வார ராசி பலன் 31-12-2015 முதல் 06-01-2016 வரை (துலாம் முதல் மீனம் வரை)

By சந்திரசேகர பாரதி

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் 2-ல் உலவுகிறார். சூரியன், கேதுவின் சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். காரியத்தில் வெற்றி கிட்டும். சுபச் செலவுகள் செய்ய வேண்டிவரும். நல்ல இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் கூடும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். அரசுப் பணியாளர்களின் நோக்கம் நிறைவேறும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். சுய முயற்சியால் அதிகம் பொருள் ஈட்டுவீர்கள். வாரப் பின்பகுதியில் பணப் புழக்கம் அதிகரிக்கும். வரவேண்டிய பாக்கிப்பணம் வசூலாகும். 3-ல் புதன் வக்கிரமாக இருப்பதால் வியாபாரம் லாபம் தரும். ஜன்ம ராசியில் செவ்வாய் இருப்பதால் எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடவும். பதற்றம் அடியோடு கூடாது. பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்புத் தேவை. வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.

பரிகாரம்: செவ்வாய், ராகு குருவுக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்யவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 31, ஜனவரி 4, 6.

திசைகள்: வடமேற்கு, தென் கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, மெரூன், இள நீலம், வெண்மை.

எண்கள்: 1, 6, 7.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும், 2-ல் புதனும், 11-ல் ராகுவும் குருவும் உலவுவது சிறப்பு. காரியத்தில் வெற்றி கிடைக்கும். புனிதப் பயணம் மேற்கொள்ள சந்தர்ப்பம் கூடிவரும். பணப் புழக்கம் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். நல்லவர்கள் நலம் புரிவார்கள். ஏற்றுமதி-இறக்குமதி தொழில் லாபம் தரும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். வியாபாரத்தில் வளர்ச்சி காண சந்தர்ப்பம் உருவாகும். வாரப்பின்பகுதியில் சந்திரன் செவ்வாயுடன் கூடி 12-ம் இடத்தில் உலவும் நிலை அமைவதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கனம் தேவை. உடன்பிறந்தவர்கள், தந்தையால் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். சொத்துகள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. ஜன்ம ராசியில் சனி இருப்பதால் வேலைப்பளு அதிகமாகும். அலைச்சல் கூடும். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 31, ஜனவரி 1, 6.

திசைகள்: தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், இளநீலம், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 4, 5, 6.

பரிகாரம்: முருகன், ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ல் ராகு, 11-ல் செவ்வாய், 12-ல் சுக்கிரன் உலவுவது சிறப்பு. தொலைதூரத் தொடர்பால் நலம் பெறுவீர்கள். தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். புதியவர்களின் சந்திப்பும் அதனால் அனுகூலமும் ஏற்படும். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் அதிக லாபம் தரும். பொறியியல், சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை புரிவார்கள். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகமாகும். பிள்ளைகளாலும், உடன்பிறந்தவர்களாலும் அனுகூலம் உண்டாகும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். கட்டிடப் பொருட்களாலும், மின் சாதனங்களாலும் எரிபொருட்களாலும் ஆதாயம் கிடைக்கும். பெற்றோர் நலனில் கவனம் தேவை. வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. கலைஞர்களுக்கு அளவோடு நலம் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி வருவது அவசியம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 31, ஜனவரி 1, 4.

திசைகள்: தென்மேற்கு, தெற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: புகை நிறம், சிவப்பு.

எண்கள்: 1, 4, 6, 9.

பரிகாரம்: சிவ வழிபாடு ஆக்கம் தரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 1, 4, 6.

திசைகள்: மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: நீலம், மெரூன், பொன்நிறம், சிவப்பு.

எண்கள்: 3, 6, 7, 8, 9.

பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 9-ல் குரு, 10-ல் செவ்வாய், 11-ல் சுக்கிரனும் சனியும் உலவுவது நல்லது. செய்து வரும் தொழில் எதுவானாலும் அதில் வளர்ச்சி காண வழிபிறக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்களால் ஆதாயம் கிடைத்துவரும். புனிதப் பயணம் மேற்கொள்ள சந்தர்ப்பம் உருவாகும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டிகள், பந்தயங்கள், விளையாட்டுகள், வழக்குகள் ஆகியவற்றில் வெற்றி காண வழிபிறக்கும்.

கலைஞர்களுக்குச் சுபிட்சம் உண்டாகும். புதிய சொத்துகளும், பொருட்களும் சேரும். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். 12-ல் சூரியனும் புதனும் இருப்பதால் அரசுப்பணிகளில் விழிப்புத் தேவை. தந்தை நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். வியாபாரிகள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. கண், கால் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும்.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் சனி 10-ல் உலவுவது சிறப்பு. சூரியன், புதனின் சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயனைப் பெற்று வருவீர்கள். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். அரசு உதவி கிடைக்கும். தான, தருமப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். யாகம், ஹோமம், ஜபம் ஆகியவற்றில் நாட்டம் கூடும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். பிதுரார்ஜித சொத்துக்கள் கிடைக்கும். நிர்வாகத்திறமையால் ஓரிரு சாதனைகளை ஆற்றுவீர்கள். வியாபாரம் பெருகும். எழுத்து, கணிதம், பத்திரிகை போன்ற தொழில் லாபம் தரும். 2-ல் கேதுவும், 8-ல் ராகு, குரு ஆகியோரும் இருப்பதால் புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை. பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புடன் ஈடுபடவும். பிள்ளைகளால் சில பிரச்சனைகள் ஏற்படும்

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 31, ஜனவரி 6.

திசைகள்: மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு..

நிறங்கள்: பச்சை, நீலம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 5, 6, 8, 9 .

பரிகாரம்: சரபேஸ்வரர், தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 7-ல் குருவும், 9-ல் சுக்கிரனும், 10-ல் சூரியனும் புதனும் உலவுவது சிறப்பாகும். இதனால் உங்கள் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். எதிர்ப்புக்கள் இருக்கும் என்றாலும் சமாளிக்கும் திறமையும் இருக்கும். பொருளாதார நிலை உயரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் நிலை உயரப் பெறுவார்கள். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். நிர்வாகத்திறமை கூடும். 8-ல் செவ்வாய் உலவுவதால் சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. எதிலும் அவசரம் கூடாது. உடன்பிறந்தவர்களால் மன அமைதி குறையும். இயந்திரங்கள், எரிபொருட்கள், மின் சாதனங்கள், வெடிப்பொருட்கள், கூரிய ஆயுதங்கள் பக்கம் நெருங்கும்போது பாதுகாப்பு தேவை. விளையாட்டு விநோதங்களைத் தவிர்க்கவும். வீண் வம்பு வேண்டாம். நிலபுலங்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது.

அதிர்ஷ்ட தேதிகள்: டிசம்பர் 31, ஜனவரி 1, 6.

திசைகள்: வடமேற்கு, வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: பொன் நிறம், வெண்மை, பச்சை, வான் நீலம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 5, 6.

பரிகாரம்: திருமுருகன், நாகர் வழிபாடு நலம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

7 hours ago

ஆன்மிகம்

9 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்