சிங்கப் பெருமாள் கோவில்: திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா

By விஷ்ணு

அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் திருக்கோவில், திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா (சம்ப்ரோக்‌ஷணம்) வரும் புதன்கிழமை (19.03.2014)

அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அஷ்ட பந்தன மஹா சம்ப்ரோக்‌ஷணம் (திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா) இது. இக்கோவில் சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது.

இத்திருத்தலத்தில் உள்ள அனைத்து சன்னதிகள், விமானங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ பக்த ஆஞ்ச நேயருக்கு நூதன விமானம் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. விஜய வருடம் பங்குனி மாதம் முதல் தேதி (15.03.2014) அன்று மாலை யக்ஞங்கள் தொடங்கப்படுகின்றன.

5ஆம் தேதி (19.03.2014) புதன் கிழமையன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் சம்ப்ரோக்‌ஷணம் நடைபெற இருக்கிறது. அன்று மாலை சேஷ வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா வருவார் என்று பெருமாள் கோவில், ஸ்ரீ ஆஞ்சநேயர் நூதன விமானம் புதுப்பித்தல் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ள சன்னதி தெரு நண்பர்கள் டிரஸ்டைச் சேர்ந்த கே. வாசுதேவன் தெரிவிக்கிறார்.

பெருமாள் இங்கே பர்வதத் தையே தன் திருமேனி யாகக் கொண்டுள்ளதால் இத்திருத்தலத்தில் கிரிவலம் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

9 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்