடுக்கவும்.



மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 10-ல் கேது சஞ்சரிப்பதால் செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். மக்களால் அனுகூலம் உண்டாகும். எதிரிகள் கட்டுக்குள் அடங்கி இருப்பார்கள். சமுதாய நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். ஆன்மிகப் பணியாளர்கள் புகழ் பெறுவார்கள். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். வாரப் பின்பகுதியில் வாழ்க்கைத் துணையாலும், தொழில் கூட்டாளிகளாலும் பிரச்சினைகள் உருவாகும்.

பிறரிடம் கோபப்படாமல் சுமுகமாகப் பழகுவது நல்லது. பயணத்தால் சங்கடம் உண்டாகும். எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது அவசியம். வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும். மறைமுக நோய்நொடி உபாதைகள் சிலருக்கு ஏற்படும். வியாபாரிகள், கலைஞர்கள், மாதர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்களால் மன அமைதி குறையும். 22-ம் தேதி முதல் குரு 2-ம் இடம் மாறுவதால் பிரச்சினைகள் குறையும். காரியத்தில் வெற்றி கிட்டும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: டிசம்பர் 18, 23.

திசைகள்: வடமேற்கு, மேற்கு.

நிறங்கள்: மெரூன், நீலம்.

எண்கள்: 7, 8.

பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடவும். ஏழைப் பெண்களுக்கு உதவுவது நல்லது. இளைஞர்களுக்கு நல்வழி காட்டி, அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண உதவவும்.



கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு, 6-ல் சூரியனும் புதனும் உலவுவதால் நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பொருள்வரவு கூடும். அந்நியர்களது தொடர்பு பயன்படும். அரசு விவகாரங்களில் சாதகமான போக்கைக் காணலாம். எதிரிகள் அடங்கிப் போவார்கள். நிர்வாகத் திறமை வெளிப்படும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்ற நவீன விஞ்ஞானத்துறைகள் லாபம் தரும். பயணத்தால் பயன் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

5-ல் சனியும், 6-ல் சுக்கிரனும் இருப்பதால் மக்களாலும் வாழ்க்கைத் துணையாலும் சங்கடங்கள் சூழும். பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. கெட்ட எண்ணங்களுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் இடம் தரலாகாது. மனைவியாலும் சகோதரிகளாலும் பிரச்சினைகள் ஏற்படும். கேளிக்கை, உல்லாசங்களைத் தவிர்ப்பது நல்லது. வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை.

அதிர்ஷ்டமான நாட்கள்: டிசம்பர் 18, 24.

திசைகள்: தென்மேற்கு, வடக்கு, கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: புகை நிறம், பச்சை, வெண்மை, பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 4, 5, 9.

பரிகாரம்: சுக்கிரன், சனி ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.



சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல் செவ்வாய் உலவுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். போட்டிப் பந்தயங்களிலும்; விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு சுபிட்சம் கூடும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். பெண்களால் அனுகூலம் உண்டாகும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். இஞ்சினீயர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

4-ல் சனி இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். அதிகம் உழைக்க வேண்டிவரும். நண்பர்கள், உறவினர்களால் நல்லதும் அல்லாததுமான பலன்கள் கலந்தவாறு ஏற்படும். மார்பு, இதயம் சம்பந்தமான உபாதைகள் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வேற்று மொழி, மத, இனக்காரர்களிடம் எச்சரிக்கை தேவை. வாரப் பின்பகுதியில் கொடுக்கல்-வாங்கல் இனங்களால் ஆதாயம் கிடைக்கும். மக்களால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை பல செய்து விருதுகளும் பரிசுகளும் பெறுவார்கள்.

அதிர்ஷ்டமான நாட்கள்: டிசம்பர் 18, 24.

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: இளநீலம், சிவப்பு, வெண்மை.

எண்கள்: 6, 9.

பரிகாரம்: துர்கை, விநாயகர், ஆஞ்சநேயரை வழிபடவும். சனிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது.



கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 4-ல் புதன், சுக்கிரன் உலவுவது சிறப்பாகும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்துவரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்கள், உறவினர்களது சந்திப்பு நிகழும். அதனால் அனுகூலமும் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். மாணவர்களது நிலை உயரும். கலைஞர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். கேளிக்கை, உல்லாசங்களிலும்; விருந்து, உபசாரங்களிலும் ஈடுபாடு உண்டாகும்.

நிலபுலங்களும், புதிய பொருட்களும் சேரும். பெண்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். தாயாராலும் தாய் வழி உறவினர்களாலும் அதிகம் நலம் உண்டாகும். அலைச்சல் வீண்போகாது. ஜன்ம ராசியில் ராகுவும், 7-ல் கேதுவும் உலவுவதால் பயணத்தின்போது விழிப்புத் தேவை. பிறரிடம் சுமுகமாகப் பழகுவது நலல்து. 22-ம் தேதி முதல் குரு 11-ம் இடம் மாறுவதால் மக்கள் நலம் சீராகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: டிசம்பர் 18, 24.

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, மேற்கு.

நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை.

எண்கள்: 5, 6, 8.

பரிகாரம்: சர்ப்ப வழிபாடு அவசியம். முருகனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

13 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்