மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும், 3-ல் சுக்கிரனும், 6-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. வார ஆரம்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். வார நடுப்பகுதியில் நண்பர்களால் நலம் ஏற்படும். காடு, மலைகளில் தொழில் புரிபவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். வாரப்பின்பகுதியில் பணப் புழக்கம் கூடும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். மாணவர்களது திறமை பளிச்சிடும். குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். நல்லவர்களின் நட்புறவை நாடிப் பெறுவதும் அவர்களது ஆலோசனைகளின்படி செயல்படுவதும் நல்லது. தொழிலாளர்கள், சுரங்கப் பணியாளர்கள், விவசாயிகள் கவனமுடன் இருக்க வேண்டும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 14, 15, 19, 20.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு,கிழக்கு.
நிறங்கள்: புகை நிறம், சிவப்பு, இளநீலம், வெண்மை, பச்சை.
எண்கள்: 1, 4, 5, 6.
பரிகாரம்:
சனிப் பிரீதி செய்யவும். ஆஞ்சநேயரை வழிபடவும்.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 2-லும் கேது 11-லும் உலவுவது சிறப்பு. ஆன்மிக, அறநிலையப் பணிகளில் ஈடுபாடு கூடும் நேரமிது. ஜலப் பொருட்கள் லாபம் தரும். எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். வார நடுப்பகுதியில் செலவுகள் சற்றுக்கூடும். பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. இடமாற்றம் உண்டாகும். வாரப் பின்பகுதியில் மதிப்பு உயரும். செல்வாக்குக் கூடும்.
கலைத்துறை ஆக்கம் தரும். பெண்களின் நோக்கம் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக வேண்டாம். புதிய துறைகளில் அதிகம் முதலீடு செய்யலாகாது.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 14, 15, 19, 20.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம்.
எண்கள்: 6, 7.
பரிகாரம்:
குரு, ராகுவுக்கு பிரீதி, பரிகாரங்கள் செய்யவும். வேதம் படித்தவர்களுக்கு உதவவும். துர்க்கையை வழிபடவும்.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும், 2-ல் குருவும், 6-ல் சனியும், 10-ல் கேதுவும், 11-ல் சூரியனும் உலவுவதால் காரியத்தில் வெற்றி கிட்டும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் கூடும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மதபோதகர்கள் நிலை உயரப் பெறுவார்கள். முக்கியமான எண்ணங்கள் சில இப்போது நிறைவேறும். வாரப் பின்பகுதியில் செலவுகள் கூடும்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசு விவகாரங்களில் விழிப்புத் தேவை. உடன்பிறந்தவர்களாலும் தந்தையாலும் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். பெண்களின் எண்ணம் ஈடேறும். 15-ம் தேதி முதல் கைப்பொருள்கள் மீது கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 14, 15, 19, 20.
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, பொன் நிறம், நீலம்.
எண்கள்: 1, 3, 6, 7, 8.
பரிகாரம்:
திருமால், சுப்பிரமணியரை வழிபடவும்.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 10-ல் சூரியனும், 11-ல் செவ்வாய், புதனும், 12-ல் சுக்கிரனும் உலவுவதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். செய்துவரும் தொழில் விருத்தி அடையும். புதிய பதவி பட்டங்கள் உங்களைத் தேடிவரும். முக்கியமானவர்களும் மேலதிகாரிகளும் ஆதரவாக இருப்பார்கள். இயந்திரப் பணிகள் லாபம் தரும். இன்ஜினீயர்களது நிலை உயரும்.
தந்தையாலும், உடன்பிறந்தவர்களாலும் அனுகூலம் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். மாணவர்களது நிலை உயரும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பெண்களின் நோக்கம் நிறைவேறும். மாணவர்களது நிலை உயரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். பிள்ளைகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்பட்டு விலகும். குடும்பத்தில் திருப்தி நிலவும். பொருளாதார நிலை உயரும். கம்பீரமாக நடைபோடுவீர்கள். அரசாங்க உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 15, 19, 20.
திசைகள்: தெற்கு, கிழக்கு, தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, புகை நிறம், இளநீலம், பச்சை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 4, 5, 6, 9.
பரிகாரம்: சனி வழிபாடு அவசியம்.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்குச் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் முக்கியமான காரியங்கள் இப்போது நிறைவேறும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத் திறமை வெளிப்படும். தந்தையாலும் உடன்பிறந்தவர்களாலும் அனுகூலம் உண்டாகும்.
புதிய பதவிகளும் பட்டங்களும் தேடிவரும். நிலபுலங்கள் லாபம் தரும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். மாணவர்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள். கலைஞர்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். பெண்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். வார முன்பகுதியைக் காட்டிலும் பின்பகுதி மிகச் சிறப்பாக அமையும். காடு, மலைகளில் தொழில் புரிபவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 19, 20.
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, தெற்கு, கிழக்கு.
நிறங்கள்: இளநீலம், சிவப்பு, பச்சை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 5, 6, 9.
பரிகாரம்:
சனி, ராகு, கேதுவுக்கு அர்ச்சனைகள் செய்யவும். ஆஞ்சநேயர், துர்க்கை, விநாயகரை வழிபடுவதன் மூலம் தடைகள் விலகும்.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 9-ல் புதனும், 10-ல் சுக்கிரனும், 11-ல் குருவும் உலவுவது சிறப்பு. உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்துவரும். வியாபாரம் பெருகும். தொழிலாளர்களது கோரிக்கைகளில் சில நிறைவேறும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். தெய்வப் பணிகளிலும் தர்மப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். நல்லவர்கள் நலம் புரிவார்கள். பணப் புழக்கம் அதிகமாகும்.
பொன்னும் பொருளும் சேரும். ஜலப் பொருட்களால் ஆதாயம் கிடைத்துவரும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மதபோதகர்கள் அனுகூலமான போக்கைக் காண்பார்கள். பொன் நிறப் பொருட்கள் லாபம் தரும். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் அதற்கான பயனும் கிடைக்கும். தந்தை நலனில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 14, 15, 19, 20.
திசைகள்: மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 6, 8.
பரிகாரம்:
சூரியன், ராகு, கேதுவுக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்யவும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
7 hours ago
ஆன்மிகம்
9 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago