வார ராசிபலன் 12-01-2017 முதல் 18-01-2017 வரை (துலாம் முதல் மீனம் வரை)

By சந்திரசேகர பாரதி

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் 5-ல் சுக்கிரனும் 11-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் ஏற்படும். முக்கியஸ்தர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். நிர்வாகத் திறமை கூடும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். திரவப் பொருட்கள் லாபம் தரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். பெற்றோராலும் மக்களாலும் அளவோடு நலம் உண்டாகும். 14-ம் தேதி முதல் சூரியன் 4-ம் இடத்துக்கு மாறுவதால் வீண் அலைச்சல் ஏற்படும். அதனால் உடல் அசதி கூடும். 16-ம் தேதி முதல் செவ்வாய் 6-ம் இடத்துக்கும் குரு, ஜன்ம ராசிக்கும் இடம் மாறுவதால் மனத்துணிவு அதிகமாகும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். தலை, கால் பாதம், கண் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். புதன் பலம் குறைந்திருப்பதால் வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. தொழில் அதிபர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. பேச்சில் நிதானம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 12, 16.

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சாம்பல்நிறம், இளநீலம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 4, 6. l பரிகாரம்: குருவை வழிபடவும். வேதம் பயின்ற அந்தணர்களுக்கு உதவி செய்வது நல்லது.



விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 4-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். தர்ம சிந்தனை வளரும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். பண நடமாட்டம் திருப்தி தரும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். கேளிக்கை மற்றும் விருந்துகளில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். பொன்னும் பொருளும் சேரும். வியாபாரம் செழிக்கும். பேச்சாற்றல் கூடும். 14-ம் தேதி முதல் சூரியன் 3-ம் இடத்துக்கு மாறுவதால் அரசு உதவி கிடைக்கும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள் ஆகியோரால் அனுகூலம் உண்டாகும். 16-ம் தேதி முதல் செவ்வாய் 5-ம் இடத்துக்கும், குரு 12-ம் இடத்துக்கும் மாறுவது சிறப்பாகாது. மக்களால் இடர்ப்பாடுகள் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் குறையும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 16, 18.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம், இளநீலம்.

எண்கள்: 3, 4, 5, 6. l பரிகாரம்: சனி, கேதுவுக்கு அர்ச்சனைகள் செய்யவும்.



தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் சுக்கிரனும் கேதுவும் உலவுவது சிறப்பாகும். ஜன்ம ராசியில் சூரியனும் புதனும் இருந்தாலும் கூட நலம் உண்டாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். தான, தர்மப் பணிகளில் ஈடுபாடு கூடும். உடல் நலம் சீராக இருந்துவரும். மனத்தில் துணிவு கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். செயலில் வேகம் கூடும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். நீங்களும் அவர்களுக்கு நலம் புரிவீர்கள். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். தகவல் தொடர்பு பயன்படும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். 14-ம் தேதி முதல் சூரியன் 2-ம் இடத்துக்கு மாறுவது சிறப்பாகாது. குடும்பத்தில் சில இடர்ப்பாடுகள் ஏற்பட்டு விலகும். 16-ம் தேதி முதல் செவ்வாய் 4-ம் இடத்துக்கு மாறுவது குறை. வீண் அலைச்சல் ஏற்படும். சுகம் குறையும். 16-ம் தேதி முதல் குரு 11-ம் இடத்துக்கு மாறுவதால் செல்வ நிலை உயரும். மக்கள் நலம் சீராகும். முக்கியமான எண்ணங்கள் ஈடேற வழிபிறக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 12 (பகல்), 16, 18.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை, சிவப்பு.

எண்கள்: 6, 7, 9. l பரிகாரம்: கால் ஊனமுள்ளவர்களுக்கு உதவி செய்யவும்.



மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 9-ல் குருவும் 11-ல் சனியும் உலவுவது நல்லது. எதிர்ப்புகளை வெல்லும் சக்தி பிறக்கும். பண வரவு திருப்தி தரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். நல்ல காரியங்களில் ஈடுபாடு கூடும். கலைத் துறையினருக்கு முன்னேற்றமான பாதை புலப்படும். உத்தியோகஸ்தர்கள், தொழிலாளர் நிலை உயரப் பெறுவார்கள். உழைப்புக்குரிய பயன் கிடைக்கும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு கூடிவரும். 14-ம் தேதி முதல் சூரியன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதும் குறையே ஆகும். கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உஷ்ணாதிக்கம் கூடும். தந்தை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். அரசாங்கத்தாரால் பிரச்சினைகள் ஏற்படும். 16-ம் தேதி முதல் செவ்வாய் 3-ம் இடத்துக்கு மாறுவதால் மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் உண்டாகும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். நிலபுலங்கள் சேரும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். குரு 10-ம் இடத்துக்கு மாறுவது சிறப்பாகாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 12, 18.

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, மேற்கு. l

நிறங்கள்: நீலம், பொன் நிறம்.

எண்கள்: 3, 6, 8. l பரிகாரம்: நாக பூஜை செய்யவும். ஆதித்தனையும், திருமாலையும் வழிபடவும்.







கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசியில் சுக்கிரனும் 10-ல் சனியும் 11-ல் சூரியனும் புதனும் உலவுவதால் தோற்றப்பொலிவு கூடும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்கும். பொதுநலப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். அரசியல் ஈடுபாடு பயன்படும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். நிறுவன, நிர்வாகத் துறையினருக்கு செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். தொலைந்த பொருள் கிடைக்கும். 14-ம் தேதி முதல் சூரியன் 12-ம் இடத்துக்கு மாறுவதால் உடல் நலனில் கவனம் தேவை. அரசு விவகாரங்களில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியமாகும். 16-ம் தேதி முதல் செவ்வாய் 2-ம் இடத்துக்கு மாறுவதால் குடும்பத்தில் சச்சரவுகள் ஏற்படும். வீண் வம்பு கூடாது. 16-ம் தேதி முதல் குரு 9-ம் இடத்துக்கு மாறுவது நல்லது. மக்கள் நலம் சீராகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 12, 16.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு.

நிறங்கள்: நீலம், பச்சை, ஆரஞ்சு.

எண்கள்: 1, 5, 6, 8. | பரிகாரம்: ராகு, கேதுவையும் விநாயகரையும் துர்க்கையையும் வழிபடுவது நல்லது.



மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும் 7-ல் குருவும் 10-ல் சூரியனும் புதனும் 12-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. நண்பர்களும் உறவினர்களும் உதவிபுரிவார்கள். செய்தொழில் விருத்தி அடையும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். மக்களால் அனுகூலம் உண்டாகும். பண நடமாட்டம் திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். முக்கியஸ்தர்களது தொடர்பு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை கூடும். வாழ்க்கை வசதிகள் பெருகும். திரவப் பொருட்கள் லாபம் தரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். வியாபாரம் பெருகும். 14-ம் தேதி முதல் சூரியன் 11-ம் இடத்துக்கு மாறுவதால் எதிர்ப்புகள் அகலும். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். 16-ம் தேதி முதல் ஜன்ம ராசிக்கு செவ்வாயும், 8-ம் இடத்துக்குக் குருவும் மாறுவது சிறப்பாகாது. எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 12, 16, 18.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: புகைநிறம், பொன் நிறம், ஆரஞ்சு, இளநீலம், பச்சை.

எண்கள்: 1, 3, 4, 5, 6. l பரிகாரம்: சுப்பிரமணியரையும் விநாயகரையும் வழிபடவும்.




நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்