வார ராசி பலன் 16-07-2015 முதல் 22-07-2015 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

By சந்திரசேகர பாரதி

மேஷ ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு அதிபதி செவ்வாய் 3-ல் சூரியனுடன் கூடி உலவுகிறார். புதன், குரு, சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். திடவீரபராக்கிரமம் வெளிப்படும். செயலில் வேகம் கூடும். செயற்கரிய காரியங்களையும் கூட திறம்பட ஆற்றுவீர்கள்.

இயந்திரப்பணிகள் லாபம் தரும். பொறியாளர்களது நிலை உயரும். அரசியல்வாதிகளுக்குச் செல்வாக்கு உயரும். அரசுப்பணியாளர்களின் நிலை திருப்தி தரும். போட்டிகளிலும் பந்தயங்களிலும் வெற்றி கிட்டும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். மக்களாலும், வாழ்க்கைத்துணைவியாலும் அனுகூலம் உண்டாகும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். பயணத்தால் ஓரிரு காரியங்கள் நிறைவேறும்.

பரிகாரம்: சனிபகவானை வழிபடவும்.

எண்கள்: 1, 3, 4, 5, 6, 9.

‎நிறங்கள்: பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, புகை நிறம், பொன்நிறம், இளநீலம், வெண்மை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 20, 21.

திசைகள்:வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, தெற்கு,வடக்கு.

ரிஷப ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும் 6-ல் சனியும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். வார ஆரம்பத்தில் சந்திரன், சூரியன், செவ்வாய் ஆகியோருடன் கூடி இரண்டில் உலவும் நிலை அமைவதால் குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்படும். வீண்வம்பு கூடாது. புதன் பலம் குறைந்திருப்பதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் நஷ்டத்துக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

விளையாட்டு விநோதங்களைத் தவிர்க்கவும். கலைஞர்களுக்கு எதிர்ப்புக்கள் இருந்தாலும் வளர்ச்சி காண வாய்ப்புக் கூடிவரும். புதிய ஆடை, அணிமணிகளும், அலங்காரப்பொருட்களும் சேரும். மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். உத்தியோகஸ்தர்களுக்கு அளவோடு நலம் உண்டாகும். 17-ம் தேதி முதல் அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் உண்டாகும்.

பரிகாரம்: முருகன்,விஷ்ணு,துர்க்கையை வழிபடவும்.

எண்கள்: 6, 7. 8.

நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 20, 21.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, மேற்கு.

மிதுன ராசி வாசகர்களே!

உங்கள் ராசிநாதன் புதன் இரண்டில் உலவுவது சிறப்பாகும். சுக்கிரன் மூன்றிலும், கேது 10-லும் உலவுவதால் சங்கடங்களைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். பேச்சாற்றால் அதிகரிக்கும். குடும்ப நலம் சீராக இருந்துவரும். பணநடமாட்டம் சற்று அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். மாணவர்களது திறமை பளிச்சிடும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.

அலைச்சல் கூடும் . ஆனாலும் பயனும் கிடைத்துவரும். உஷ்ணாதிக்கம் கூடும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. தொழில் அதிபர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முன்னேற்றம் காணக் குறுக்கீடுகள் முளைக்கும். மக்கள் நலனில் அக்கறை தேவைப்படும்.

எண்கள்: 5, 6, 7.

பரிகாரம்: வேதம் படித்தவர்களுக்கும் படிப்பவர்களுக்கும் உதவி செய்யவும். துர்க்கையையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது நல்லது.

திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: பச்சை, வான்நீலம், மெரூன்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 20, 21.

கடக ராசி வாசகர்களே!

உங்கள் ஜன்ம ராசிக்கு இரண்டில் குருவும் சுக்கிரனும் மூன்றில் ராகுவும் உலவுவதால் நல்ல எண்ணங்கள் மனதில் உருவாகும். அவை நிறைவேறவும் சந்தர்ப்பம் கூடிவரும். பேச்சில் இனிமையும் திறமையும் வெளிப்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். பண வரவு திருப்திகரமாக இருந்துவரும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். நல்லவர்கள் உங்களுக்கு நலம் புரிய முன்வருவார்கள்.

கலைத்துறை ஆக்கம் தரும். சொத்துக்களால் வருவாய் கிடைக்கும். பயணத்தால் அனுகூலம் ஏற்படும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். கடன் தொல்லை குறையத் தொடங்கும். செய்து வரும் தொழில் லாபம் தரும். புதிய முயற்சிகள் கைகூடும். வீண்செலவு வேண்டாம். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்: ஆதித்ய ஹிருதயம், கந்த சஷ்டி கவசம் படிப்பது நல்லது.

எண்கள்: 3, 4, 6.

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: புகை நிறம், இளநீலம், பொன் நிறம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 17, 18.

சிம்ம ராசி வாசகர்களே!

உங்கள் ராசிநாதன் சூரியன் லாப ஸ்தானத்தில் செவ்வாயுடன் கூடி உலவுவது மிகவும் சிறப்பாகும். குரு ஜன்ம ராசியில் இருந்தாலும் அவரது பார்வை பலத்தால் நலம் உண்டாகும். சுக்கிரன், சனி ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் மனதுக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைத்துவரும்.

சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல் நலம் சீராகும். புதிய ஆடை, அணிமணிகளும் அலங்காரப்பொருட்களும் சேரும். கலைத்துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். சமுதாய நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புக்கள் ஏற்படும். வீண்வம்பு வேண்டாம்.

எண்கள்: 1, 6, 8, 9.

பரிகாரம்:

மகாவிஷ்ணுவையும், துர்க்கை அம்மனையும் வழிபடுவது நல்லது. ஏழை மாணவர்கள் கல்வியில் உதவவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 20, 21.

திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, மேற்கு.

நிறங்கள்: இளநீலம், சிவப்பு,

கன்னி ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், செவ்வாய், ஆகியோரும் 11-ல் புதனும் 12-ல் சுக்கிரனும் உலவுவதால் செயலில் வேகம் கூடும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் ஏற்படும். மனதில் துணிவு கூடும். போட்டிகளில் வெற்றி கிட்டும். எதிரிகள் அடங்கியிருப்பார்கள். வியாபாரிகளுக்கு ஆதாயம் அதிகரிக்கும்.

மாணவர்களது நோக்கம் நிறைவேறும். அரசு விவகாரங்களில் அனுகூலமான போக்கு தென்படும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். முக்கியஸ்தர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பொறியியல், சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை பல ஆற்றுவார்கள். ஜலப்பொருட்களால் லாபம் கிடைக்கும். கடல் வாணிபத்தில் வளர்ச்சி காணலாம். வாரப் பின்பகுதியில் சுபச்செலவுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 16, 21.

திசைகள்: கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: சிவப்பு, வெண்மை, நீலம், ஆரஞ்சு, பச்சை.

எண்கள்: 1, 5, 6, 9.

பரிகாரம்: குரு, ராகு ஆகியோருக்குப் பிரீதி பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்