வார ராசி பலன் 05-03-2015 முதல் 11-03-2015 வரை (துலாம் முதல் மீனம் வரை)

By சந்திரசேகர பாரதி

துலாம் ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாயும், கேதுவும் உலவுவதாலும் குரு 10-ல் இருந்தாலும் வக்கிரமாக உலவுவதாலும் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்ப்புகள் விலகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். இயந்திரப்பணியாளர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். சொத்து சேர்க்கை உண்டு. வார முன்பகுதியில் ஆதாயம் கூடும். வார நடுப்பகுதியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை தேவை.

வாரக்கடைசியில் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். முக்கியமான காரியங்கள் நிறைவேறும். மக்களால் நலம் உண்டாகும். வாழ்க்கைத்துணை நலம் பாதிக்கும். கூட்டாளிகளால் பிரச்னைகள் சூழும். கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் இருக்கும். சுக்கிரன் தன் உச்சராசியில் இருப்பதாலும் குருவால் பார்க்கப்படுவதாலும் சங்கடங்கள் குறையும்.

எண்கள்: 3, 5, 7, 9.

பரிகாரம்: பராசக்தியை வழிபடவும். லட்சுமி அஷ்டகம் சொல்லவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 5, 9.

திசைகள்: வடமேற்கு, தெற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: மெரூன், பச்சை, பொன் நிறம்.

விருச்சிக ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 4-ல் பதனும் 5-ல் சுக்கிரனும் 9-,ல் குருவும் 11-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கணிதம், விஞ்ஞானம், எழுத்து, பத்திரிகைத் துறையினர் லாபம் பெறுவார்கள். பதவிகளும் பொறுப்புக்களும் சிலருக்கு கிடைக்கும்.

அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். கலைத்துறையினருக்கு சுபிட்சம் கூடும். மாதர்களது எண்ணம் ஈடேறும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். தெய்வ தரிசனம் கிடைக்கும். வாரக்கடைசியில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். அலைச்சலும் உழைப்பும் கூடும். மனம் சலனமயமாக இருக்கும். சனி, செவ்வாய், கேது ஆகியோரை குரு பார்ப்பதால் சங்கடங்கள் நிச்சயம் குறையும்.

பரிகாரம்: செவ்வாய், சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. ஹனுமன் சாலீஸா படிக்கவும் கேட்கவும் செய்யலாம். விநாயகரை வழிபட்டு நாளைத் தொடங்கவும்.

எண்கள்: 3, 4, 5, 6.

நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், இளநீலம், பொன் நிறம், பச்சை.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 5, 8, 9.

திசைகள்: வடக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.

தனுசு ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் 4-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். அரசு சம்பந்தமான காரியங்கள் இனிது நிறைவேறும். பெரியவர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்கு உதவிபுரிவார்கள். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். அரசு உதவி கிடைக்கும்.

பயணத்தால் காரியம் நிறைவேறும். அயல்நாட்டுத் தொடர்பு ஆக்கம் தரும். வியாபாரிகளும் மாணவர்களும் பொறுப்புணர்ந்து செயல்படுவது நல்லது. தாய்நலனில் கவனம் தேவை. வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. நிலம், மனை, வீட்டுக் காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. சொந்தத் தொழிலில் கவனம் தேவை. பணவிஷயத்தில் எச்சரிக்கை அவசியம்.

பரிகாரம்: செவ்வாய், சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபடவும்.

நிறங்கள்: ஆரஞ்சு, இளநீலம், வெண்மை.

எண்கள்: 1, 4, 6.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 8, 9.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.

மகர ராசி வாசகர்களே!

உங்கள் ராசிநாதன் சனி 11-ம் இடத்தில் உலவுவது சிறப்பாகும். செவ்வாய், புதன், சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். மனத்துணிவு கூடும். சமுதாயப்பணியினர் மதிப்பைப் பெறுவர். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

தந்தையால் சிறு சங்கடம் ஏற்படும். வீண்வம்பு வேண்டாம். கண், இதயம் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். வியாபாரம், கணிதம், விஞ்ஞானம், எழுத்து, பத்திரிகைத் துறையினருக்கு அனுகூலம் உண்டு. கேதுவைக் குரு பார்ப்பதால் ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மனதில் தன்னம்பிக்கையும் கூடும். தெளிவும் பிறக்கும்.

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடமேற்கு.

நிறங்கள்: நீலம், பச்சை, சிவப்பு, வெண்மை, மெரூன்.

எண்கள்: 5, 6, 7, 8, 9.

பரிகாரம்: சூரிய வழிபாடு செய்வதும் பார்வையற்றவர்களுக்கு உதவுவதும் நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 8, 9.

கும்ப ராசி வாசகர்களே!

உங்கள் ராசிநாதன் சனி 10-ல் உலவுவது சிறப்பாகும். சுக்கிரன் 2-ல் சஞ்சரிப்பதும் நல்லது. நல்லவர்களின் நட்புறவு நலம் தரும். பொதுப்பணிகளில் ஈடுபாடு கூடும். தொழிலாளர்களது நிலை உயரும். கருநீலப் பொருட்கள் லாபத்தைத் தரும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். புதிய ஒப்பந்தங்கள் உண்டு. சமுதாய சீர்திருத்தப் பணிகளில் ஆவல் மேலோங்கும். பெண்களுக்கு மனமகிழ்ச்சி அடையும் செய்திகள் வந்து சேரும்.

புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களின் சேர்க்கை உண்டு. நிர்வாகத் துறையினரின் மதிப்பு உயரும். வியாபார நிறுவனங்கள் தொடர்புள்ளவர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். தம்பதியர் உறவு நிலை சீராகும். குழந்தைகளின் படிப்பில் கவனமாக இருக்கவும். நெருப்பு, மின்சாரம், ஆயுதம், நீரால் பாதிக்கப்பட நேரலாம். பயணத்தின்போது விழிப்பு அவசியம். எக்காரியத்திலும் அவசரம் கூடாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 5, 9.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு.

நிறங்கள்: வெண்மை, நீலம்.

எண்கள்: 6, 8.

பரிகாரம்: கோளறு திருப்பதிகம் வாசிப்பது நல்லது. சர்ப்ப சாந்தி செய்து கொள்ளவும்.

மீன ராசி வாசகர்களே!

உங்கள் ராசியில் சுக்கிரனும் 5-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். மனத்தில் உற்சாகம் கூடும். மாதர்களது நிலை உயரும். புதிய ஆடை, அணிமணிகளும் அலங்காரப் பொருட்களும் சேரும். கேளிக்கைகள் மற்றும் விருந்துகளில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். காரியத்தில் வெற்றி கிடைக்கும்.

ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள், கூட்டுத் தொழில் புரிபவர்கள் அனுகூலம் காண்பார்கள். கண் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். இதய நோயாளிகள் விழிப்புடன் இருப்பது நல்லது. வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை. கோபத்தைக் குறைத்தால் குடும்பத்திலும் வெளிவட்டாரத்திலும் மதிப்பு உண்டு. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது அவசியமாகும்.

எண்கள்: 3, 6.

நிறங்கள்: இளநீலம், பொன் நிறம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 5, 8.

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு.

பரிகாரம்: சூரியன், புதன், ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்