துலாம் ராசி வாசகர்களே!
சூரியன், குரு, சுக்கிரன், ராகு அனுகூலமாக உலவுகிறார்கள். நல்ல தகவல் வந்துசேரும். நண்பர்களாலும், உறவினர்களாலும் ஓரிரு காரியங்கள் நிறைவேறும். மக்கள் நலம் கவனிப்பின்பேரில் சீராக இருந்துவரும். தந்தையால் நலம் உண்டாகும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை கூடும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்படும்.
சமாளிப்பீர்கள். 5-ல் கேது இருப்பதால் மனத்தில் ஏதேனும் சலனம் இருந்துவரும். கேதுவை குரு பார்ப்பதால் மோசமான நிலை ஏற்படாது. புதன்பலம் குறைந்திருப்பதால் வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. 2-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. கணவன் மனைவி உறவு நிலை பாதிக்கும். வீண் செலவுகள் ஏற்படும். பெண்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் தொல்லைகள் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 3, 4, 6.
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெண்மை, பொன் நிறம், புகைநிறம், ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 4, 6.
பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து, நெய் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.
விருச்சிக ராசி வாசகர்களே!
புதன், சுக்கிரன், ராகு அனுகூலமாக உலவுகிறார்கள். சூரியனும் குருவும் பரிவர்த்தனையாக இருப்பதால் நலம் உண்டாகும். செவ்வாய் ஜன்ம ராசியில் தன் சொந்த வீட்டில் இருப்பதால் ஓரளவு நலம் புரிவார். பேச்சில் திறமை வெளிப்படும். நல்ல தகவல் வந்து சேரும். புதிய ஆடை, அணிமணிகள் சேர்க்கை நிகழும். பயணத்தால் நலம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புள்ள தொழில்கள் லாபம் தரும். மக்களால் ஓரிரு காரியங்கள் இனிது நிறைவேறும். பூர்விகத் தொழிலில் வளர்ச்சி காணலாம். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள்.
2-ம் தேதி முதல் சுக்கிரன் ஐந்தாமிடத்திற்கு மாறுவது நல்லது. கணவன் மனைவி உறவு நிலை சீராகும். சிலருக்கு காதல் திருமணம் ஆகும். மகன் அல்லது மகளுக்கு சுபச் செலவுகள் செய்ய வேண்டிவரும். ஜன்ம ராசியில் சனியும் 4-ல் கேதுவும் இருப்பதால் உங்கள் நலனிலும், தாயாரின் நலனிலும் அக்கறை தேவைப்படும். சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 3, 4, 6.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: புகை நிறம், கருஞ்சிவப்பு, இளநீலம் .
எண்கள்: 4, 5, 6, 9.
பரிகாரம்: ஹனுமன் சாலீஸா படிப்பதும் கேட்பதும் சிறப்பாகும். விநாயகருக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது.
தனுசு ராசி வாசகர்களே!
குரு, சுக்கிரன், கேது அனுகூலமாக உலவுகிறார்கள். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். நல்ல எண்ணங்கள் மனத்தில் உருவாகும். பணவரவு அதிகமாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். புதிய பட்டம், பதவிகள் கிடைக்கும். நிலபுலங்கள் லாபம் தரும். தெய்வப்பணிகள் நிறைவேறும். சாதுக்களின் தரிசனம் கிடைக்கும்.
புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். 2-ம் தேதி முதல் சுக்கிரன் 4-ம் இடத்திற்கு மாறி, பலம் பெறுவதால் வாகன யோகம் உண்டாகும். புதிய வீடு அமையும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். சுகானுபவம் உண்டாகும். 12-ல் செவ்வாயும் சனியும் இருப்பதால் எதிர்பாராத செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். விளையாட்டின்போதும், சுரங்கப்பணிகளில் ஈடுபடும்போதும் எச்சரிக்கை தேவை. நீர்ப்பகுதிகளில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 3, 4, 6.
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: இளநீலம், பொன்நிறம், மெரூன்.
எண்கள்: 3, 6, 7.
பரிகாரம்: திருமுருகனையும், ஆஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது. கண், கால் ஊனமுள்ளவர்களுக்கு உதவவும்.
மகர ராசி வாசகர்களே!
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் அரசுப்பணிகளில் நல்ல திருப்பம் உண்டாகும். முக்கியஸ்தர்களின் தொடர்பால் நலம் பெறுவீர்கள். துணிவும் தன்னம்பிக்கையும் அதிகமாகும். நிலம், மனை, வீடு, வாகனங்களால் ஆதாயம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களாலும், தந்தையாலும் அனுகூலம் ஏற்படும். தொழிலாளர்களது நிலை உயரும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.
மாணவர்களது நோக்கம் நிறைவேறும். மாதர்களது எண்ணம் ஈடேறும்,. புதிய ஆடை, அணிமணிகள் சேரும். பொது நலப்பணியாளர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் விழிப்புத் தேவை. பயணத்தால் சங்கடம் ஏற்படும். வீண்வம்பு வேண்டாம். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. 2-ம் தேதி முதல் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். தகவல் தொடர்பு மூலம் பயன் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட தேதிகள்:, ஏப்ரல் 3, 4, 6.
திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: நீலம், சிவப்பு, ஆரஞ்சு .
எண்கள்: 1, 5, 6, 8, 9.
பரிகாரம்: நாகரை வழிபடவும். குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது.
கும்ப ராசி வாசகர்களே!
செவ்வாய், குரு, சுக்கிரன், சனி அனுகூலமாக உலவுகிறார்கள். எதிர்ப்புக்களை வெல்லும் சக்தி பிறக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நிகழும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டாகத் தொழில் செய்பவர்களுக்கு ஆதாயம் அதிகமாகும். உழைப்பாளர்களுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். பொருளாதார நிலை உயரும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும்.
மதிப்பும் அந்தஸ்தும் உயரும். புதன் மூன்றில் இருப்பதால் வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகைத் துறையினர் பொறுப்புடன் செயல்படவும். புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் கூடாது. இரண்டாம் தேதி முதல் புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். ஜலப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகும். அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 3, 4, 6.
திசைகள்: வடகிழக்கு, தெற்கு, மேற்கு,, தென்கிழக்கு.
நிறங்கள்: நீலம், பொன் நிறம், சிவப்பு.
எண்கள்: 3, 6, 8, 9.
பரிகாரம் : விநாயகரை வழிபட்ட பின்பு எக்காரியத்திலும் ஈடுபடுவது நல்லது. மகாவிஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது. ஏழை மாணவர்கள் படிக்க உதவி செய்வதும் சிறப்பான பரிகாரமாகும்.
மீன ராசி வாசகர்களே!
புதன், சுக்கிரன், ராகு அனுகூலமாக உலவுகிறார்கள். செவ்வாய் 9 – ல் இருந்தாலும் தன் சொந்த வீட்டில் இருப்பதால் ஓரளவு நலம் புரிவார். முக்கியமான ஓரிரு காரியங்கள் வார முன்பகுதியில் நிறைவேறும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். பேச்சாற்றல் வெளிப்படும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம்.
கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். அயல்நாட்டுத் தொடர்பு வலுக்கும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். ஜன்மராசியில் சூரியனும் 6-ல் குருவும் இருப்பதால் உடல் நலம் அவ்வப்போது பாதிக்கும். தலை, அடிவயிறு சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். தந்தை நலனிலும் கவனம் தேவைப்படும். 2-ம் தேதி முதல் புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். கலைஞானம் கூடும். பெண்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 3, 6.
திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு, வடக்கு, தெற்கு.
நிறங்கள்: புகை நிறம், சிவப்பு, இளநீலம், பச்சை.
எண்கள்: 4, 5, 6, 9.
பரிகாரம்: சூரியனையும், குருவையும் வழிபடுவது நல்லது. வேதம் பயில்பவர்களுக்கு உதவி செய்வது நல்லது
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 hour ago
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago