மேஷ ராசி வாசகர்களே
சூரியன், புதன், குரு, சுக்கிரன், கேது, ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் கிடைக்கும். கணவன்-மனைவி உறவு நிலை சிறக்கும். அரசாங்கத்தாராலும் தந்தையாலும் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வர்வேற்பு கூடும்.
சுப காரியச் செலவுகள் ஏற்படும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களின் எண்ணம் நிறைவேறும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். முக்கியமான நபர்கள் உதவி புரிவார்கள். 8-ல் சனி உலவுவதால் எதிலும் யோசித்து ஈடுபடுவது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 11, 12, 17.
திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, கிழக்கு, வட கிழக்கு.
நிறங்கள்: பொன்நிறம், மெரூன், ஆரஞ்சு.
எண்கள்: 1,3, 5, 6, 7.
பரிகாரம்: ராகு, சனி ஆகிய கிரகங்களுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
ரிஷப ராசி வாசகர்களே,
செவ்வாய், சுக்கிரன் கேது, ஆகியோரது நிலை சிறப்பாக இருப்பதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்ப்புகள் குறையும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். திரவப் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். நிலபுலன்கள் வாங்குவீர்கள். இயந்திரப் பணிகள் லாபம் தரும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
வார பின்பகுதியில் செலவுகள் அதிகரிக்கும்,சிக்கனம் தேவை. 13-ம் தேதி முதல் அரசு சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். போட்டி, பந்தயங்களில் வெற்றிக் கிடைக்கும். மக்களால் செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவரால் ஓரளவு நலம் உண்டாகும்.கெட்டவர்களின் தொடர்பு அடியோடு கூடாது.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 11, 12, 17.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, வெண்மை, இள நீலம்.
எண்கள்: 6, 7, 9.
பரிகாரம்: சக்தி வழிபாடு நலம் தரும்.
மிதுன ராசி வாசகர்களே,
புதன், சனி, ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் தொலைதூர பயணத்தின் மூலம் நலம் உண்டாகும். பொருளாதார நிலை வளர்ச்சி பெறும். குடும்பத்தில் நல்ல காரியம் நிகழும். திரவப் பொருட்கள் லாபம் தரும். பிற மொழி, மதத்தவரால் அனுகூலம் உண்டாகும். கருப்பு, கருநீலப் பொருட்கள் லாபம் தரும். மக்களாலும் தந்தையாலும் அரசாங்கத்தாராலும் சிறு சிறு இடர்பாடுகள் ஏற்படும்.
வியாபரிகளுக்கு முன்னேற்றம் உண்டாகும். 13-ம் தேதி முதல் கலைஞர்களுக்கு பிரச்சனைகள் விலகும். பொது நல பணிகளில் உள்ளவர்கள் மதிப்பு உயரப் பெறுவார்கள். பூமியிலிருந்து வெளிப் படும் பொருட்கள் லாபம் தரும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் வரவேற்பு கூடும்.
அதிர்ஷ்டமான தேதிகள் பிப்ரவரி 11, 12.
திசைகள்: தென்மேற்கு, மேற்கு, வடக்கு.
நிறங்கள்: கருநீலம், கறுப்பு, பச்சை.
எண்கள்: 4, 5, 8.
பரிகாரம்: குருப் ப்ரீதி செய்யுங்கள். தந்தைக்கும், தந்தை வழி உறவினருக்கும் உதவுவது நல்லது.
கடக ராசி வாசகர்களே,
குரு ஒருவரே அனுகூலமாக உலவுகிறார். தெய்வானுகூலம் உண்டாகும். நல்லவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பணப் பெருக்கம் உண்டாகும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்கள் ஆக்கம் தரும். நிலபுலன்களால் ஓரளவு ஆதாயம் கிடைக்கும். கணவன்-மனைவி உறவு நிலை சீராக இராது. சகிப்புத் தன்மை தேவை. கூட்டுத் தொழிலில் கவனம் அவசியம். பங்குதாரர்களை நம்பி ஏமாற வேண்டாம். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் எச்சரிக்கை தேவை. வார பின் பகுதியில் முக்கியமான ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்களால் லாபம் வரும். தந்தை நலனில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 11 (பிற்பகல்), 12, 17 (பகல்).
திசை: வடகிழக்கு.
நிறங்கள்: பொன்நிறம்.
எண்: 3.
பரிகாரம்: நவகிரகங்களையும் வழிப்படுவது நல்லது.
சிம்ம ராசி வாசகர்களே,
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகியோரது நிலை அனுகூலமாக இருப்பதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். போட்டிகளில் வெற்றிக் கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். இயந்திரப் பணியாளர்களுக்கு ஏற்றம் உண்டாகும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். பெண்களின் எண்ணம் நிறைவேறும்.
எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக் இனங்கள் லாபம் தரும். 4-ல் சனி இருப்பதால் உடல் நலம் அவ்வப்போது பாதிக்கலாம். தாய் நலனில் கவனம் தேவை. 13-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ம் இடத்துக்கும், சூரியன் 7-ம் இடத்துக்கும் மாறுவது ஏற்றமல்ல. வீண் சண்டை சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. கோபத்தைக் குறைத்துக் கொள்வது அவசியம். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்கள், தொழில் பங்குதாரர்களால் பிரச்சனைகள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 14, 17.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: சிவப்பு, வெண்மை.
எண்கள்: 1, 5, 6, 9.
பரிகாரம்: நாக பூஜை செய்யுங்கள். சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
கன்னி ராசி வாசகர்களே,
சுக்கிரன் சனி, கேது ஆகியோரது நிலை சிறப்பாக இருப்பதால் மனதில் தெளிவும் தன்னம்பிக்கையும் பிறக்கும். எதிரிகள் அடங்குவார்கள். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். புதிய வாகனம் வாங்க வாய்ப்பு கூடும். பெண்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். கலைஞர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்கும்.
மக்களால் செலவுகள் ஏற்படும். 2-ல் செவ்வாய் இருப்பதால் குடும்பத்தில் அமைதி குறையலாம். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களாலும் உடன் பணிபுரிபவர்களாலும் சங்கடங்கள் ஏற்படலாம். 13-ம் தேதி முதல் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். அரசு உதவி கிடைக்கும். புதிய பதவிகளும் பட்டங்களும் தேடி வரும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படலாம். மருத்துவச் செலவுகள் சற்று அதிகரிக்கும். பயணத்தின் போதும் இயந்திரங்களில் பணி புரியும் போதும் எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி: 11, 12, 17.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடமேற்கு.
நிறங்கள்: வெண்மை, நீலம், மெரூன்
எண்கள்: 6, 7, 8.
பரிகாரம்: செவ்வாய், குரு, ராகு ஆகியோருக்கு அர்ச்சனை செய்வது நல்லது. முருகனை வழிபடுங்கள்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
7 hours ago
ஆன்மிகம்
8 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago