வார ராசிபலன் 30-7-2015 முதல் 5-8-2015 வரை - துலாம் முதல் மீனம் வரை

By சந்திரசேகர பாரதி

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும், 10-ல் சூரியனும் புதனும், 11-ல் குருவும் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் வெற்றி வாய்ப்புகள் கூடும். மன மகிழ்ச்சி பெருகும். புதிய சொத்துகளும் பொருட்களும் சேரும். பிள்ளைகள் நலம் மகிழ்ச்சி தரும். மகப்பேறு பாக்கியம் கிட்டும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும்.

கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். பெரியவர்கள், தனவந்தர்கள், மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மந்திர உபதேசம் பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். தெய்வ தரிசனம் கிடைக்கும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவற்றைப் பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் துறைகள் லாபம் தரும். 31-ம் தேதி முதல் செவ்வாய் 10-ம் இடம் மாறுவதால் தொழிலில் முன்னேற்றம் காணலாம். பண வரவு அதிகரிக்கும்.

கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். 1-ம் தேதி முதல் தந்தை வழிச் சொத்துகளும் பொருட்களும் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 31 (முற்பகல்), ஆகஸ்ட் 2 (பிற்பகல்).

திசைகள்: கிழக்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், பச்சை, இள நீலம், வெண்மை, பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 5, 6, 7.

பரிகாரம்: துர்கையம்மனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.



விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 11-ல் ராகு உலவுவது விசேஷம். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பண வரவு சற்று கூடும். பேச்சில் திறமை வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஓரளவுக்கு உதவுவார்கள். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம், தொழில் லாபம் தரும்.

ஆராய்ச்சியாளர்களது மதிப்பு உயரும். தோல் பொருட்கள் லாபம் தரும். பயணம் சார்ந்த தொழிலில் அபிவிருத்தி காணலாம். முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். 31-ம் தேதி முதல் செவ்வாய் 9-ம் இடம் மாறுவதால் தெய்வப் பணிகளில் நாட்டம் உண்டாகும். தந்தை நலனில் கவனம் தேவை. 1-ம் தேதி முதல் புதன் 10-ம் இடம் மாறுவதால் கணிதம், விஞ்ஞானம், எழுத்து, பத்திரிகை, தரகு துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை உருவாகும்.

நற்பணிகளில் ஈடுபாடு கூடும். புதிய பதவி, பட்டங்கள் சிலருக்கு கிடைக்கும். வாரக்கடைசியில் சந்திரன் கேதுவுடன் கூடி 5-ம் இடத்தில் உலவுவதால் பிள்ளைகளால் சிறு சங்கடம் ஏற்படும். மறதியால் அவதி ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 31 (முற்பகல்), ஆகஸ்ட் 2 (பிற்பகல்).

திசைகள்: தென்மேற்கு, கிழக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 4.

பரிகாரம்: சனிக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது. ஹனுமன் வழிபாடு நலம் தரும்.



தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசி அதிபதி குரு 9-ல் இருப்பது விசேஷமாகும். புதன், சுக்கிரன், சனி, ராகுவின் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். மன உற்சாகம் பெருகும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகள் லாபம் தரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு கூடும். பேச்சில் திறமை வெளிப்படும்.

பண வரவு அதிகமாகும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். உடன்பிறந்தவர்கள் ஓரளவுக்கு உதவுவார்கள். பொது நலப்பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். சூரியன், செவ்வாய், கேதுவின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் பெற்றோர் நலனிலும் சகோதர நலனிலும் கவனம் தேவை. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. சொத்துகள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. அரசியல், நிர்வாகம், பொறியியல், சட்டம், காவல், ராணுவம் சம்பந்தமான இனங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் பொறுப்புணர்ந்து காரியமாற்றுவது அவசியம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 31 (முற்பகல்), ஆகஸ்ட் 2 (பிற்பகல்).

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, மேற்கு.

நிறங்கள்: புகை நிறம். வெண்மை, கறுப்பு, இளநீலம், பொன் நிறம்.

எண்கள்: 3, 4, 5, 6, 8.

பரிகாரம்: ருத்திரனை (சிவன்) வழிபடுவது நல்லது. விநாயகருக்கு அர்ச்சனை செய்வது சிறப்பாகும்.



மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 6-ல் செவ்வாயும், 8-ல் சுக்கிரனும், 10-ல் சனியும் உலவுவதால் எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. பொது நலப்பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வாரப் பின்பகுதியில் பண வரவு சற்று அதிகரிக்கும். திடீர் பொருள் வரவுக்கும் இடமுண்டு.

ஆன்மிக, அறநிலையப்பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். இரும்பு, எஃகு, எண்ணெய் தொழிலில் ஆதாயம் கிடைக்கும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சி காணலாம். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் தங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றிவருவது நல்லது. 31-ம் தேதி முதல் செவ்வாய் 7-ம் இடம் மாறுவதால் வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவை. 1-ம் தேதி முதல் புதன் 8-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு அனுகூலமான போக்கு தென்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 31 (முற்பகல்), ஆகஸ்ட் 2 (பிற்பகல்).

திசைகள்: மேற்கு, வடமேற்கு, தெற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, நீலம், மெரூன்.

எண்கள்: 6, 7, 8, 9.

பரிகாரம்: குரு, தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வது நல்லது.



கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் புதனும், 7-ல் குருவும் உலவுவது சிறப்பு. தொழில் நுட்பத்திறமையால் ஓரிரு சாதனைகளை ஆற்றுவீர்கள். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். எதிரிகள் விலகிப் போவார்கள். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். கூட்டாளிகள் ஒத்துழைப்புத் தருவார்கள். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் தொழில் லாபம் தரும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும்.

ஆன்மிகவாதிகள் மதிப்பு உயரப் பெறுவார்கள். வியாபாரத்தில் அபிவிருத்தி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். பணப் புழக்கம் அதிகரிக்கும். சுப காரியங்கள் நிகழச் சந்தர்ப்பம் உருவாகும். பகுதி நேர உத்தியோகம் சிலருக்கு கிடைக்கும். தெய்வப்பணிகளில் ஈடுபாடு கூடும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும் என்றாலும் பாதுகாப்பும் தேவை. 31-ம் தேதி முதல் செவ்வாய் 6-ம் இடம் மாறுவதால் மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். செயலில் வேகம் கூடும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

இயந்திரப்பணியாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். 1-ம் தேதி முதல் புதன் 77-ம் இடம் மாறுவதால் வாழ்க்கைத்துணைவரால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும் என்றாலும் சமாளிப்பீர்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 31 (முற்பகல்), ஆகஸ்ட் 2 (பிற்பகல்).

திசைகள்: கிழக்கு, வடக்கு, மேற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: நீலம், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 5, 8.

பரிகாரம்: நாகரை வழிபடவும்.



மீன ராசி வாசகர்களே

கோசாரப்படி கிரகநிலை சிறப்பாக இல்லை. ஜனன கால ஜாதகப்படி தற்சமயம் யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் நலமுண்டாகும். ஜாதக பலமும் இல்லாதவர்களுக்குச் சோதனைகள் அதிகமாகும். உடல்நலம் பாதிக்கும். மனதில் ஏதேனும் சலனம் இருந்துவரும். எதிரிகளின் கரம் வலுக்கும். துன்பங்களும் துயரங்களும் அதிகமாகும்.

பொருளாதார நிலையில் வளர்ச்சி காணத் தடைகளும் குறுக்கீடுகளும் ஏற்படும். தேவைகளைச் சமாளிக்க கடன்படவும் நேரலாம். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக வேண்டிவரும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாகாது. மாமூலாகச் செய்துவரும் பணிகளிலும்கூட அதிகம் கவனம் தேவை. அலட்சியம் கூடாது. பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. 31-ம் தேதி முதல் செவ்வாய் 5-ம் இடம் மாறுவதும் சிறப்பாகாது.

மக்கள் நலம் பாதிக்கும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். 1-ம் தேதி முதல் புதன் 6-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு மந்த நிலை விலகும். கணிதம், எழுத்து, பத்திரிகை துறைகளைச் சேர்ந்தவர்கள் ஓரளவுக்கு வளர்ச்சி காண்பார்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 31 (முற்பகல்), ஆகஸ்ட் 4.

திசைகள்: வடக்கு, வடமேற்கு.

நிறங்கள்: பச்சை, வெண்மை.

எண்கள்: 5, வார முன்பகுதியில் எண் 2-ம் நலம் தரும்.

பரிகாரம்: தினமும் காலை வேளையில் சிறிது நேரம் தியானம் செய்வது நல்லது. நவக்கிரக ஜப, ஹோமம் செய்து கொள்வது நல்லது. கோளறு திருப்பதிகம் வாசிப்பது சிறப்பாகும். .

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

12 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்