துலாம் ராசி வாசகர்களே
குரு, ராகு ஆகியோர் சாதகமாக உலவுகிறார்கள். தெய்வப்பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு கூடும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். செய்து வரும் தொழிலில் முன்னேற்றம் காணலாம். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும்.
பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்துவரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். பெரியவர்களும் தனவந்தர்களும் ஆதரவாக இருப்பார்கள். மக்களால் அளவோடு நலம் உண்டாகும். சில சங்கடங்களும் ஏற்படும். அரசாங்கத்தாரால் அனுகூலம் ஏற்படும். வாரக் கடைசியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வாழ்க்கை வசதிகள் பெருகும். சுப காரியங்களுக்காக செலவு செய்வீர்கள். வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 14, 18.
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: சாம்பல் நிறம், பொன் நிறம்.
எண்கள்: 3, 4.
பரிகாரம்: மகாலட்சுமியைத் தாமரை மலர்களால் அலங்கரித்து, லட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திரம் படிப்பது நல்லது.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு அதிபதி செவ்வாய் ராசியிலேயே உலவுவது நல்லது. சூரியன், புதன், சுக்கிரன், ராகு ஆகியோர் சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் உயர் பதவிகளும் பட்டங்களும் தேடிவரும். நிர்வாக ஆற்றல் வெளிப்படும். அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கலைஞர்கள், மாதர்களுக்குச் சுபிட்சம் கூடும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் வலுக்கும். அதனால் ஆதாயம் கிடைக்கும்.
தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிட்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபாடும் அதனால் வருவாயும் கிடைத்துவரும். எதிரிகள் அடங்குவார்கள். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியம் நிறைவேறும். அரசு உதவியும் கிடைக்கும். வாரப்பின்பகுதியில் முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். ஜன்ம ராசியில் சனியும், 4-ல் கேதுவும் உலவுவதால் உடல் நலனில் கவனம் தேவை. தாய் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். அதிகம் உழைக்க வேண்டியதிருக்கும். சொத்துகள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 18, 19.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, வெண்சாம்பல் நிறம், இளநீலம், சிவப்பு.
எண்கள்: 1, 4, 5, 6, 9.
பரிகாரம்: ஆஞ்சநேயர், விநாயகரைத் தொடர்ந்து வழிபடுவது நல்லது.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 4-ல் சுக்கிரன், 9-ல் குரு உலவுவது சிறப்பு. 5-ல் சூரியன் இருந்தாலும் நலம் புரிவார். வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கூடிவரும். கூட்டாளிகள் ஒத்துழைப்புத் தருவார்கள். பெண்களால் நலம் உண்டாகும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். கலைஞர்களது நோக்கம் நிறைவேறும். அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்களுக்கு திறமைக்குரிய பயன் கிடைத்துவரும்.
தொலைதூரத் தொடர்பு பயன்படும். ஆன்மிகப்பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுபாடு கூடும். பூர்விகத் தொழில் லாபம் தரும். எதிர்பாராத செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைக்கவும். கண், கால், மார்பு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். நீர் நிறைந்துள்ள இடங்களுக்குச் செல்லும்போதும்; விளையாட்டு, விநோதங்களில் ஈடுபடும்போதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 14, 18, 19.
திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: வெண்மை, மெரூன், ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 6, 7.
பரிகாரம்: முருகனுக்குரிய ஸ்லோகங்களைச் சொல்லி வழிபடுவது நல்லது.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரன், 4-ல் புதன், 11-ல் செவ்வாய், சனி உலவுவது விசேஷம். எதிர்ப்புகளைக் கடந்து வாழ்வில் வெற்றி பெறுவீர்கள். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். கணவன்-மனைவி உறவு நிலை திருப்தி தரும். பெண்களுக்கு மன உற்சாகம் கூடும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். கூட்டாளிகளால் நலம் கூடும். இயந்திரப் பணிகள் லாபம் தரும்.
சொத்துகளால் ஆதாயம் கிடைத்துவரும். பொது நலப்பணிகளில் ஆர்வம் அதிகமாகும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். 2-ல் கேதுவும் 8-ல் ராகுவும் உலவுவதால் குடும்ப நலனில் அக்கறை தேவை. புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். பயணத்தின்போது பாதுகாப்பு தேவை. விஷ பயம் ஏற்படும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம். உடல் நலனில் கவனம் தேவை. வீண்வம்பு வேண்டாம். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 14, 19 (பிற்பகல்).
திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடக்கு.
நிறங்கள்: நீலம், சிவப்பு, வெண்மை, பச்சை.
எண்கள்: 5, 6, 8, 9.
பரிகாரம்: நாகர் வழிபாடு செய்வது நல்லது.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 7-ல் குரு, 10-ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால் பேச்சில் இனிமை கூடும். கலைஞர்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். பெண்களின் எண்ணம் நிறைவேறும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். பதவி, பட்டம் மற்றும் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். எதிரிகள் விலகுவார்கள். பண வரவு அதிகமாகும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
மேலதிகாரிகளும் முக்கியஸ்தர்களும் உதவுவார்கள். முக வசீகரம் கூடும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். நிர்வாகத்திறமையால் ஓரிரு சாதனைகளை ஆற்றுவீர்கள். புதன் பலம் குறைந்திருப்பதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் நஷ்டத்துக்கும் சங்கடங்களுக்கும் ஆளாகாமல் தப்பலாம். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. பிள்ளைகள் நலனில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 18, 19.
திசைகள்: மேற்கு, தெற்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, சிவப்பு, ஆரஞ்சு.
எண்கள்: 1, 6, 8, 9.
பரிகாரம் : மகாவிஷ்ணுவை வழிபடவும். விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதும் கேட்பதும் நல்லது.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசியில் சுக்கிரனும், 2-ல் புதனும், 6-ல் ராகுவும் உலவுவதால் பொருள்வரவு கூடும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத்திரவியங்களின் சேர்க்கை நிகழும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். பேச்சாளர்களுக்கு வரவேற்பு கூடும். நண்பர்களாலும் உறவினர்களாலும் அனுகூலம் ஏற்படும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் சிறக்கும். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.
கணவன்-மனைவி இடையே கருத்து ஒற்றுமை அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் வளர்ச்சி காணலாம். பயணத்தால் முக்கியமான காரியம் நிறைவேறும். தந்தையால் அளவோடு நலம் ஏற்படும். பிள்ளைகளால் சில இடர்பாடுகள் ஏற்பட்டு விலகும். பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. தேவைகளைச் சமாளிக்கச் சிலர் கடன் வாங்க வேண்டிவரும். வீண் செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்ற நவீன விஞ்ஞானத்துறைகள் லாபம் தரும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும்.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 18, 19.
திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, தெற்கு.
நிறங்கள்: வெண்மை, பச்சை, இளநீலம், புகை நிறம்.
எண்கள்: 4, 5, 6, 9.
பரிகாரம்: குரு, தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
2 hours ago
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago