வார ராசிபலன் 26-11-2015 முதல் 2-12-2015 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

By சந்திரசேகர பாரதி

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ல் உலவுகிறார். புதன், குரு, ராகு, ஆகியோரது சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் குதூகலம் கூடும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு உண்டாகும். பேச்சில் திறமை பளிச்சிடும். நல்ல தகவல் வரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். பண நடமாட்டம் அதிகரிக்கும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். செல்வாக்கும் மதிப்பும் உயரும். போட்டிக்களில் வெற்றி கிடைக்கும்.

பெண்களுக்கு பிரச்சினைகள் சூழும். எட்டில் சூரியன், சனி இருப்பதால் தந்தை நலனில் கவனம் தேவை. அரசுப் பணிகளில் கவனமுடன் ஈடுபடவும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும். வாரப் பின்பகுதியில் சொத்துக்கள் சேரும். கடல் வாணிபம் லாபம் தரும். எதிரிகள் விலகிப் போவார்கள். தாய் நலம் சீராகும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும். 30-ம் தேதி முதல் வாழ்க்கைத்துணை நலம் சீராகும். மாதத்தின் முதல் நாளில் அதிக கவனம் தேவை. மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 27, 29, 30, டிசம்பர் 2.

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தெற்கு, வடக்கு.

‎நிறங்கள்: சிவப்பு, பொன்நிறம்.

எண்கள்: 3, 4, 5, 9. ‎

பரிகாரம்: சூரியனுக்கும் சனிக்கும் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது. சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்களைத் தானமாக வழங்கவும்.



ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும், 11-ல் கேதுவும் உலவுவதால் மனமகிழ்ச்சி கூடும். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். கலைத்துறை ஊக்கம் தரும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்களின் சேர்க்கை நிகழும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பேச்சாற்றல் வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.

நல்ல தகவல் வந்து சேரும். வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் உண்டாகும். எலக்ட் ரானிக், கம்ப்யூட்டர் துறையில் லாபம் உண்டு. 30-ம் தேதி முதல் எதிர்ப்புக்கள் சற்று அதிகரிக்கும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிவரும். 1-ம் தேதி முதல் புதன் 8-ம் இடத்திற்கு மாறி, குருவின் பார்வையைப் பெறுவதால் வியாபாரிகளுக்கு லாபம் கூடும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை உருவாகும். பக்தி மார்க்கம், ஞானமார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 27, 29, 30, டிசம்பர் 2.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு .

நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம்.

எண்கள்: 6, 7.

பரிகாரம்: முருகனுக்கும் துர்க்கைக்கும் அர்ச்சனை செய்து வழிபடுவது நலல்து.



மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும் 6-ல் சூரியனும் புதனும் சனியும், 10-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். குடும்ப முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவீர்கள். இடமாற்றம் உண்டாகும். மதிப்பு உயரும். உழைப்புக்கும் திறமைக்கும் பயன் கிடைத்துவரும். சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதத் துறையினர் ஊக்கம் பெறுவார்கள். பொருட்சேர்க்கை நிகழும். மாதர்களது நிலை உயரும். மாணவர்களது நோக்கம் நிறைவேறும். அரசுப்பணிகளில் நல்ல திருப்பம் உண்டாகும்.

முக்கியஸ்தர்களும், மேலதிகாரிகளும் உங்களுக்கு உதவுவார்கள். வாரப்பின்பகுதியில் பணவரவு அதிகரிக்கும். கடல் வாணிபம் லாபம் தரும். வெண்மையான பொருட்களால் லாபம் கிடைக்கும். பேச்சில் திறமை கூடும். ஆன்மிக, அறநிலையப்பணியாளர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. 30-ம் தேதி முதல் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். 1-ஆம் தேதி முதல் புதன் 7-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. வியாபாரத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள் : நவம்பர் 27, 29, 30, டிசம்பர் 2.

திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு

நிறங்கள்: நீலம், பச்சை, மெரூன்,ஆரஞ்சு.

எண்கள்: 1, 5, 6, 7, 8.

பரிகாரம்: செவ்வாய், ராகு, குரு ஆகியோருக்குப் பிரீதி செய்து கொள்ளவும்.



கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 3-ல் செவ்வாயும் ராகுவும் சுக்கிரனும் உலவுவதால் முக்கியமான எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். பொருளாதாரம் உயரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். பேச்சில் திறமை வெளிப்படும். செயலில் வேகம் கூடும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். கடல் சார்ந்த தொழில்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு லாபம் அதிகம் கிடைக்கும்.

பயணம் அனுகூலம் தரும். புதியவர்களின் நட்பும் அனுகூலமும் உண்டாகும். கலைத்துறையினருக்கு வாய்ப்புக்கள் அதிகரிக்கும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். 5-ல் சூரியனும், புதனும் சனியும் உலவுவதால் மக்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு, குரு பலத்தால் விலகும். 30-ம் தேதி முதல் சுக்கிரன் 4-ல் இடம் மஆறுவதால் சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். புதிய சொத்துக்கள் சேரும். 1-ம் தேதி முதல் வியாபாரம் பெருகும். மாணவர்களது நோக்கம் ஈடேறும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 27, 29, 30, டிசம்பர் 2.

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு..தெற்கு.

நிறங்கள்: புகை நிறம், இளநீலம், பொன் நிறம், சிவப்பு.

எண்கள்: 3, 4, 6, 9.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடவும்.



சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும், 4-ல் புதனும் உலவுவது சிறப்பாகும். முக்கியமான காரியங்கள் இனிது நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உதவிபுரிவார்கள். சுபச் செலவுகள் சற்று அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புக்கள் கூடிவரும். மாதர்களது எண்ணம் ஈடேறும். புதிய ஆடை, அணிகலன்கள் சேர்க்கை நிகழும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு, கமிஷன், ஏஜன்சி இனங்களால் வருவாய் கிடைக்கும்.

2-ல் செவ்வாயும் ராகுவும், 4-ல் சூரியனும் சனியும் இருப்பதால் குடும்ப நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. பயணத்தின்போது பாதுகாப்பு தேவை. நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும். முன்பின் தெரியாதவர்களை நம்பி ஏமாற வேண்டாம். 30-ம் தேதி முதல் சுக்கிரன் 3-ம் இடத்திற்கு மாறுவதால் கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். பெண்களால் ஆடவர்களுக்கு நலம் உண்டாகும். 1-ம் தேதி முதல் புதன் 5-ம் இடத்திற்கு மாறுவதால் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். அறிவாற்றல் பளிச்சிடும். ஆதாயம் கூடும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 27, 29, 30, டிசம்பர் 2.

திசைகள்: தென்கிழக்கு..வடக்கு.

நிறங்கள்: வான்நீலம், வெண்மை.

எண்கள்: 5, 6.

பரிகாரம்: ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி செய்து கொள்ளவும். வாசிக்கலாம்.



கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசியில், சுக்கிரனும் 3-ல் சூரியனும் சனியும் உலவுவது சிறப்பாகும். தொலைதூரத் தொடர்பால் அனுகூலம் உண்டு. தந்தை நலம் சிறக்கும். அவரால் அனுகூலம் உண்டு. கலைஞர்கள் நிலை உயரும். மாதர்கள் நோக்கம் நிறைவேறப் பெறுவார்கள். தொழில் விருத்தி அடையும். ஜலப்பொருட்களால் ஆதாயம் கிடைத்துவரும். பொது நலப்பணிகளில் ஆர்வம் கூடும்.

நிர்வாகத்திறமை வெளிப்படும். 30-ம் தேதி முதல் பொருளாதார நிலை உயரும். அக்கம்பக்கத்தவர், உடன்பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். 1-ம் தேதி முதல் வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு செழிப்பான பாதை புலப்படும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். மக்களால் செலவுகள் சற்று கூடும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிக்ள்: நவம்பர் 27, 29, 30, டிசம்பர் 2.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, கிழக்கு.

நிறங்கள்: வெண்மை, நீலம்

எண்கள்: 1, 6, 8.

பரிகாரம்: செவ்வாய், ராகு, கேதுவுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

12 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்