மேஷம்
உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும் 8-ல் புதனும் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். ராசிநாதன் செவ்வாய் 10-ல் உச்ச ராசியில் உலவுவது குறிப்பிடத்தக்கதாகும். எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். மனத்துணிவு கூடும்.எதிரிகள் ஓடி ஒளிவார்கள். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகள் சேரும். சொத்துகளால் ஆதாயமும் கிடைக்கும். மாணவர்களது நிலை உயரும்.
வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். வாரப் பின்பகுதியில் செலவுகள் அதிகரிக்கும். சிக்கன நடவடிக்கை தேவை. 3-ம் தேதி முதல் குரு 5-மிடம் மாறுவதால் மக்களாலும்பெற்றோராலும் நலம் உண்டாகும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மனத்தில் தெளிவு பிறக்கும். சாதுக்கள், மகான்கள் ஆகியோரது தரிசனம் கிடைக்கும். பொருள் வரவு கூட வழி பிறக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 27, 28, டிசம்பர் 1
திசைகள்: தென்மேற்கு, தெற்கு, வடக்கு, தென்கிழக்கு..
நிறங்கள்: புகை நிறம், வான் நீலம், பச்சை, சிவப்பு.
எண்கள்: 4, 5, 6, 9.
பரிகாரம்: விநாயகரை வழிபடவும். சூரிய நமஸ்காரம் செய்யவும். கண் பார்வையற்றவர்களுக்கு உதவி செய்வது நல்லது.
ரிஷபம்
உங்கள் ராசிக்கு 6-ல் சனியும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். தொலைதூரத் தொடர்பு ஓரளவு பயன்படும். நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சி காணலாம். பொது நலப்பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் பொருட்கள் லாபம் தரும். கறுப்பு, கருநீல நிறப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும்.
ஆன்மிகவாதிகள், அறநிலையப் பணியாளர்கள் ஆகியோருக்கெல்லாம் அனுகூலமான போக்கு தென்படும். வாழ்க்கைத்துணைவரால் நல்லதும் அல்லாததுமான பலன்கள் கலந்தவாறு ஏற்படும். 3-ம் தேதி முதல் குரு 4-மிடம் மாறுவதால் தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். நிலபுலங்களால் ஓரளவு ஆதாயம் கிடைத்துவரும். மாணவர்கள் தங்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள். மக்கள் நலனில் அக்கறை செலுத்திவருவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 27, 28, டிசம்பர் 1, 2.
திசைகள்: வடமேற்கு, மேற்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, நீலம்..
எண்கள்: 7, 8.
பரிகாரம்: குரு, ராகு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. பிறரிடம் சுமுகமாகப் பழகவும்.
மிதுனம்
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 6-ல் சூரியன், புதன் ஆகியோரும் 10-ல் கேதுவும் சஞ்சரிப்பதால் நிர்வாகத்திறமை கூடும். காரியத்தில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். இனிமையாகவும்திறமையாகவும் பேசி மற்றவர்களைக் கவருவீர்கள். கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் ஏற்படும். எலெக்ட் ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும்.
எதிரிகள் கட்டுக்குள் அடங்கி இருப்பார்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். 4-ல் ராகுவும் 8-ல் செவ்வாயும் இருப்பதால் சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம்; எச்சரிக்கை தேவை. சுக்கிரன் 6-ல் இருப்பதால் கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் பிரச்னைகள் சூழும். ஆடவர்களுக்குப் பெண்களால் சங்கடம் உண்டாகும். 3-ஆம் தேதி முதல் குரு 3-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. தொழில் ரீதியாகச் சில பிரச்னைகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 1, 2.
திசைகள்: வடகிழக்கு, வடமேற்கு, கிழக்கு, வடக்கு..
நிறங்கள்: மெரூன், பச்சை, பொன் நிறம், மஞ்சள், ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 5, 7.
பரிகாரம்: செவ்வாய்க்கும் ராகுவுக்கும் சுக்கிரனுக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது.
கடகம்
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 5-ல் சுக்கிரனும் உலவுவதால் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். புதியவர்களது தொடர்பு ஆக்கம் தரும். ஆராய்ச்சியாளர்கள், புகழும் பொருளும் பெறுவார்கள். வண்டி, வாகனங்களால் லாபம் கிடைக்கும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். கணவன் மனைவி உறவு நிலை சீராகவே இருந்துவரும்.
மக்களால் அளவொடு நலம் உண்டாகும். 4-ல் சனியும், 9-ல் கேதுவும் இருப்பதால் பெற்றோர் நலனில் கவனம் தேவை. அலைச்சல், உழைப்பு ஆகியவை அதிகரிக்கும்.பிறரிடம் கோபப்படாமல் பேசிப் பழகுவது நல்லது. வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியம். 3-ம் தேதி முதல் குரு 2-மிடம் மாறுவதால் பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் அமைதி காணலாம். பேச்சாற்றல் வெளிப்படும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நல்லவர்களின் தொடர்பு நலம் தரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 27, 28. டிசம்பர் 1.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: புகை நிறம், இளநீலம், வெண்மை...
எண்கள்: 4, 6, 9.
பரிகாரம்: சனிப் பிரீதி செய்து கொள்வது நல்லது. விநாயகரை வழிபடவும்.
சிம்மம்
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 4-ல் புதனும் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் உலவுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மனத்தில் தன்னம்பிக்கை கூடும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். இன் ஜினீயர்களது நிலை உயரும். எதிரிகள் ஓடிஒளிவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களிலும்; போட்டி பந்தயங்களிலும் வெற்றி கிட்டும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். நண்பர்கள், உறவினர்களது வருகை மனத்துக்குத் தெம்பூட்டும்.
புதிய சொத்துகளும் பொருட்களும் சேரும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். வியாபாரிகளுக்கு லாபம் கூடும்.மாணவர்களது நோக்கம் நிறைவேறும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் புகழ் பெறுவார்கள். வாரப் பின்பகுதியில் சிறுசிறு இடர்ப்பாடுகள் உண்டாகும். மனக்குழப்பம் ஏற்படும். பயணத்தின்போது விழிப்புடன் இருப்பது நல்லது. 3-ஆம் தேதி முதல் குரு ஜன்ம ராசிக்கு மாறுவதும் சிறப்பாகாது. அலைச்சல் கூடவே செய்யும். இடமாற்றம் உண்டாகும். பிற மொழி, மதக்காரர்களிடம் எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 27, 28.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடக்கு, மேற்கு.
நிறங்கள்: நீலம், பச்சை, சிவப்பு, வெண்மை. , .
எண்கள்: 5, 6, 8, 9.
பரிகாரம்: விநாயகரையும் துர்க்கையையும் வழிபடவும்.
கன்னி
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் சுக்கிரனும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். அரசு சம்பந்தமான காரியங்கள் இப்போது நிறைவேறும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.
எதிரிகள் அடங்கி இருப்பார்கள். ராசிநாதன் புதன் 3-ல் இருப்பதால் வியாபாரத்திலும் தொழிலிலும் அதிக கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை செலுத்தினால்தான் முன்னேற முடியும். ஜன்ம ராசியில் ராகுவும் 7-ல் கேதுவும் இருப்பதால் பிறரிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவது நல்லது. பயணத்தின்போது விழிப்புத் தேவை. 3-ம் தேதி முதல் குரு 12-மிடம் மாறுவதால் சுபச் செலவுகள் கூடும். நண்பர்கள், உறவினர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 27, 28, டிசம்பர் 1.
திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, இளநீலம், பொன் நிறம், ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 6.
பரிகாரம்: ராகு, கேது, ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது. திருமாலை வழிபடவும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
14 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago