மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும், 3-ல் சுக்கிரனும், 6-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. சூரியன் ஜன்ம ராசியில் இருந்தாலும் நலம் புரிவார். தொலைதூரத் தொடர்பு மூலம் அனுகூலம் பெறுவீர்கள். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரியவர்களது ஆசிகள் கிடைக்கும். வார நடுப்பகுதியில் தொழில் ரீதியாக ஒரு நல்ல தகவல் வரும். பணப் புழக்கம் அதிகமாகும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள்.
புதிய பொருட்களும் சொத்துகளும் சேரும். வாரப் பின்பகுதியில் முக்கியமானதொரு எண்ணம் நிறைவேறும். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். முக்கியப் பொறுப்புக்களும் பதவிகளும் தேடிவரும். 2-ல் செவ்வாயும், 8-ல் சனியும் இருப்பதாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதாலும் குடும்பத்தில் ஏதேனும் சலனம் ஏற்படும். வீண்வம்பு, சண்டைகளில் ஈடுபட வேண்டாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 8, 10, 13.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு,கிழக்கு.
நிறங்கள்: புகை நிறம், சிவப்பு, இளநீலம், வெண்மை, பச்சை.
எண்கள்: 1, 4, 5, 6, 9.
பரிகாரம்:
சனிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவவும்.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 2-லும் கேது 11-லும் உலவுவது சிறப்பு. குடும்ப நலம் சீராகவே இருந்துவரும். விருந்து, உபசாரங்களிலும்; கேளிக்கை, உல்லாசங்களிலும் கலந்துகொள்வீர்கள். பேச்சில் இனிமை கூடும். பெண்களாலும், வாழ்க்கைத் துணைவியாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகள் ஒத்துழைப்புத் தருவார்கள். வியாபாரிகள் ஏற்றம் காண்பார்கள். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரும்.
எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். கடன் கிடைக்கும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் எதிலும் அவசரம் வேண்டாம். நிதானமாகச் செயல்படவும். பிள்ளைகள் நலனில் அதிக கவனம் தேவை. கெட்ட பழக்கங்களுக்கு இடம் தர வேண்டாம். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நலல்து. கண், வாய், வயிறு சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். வாரப் பின்பகுதியில் நல்ல தகவல் வரும். தொழிலில் அளவோடு வளர்ச்சி காணலாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 10, 13.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம்.
எண்கள்: 6, 7.
பரிகாரம்:
சக்தி வழிபாடு நலம் தரும்.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரன், 2-ல் குரு, 6-ல் சனி, 10-ல் கேது, 11-ல் சூரியன் உலவுவதால்தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். பணப் புழக்கம் திருப்திகரமாக இருந்து வரும்.
திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பலன் கிடைக்கும். நல்லவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நற்பணிகளில் ஈடுபாடு கூடும். தர்ம குணம் வெளிப்படும். மகப்பேறு பாக்கியம் சிலருக்கு உண்டாகும். பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கும் அரசுப் பணியாளர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். அலைச்சல் அதிகரிக்கும். உடல் நலனில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 8, 13.
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, பொன் நிறம், நீலம்.
எண்கள்: 1, 3, 6, 7, 8.
பரிகாரம்:
மகாவிஷ்ணு, முருகனை வழிபடலாம். ஏழைப் பிள்ளைகள் கல்வி பயில உதவவும்.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 10-ல் சூரியன், 11-ல் செவ்வாய், புதன், 12-ல் சுக்கிரன் உலவுவதால் எதிர்ப்புகளைக் கடந்து வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். பண வரவு அதிகமாகும். தொழில் விருத்தி அடையும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். உடன்பிறந்தவர்கள், தந்தையால் அனுகூலம் உண்டாகும்.
வாழ்க்கைத் துணைவரால் நலம் கூடும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள வாய்ப்பு உண்டாகும். புதியவர்களின் தொடர்பு பயன்படும். 5-ல் சனி இருப்பதால் பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 8, 10.
திசைகள்: தெற்கு, கிழக்கு, தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, புகை நிறம், இளநீலம், பச்சை, ஆரஞ்சு
எண்கள்: 1, 4, 5, 6, 9.
பரிகாரம்:
சனிக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது. ஆஞ்சநேயரை வழிபட்டு, ஹனுமன் சாலீஸா படிக்கவும்.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு அதிபதி சூரியன் 9-லும், செவ்வாய், புதன் ஆகியோர் 10-லும், 11-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பு. மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வாழ்க்கை வசதிகள் கூடும். உடல் ஆரோக்கியம் சீராகவே இருந்துவரும். தெய்வப் பணிகளுக்காகச் செலவு செய்வீர்கள். சுப காரியச் செலவுகளும் ஏற்படும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். இன்ஜினீயர்களுக்கு வரவேற்பு கூடும்.
வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். கலைஞர்கள் போற்றப்படுவார்கள். பெண்களால் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். எதிரிகள் அடங்குவார்கள். குடும்பத்தில் ஏதேனும் சலசலப்பு இருந்துவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 8, 10, 13 (பகல்).
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, தெற்கு, கிழக்கு.
நிறங்கள்: இளநீலம், சிவப்பு, பச்சை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 5, 6, 9.
பரிகாரம்:
சனி, ராகு, கேதுவுக்கு பரிகாரங்கள் செய்யவும் . ஆஞ்சநேயர், துர்கை, விநாயகரை வழிபடவும்.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 9-ல் புதனும், 10-ல் சுக்கிரனும், 11-ல் குருவும் உலவுவது சிறப்பு. பொதுநலப் பணிகளில் ஈடுபாடு கூடும். நண்பர்கள், உறவினர்கள் உதவி புரிவார்கள். பிள்ளைகள் நலம் மகிழ்ச்சி தரும். மகன், மகளுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றுவீர்கள். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். மன உற்சாகம் பெருகும். தெய்வப் பணிகளிலும் தர்மப் பணிகளிலும் ஈடுபாடு கூடும்.
நல்லவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சூரியன், ராகு, கேதுவின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் அரசாங்கத்தாராலும், தந்தையாலும் சங்கடங்கள் சூழும். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். அரசியல், நிர்வாகம் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 8, 10, 13.
திசைகள்: மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 6, 8.
பரிகாரம்:
சூரியன், ராகு, கேதுவுக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து வருவது நல்லது. தந்தை, தந்தைவழி உறவினர்களுக்கு் உதவவும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
7 hours ago
ஆன்மிகம்
9 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago