துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 2-லும், செவ்வாய் 3-லும், கேது 6-லும் உலவுவது சிறப்பு. எடுத்த காரியங்களில் வெற்றி காண வழிபிறக்கும். குடும்பத்தில் குதூகலம் கூடும். விருந்து, உபசாரங்களிலும்; கேளிக்கை, உல்லாசங்களிலும் ஈடுபடுவீர்கள். பேச்சில் இனிமை கூடும். முக வசீகரம் உண்டாகும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். நல்லவர்களுடனான தொடர்பு கூடும்.
நல்லவர் அல்லாதவர்களை விட்டு விலகுவதன் மூலம் சங்கடங்களிலிருந்து தப்பிக்கலாம். ஆன்மிக, அறநிலையப்பணியாளர்களுக்கு மதிப்பு உயரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். வாரப்பின்பகுதியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். பயணத்தால் சிறு சங்கடம் ஏற்படும். எச்சரிக்கை தேவை. 17-ம் தேதி முதல் சூரியன் 2-ம் இடம் மாறுவதால் செல்வ வளம் பெருகும். என்றாலும் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். வீண்வம்பு வேண்டாம். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்டமான நாட்கள்: நவம்பர் 13, 17(பகல்).
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: சிவப்பு, மெரூன், வெண்மை, வான் நீலம்.
எண்கள்: 6, 7, 9.
பரிகாரம்: சூரியன், ராகுவுக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. ராகு காலத்தில் துர்கைக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்து வழிபடுவது சிறப்பாகும்.
விருச்சிக ராசி நேயர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும், 9-ல் குருவும், 11-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. தொலைதூரத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். பிள்ளைகளாலும் தந்தையாலும் அளவோடு நலம் உண்டாகும். செய்து வரும் காரியத்தில் வெற்றி கிட்டும். மதிப்புக்கும் அந்தஸ்துக்கும் குறைவு இருக்காது. புதிய பொருட்கள் வாங்குவீர்கள். முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும்.
அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் முன்னுக்கு உயருவார்கள். பெண்களுக்கு மன உற்சாகம் பெருகும். கூட்டாளிகள் உதவுவார்கள். வியாபாரிகள் விழிப்புடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டு விலகும். அரசாங்கப்பணியாளர்கள் 17-ம் தேதி முதல் நல்ல திருப்பத்தைக் காண்பார்கள். செய்தொழிலில் வளர்ச்சி காண வழிபிறக்கும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள் ஆகியோரது ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்டமான நாட்கள்: நவம்பர் 13, 17, 19 (பிற்பகல்).
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: பொன் நிறம், வெண்சாம்பல் நிறம், இளநீலம்.
எண்கள்: 3, 4, 6.
பரிகாரம்: சூரியன், சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. விநாயகரை வழிபட்ட பின்பு எக்காரியத்திலும் ஈடுபடவும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 10-ல் ராகு, 11-ல் சூரியன், புதன், சனி, 12-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். புதியவர்களது தொடர்பு பயன்படும். ஏற்றுமதி-இறக்குமதி, போக்குவரத்து இனங்கள், தோல் பொருட்கள், சுரங்கப்பொருட்கள் ஆகியவற்றால் ஆதாயம் கிடைக்கும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். பொது நலப்பணியாளர்களுக்கு புகழ் கூடும்.
கலைஞர்களுக்குத் திறமைக்குரிய பயன் கிடைத்து வரும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். பிள்ளைகளால் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். வாரக் கடைசியில் பண வரவு சற்று அதிகரிக்கும். முக்கியமான ஓரிரு காரியங்கள் நிறைவேற வழிபிறக்கும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். 17-ம் தேதி முதல் சூரியன் 12-ம் இடம் மாறுவதால் கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்டமான நாட்கள்: நவம்பர் 17, 19 (பிற்பகல்).
திசைகள்: தென்மேற்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, நீலம், பச்சை, புகை நிறம், இளநீலம், வெண்மை.
எண்கள்: 1, 4, 5, 6, 8.
பரிகாரம்: குரு, கேது, செவ்வாய் ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. வேதம் படித்தவர்கள், ஏழை அந்தணர்களுக்கு உதவுவது சிறப்பாகும்.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 7-ல் குரு, 10-ல் சூரியன், புதன், சனி, 11-ல் சுக்கிரன் உலவுவது சிறப்பு. வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கூடிவரும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். எதிர்ப்புகள் குறையும். பெண்களால் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத் துணையால் ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். சுப காரியங்கள் நிகழும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்க வாய்ப்புக் கூடிவரும். செய்து வரும் தொழில் வளர்ச்சி பெறும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும்.
பிள்ளைகளால் மன உற்சாகம் பெருகும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். தந்தையால் அனுகூலம் உண்டாகும். செவ்வாய் 12-ல் இருப்பதால் எக்காரியத்திலும் வேகத்தைக் குறைத்துக் கொண்டு விவேகத்தைக் கூட்டிக் கொள்வது நல்லது. சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. 17-ம் தேதி முதல் சூரியன் 11-ம் இடம் மாறுவது சிறப்பு. அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். பெரியவர்கள், முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மருத்துவர்களது நிலை உயரும்.
அதிர்ஷ்டமான நாட்கள்: நவம்பர் 13, 19 (பிற்பகல்).
திசைகள்: வடகிழக்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம், மெரூன்.
எண்கள்: 1, 3, 5, 6, 7, 8.
பரிகாரம்: செவ்வாய்க்குப் பிரீதியாக செந்திலாண்டவனை வழிபடவும். சகோதர, சகோதரிகளுக்கு உதவவும்.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் செவ்வாய் உலவுவது சிறப்பு. எதிர்ப்புகளை வெல்லும் பராக்கிரமம் உண்டாகும். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் அனுகூலம் உண்டாகும். செந்நிறப்பொருட்கள் லாபம் தரும். இயந்திரப் பணியாளர்களுக்கும் இன்ஜினீயர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவு. சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். வாழ்க்கைத் துணையால் அளவோடு அனுகூலம் உண்டாகும். வாரப் பின்பகுதியில் சிறு சங்கடம் ஏற்படும். பயணத்தின்போது விழிப்புத் தேவை.
பிற மொழி, மத, இனக்காரர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். விஷ பயம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளிநாட்டுத் தொடர்புடன் வர்த்தகம் புரிபவர்களுக்குப் பிரச்சினைகள் சூழும். 17-ம் தேதி முதல் சூரியன் 10-ம் இடம் மாறுவதால் அரசு உதவி கிடைக்கும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். பெரியவர்கள், மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய பதவிகளும் பொறுப்புகளும் பெறச் சந்தர்ப்பம் உருவாகும்.
அதிர்ஷ்டமான நாட்கள்: நவம்பர் 13, 17 (பகல்).
திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: வெண்மை, சிவப்பு, பச்சை.
எண்கள்: 5, 6, 8, 9 .
பரிகாரம்: துர்கையை வழிபடுவது நல்லது. குடும்பப் பெரியவர்களது ஆசிகளைப் பெறவும். குல தெய்வத்தை வழிபடவும்.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் குரு வலுத்திருக்கிறார். செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் அறிவாற்றல் வெளிப்படும். முக்கியமான எண்ணங்கள் நிறைவேற வழிபிறக்கும். பிள்ளைகளால் நலம் உண்டாகும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கில் வெற்றி பெற வாய்ப்பு உருவாகும். நல்லவர்கள் உதவி புரிவார்கள். நற்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தெய்வ காரியங்கள் நிறைவேறும். மகப்பேறு பாக்கியம் உண்டாகும். ஜலப்பொருட்கள் லாபம் தரும்.
கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். கடல் வாணிபம் செய்வோருக்கு ஆதாயம் கூடும். நிலம், மனை, வீடு, வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் அமைதி காணலாம். சகோதர நலம் சிறக்கும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்து வரும். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருக்கம் வேண்டாம். அவர்களால் ஏமாறலாம்; எச்சரிக்கைத் தேவை. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. தந்தையாலும் அரசாங்கத்தாராலும் சில இடர்ப்பாடுகள் ஏற்பட்டு விலகும். மறைமுக நோய்நொடி உபத்திரவங்கள் ஏற்படும். என்றாலும் குரு பலம் இருப்பதால் சமாளிப்பீர்கள்.
அதிர்ஷ்டமான நாட்கள்: நவம்பர் 13, 17, 19 (பிற்பகல்).
திசைகள்: வடகிழக்கு, தெற்கு, தென்கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: பொன் நிறம், வெண்மை, இளநீலம், பச்சை, சிவப்பு.
எண்கள்: 3, 5, 6, 9.
பரிகாரம்: சூரியன், சனி, ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவவும். நாகரை வழிபடவும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
14 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago