துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் 2-ல் உலவுகிறார். ராகு 11-ஆமிடத்தில் உலவுவதும் சிறப்பாகும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். பயணம் சார்ந்த இனங்களால் ஆதாயம் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி இனங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு லாபம் கூடும். புதன் பலம் குறைந்திருப்பதால் வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. உடன்பிறந்தவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். 5-ல் கேதுவும், 12-ல் குருவும் உலவுவதால் மக்களால் மன அமைதி குறையும்.
வயிறு, கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். ஜன்ம ராசியில் செவ்வாய் இருப்பதால் எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. இயந்திரங்கள், எரிபொருட்கள், மின்சாதனங்கள், வெடிபொருட்கள், கூரிய ஆயுதங்கள் ஆகியவற்றின் பக்கம் நெருங்கும்போது விழிப்புடன் இருக்கவும். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை செலுத்தினால்தான் வளர்ச்சி காண முடியும். எதிலும் அலட்சியம் கூடாது.
பரிகாரம்: செவ்வாய், கேது குரு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்யவும்.
எண்கள்: 4, 6. | நிறங்கள்: இள நீலம், வெண்மை, சாம்பல் நிறம். l
திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு. l அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 14, 15.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 2-ல் புதனும், 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். நெருங்கிய நண்பர்கள் உதவி புரிவார்கள். பண நடமாட்டம் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். மகப்பேறு பாக்கியம் சிலருக்கு கிடைக்கும். மாணவர்களது நிலை உயரும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், வங்கிப் பணியாளர்கள், பணம் கொடுக்கல்-வாங்கலில் ஈடுபாடு உள்ளவர்கள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை நிலவும்.
பேச்சில் திறமை வெளிப்படும். எதிரிகள் அடங்கியே இருப்பார்கள். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். 15 -ஆம் தேதி முதல் சூரியன் 3-ஆமிடம் மாறுவது விசேடமாகும். செய்து வரும் தொழிலில் வளர்ச்சி காண வழிபிறக்கும். புதிய பதவி, பட்டங்கள் வந்து சேரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். முக வசீகரம் கூடும். நல்ல எண்ணங்கள் மனதில் உருவாகும். கூட்டாளிகள் உதவுவார்கள்.
பரிகாரம்: விநாயகரையும் முருகனையும் வழிபடுவது நல்லது. | எண்கள்: 1, 3, 4, 5, 6.
நிறங்கள்: வெண்சாம்பல், இளநீலம், பச்சை, பொன் நிறம். | திசைகள்: தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 14, 15, 20.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 11-ல் செவ்வாயும் 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். எதிர்ப்புக்களை வெல்லும் சக்தி பிறக்கும். வழக்கு, வியாஜ்ஜி யங்களிலும், போட்டிப் பந்தயங்களிலும், விளையாட்டுகளிலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகமாகும். இன்ஜினீயர்களது நிலை உயரும். சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை பல ஆற்றுவார்கள்.
பரிசுகளும் விருதுகளும் தேடிவரும். நல்லவர்களின் தொடர்பு நலம் சேர்க்கும். சனி 12-ல் இருப்பதால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும் என்றாலும் சமாளிப்பீர்கள். 15-ஆம் தேதி முதல் சூரியன் 2-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. பேச்சில் நிதானம் தேவை. 20-ஆம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு மாறுவது விசேடமாகும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். தொழில் கூட்டாளிகள் உதவுவார்கள்.
எண்கள்: 1, 6, 7. 9. | பரிகாரம்: சனிக்குப் பிரீதியாக மாற்றுத் திறனாளிகளுக்கும் வயோதிகர்களுக்கும் உதவி செய்வது நல்லது. கறுப்பு எள் தானம் செய்யவும்.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு. | அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 14, 15, 20.
நிறங்கள்: சிவப்பு, வெண்மை, மெரூன்.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிபதி சனி சுக்கிரனுடன் கூடி 11-ஆமிடத்தில் உலவுவது சிறப்பாகும். செவ்வாய், குரு ஆகியோரது சஞ்சாரமும் சிறப்பாக இருப்பதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். முக்கியமான காரியங்கள் இனிது நிறைவேறும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு கூடும். புதிய ஆடை, அணிமணிகளும் அலங்காரப் பொருட்களும் சேரும். நல்லவர்கள் உங்களுக்கு நலம் புரிய முன்வருவார்கள்.
எதிரிகள் அடங்குவார்கள். போட்டிகளில் வெற்றி கிட்டும். சூரியன், புதன் ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் உஷ்ணாதிக்கம் கூடும். தலை, கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை. பயணத்தால் சங்கடம் உண்டாகும். வண்டி, வாகனங்களால் செலவுகள் ஏற்படும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவைப்படும்.
பரிகாரம்: சூரியனுக் கும் புதனுக்கும் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. நாகராஜரை வழிபடவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 14, 15, 20. திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: நீலம், பொன்நிறம், சிவப்பு. | எண்கள்: 3, 6, 8, 9.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 10-ல் சனியும் 11-ல் புதனும் உலவுவது சிறப்பாகும். சுக்கிரனும் செவ்வாயும் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் நலம் புரிவார்கள். தெய்வப் பணிகளிலும் தர்மப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். பண வரவு அதிகரிக்கும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். செய்துவரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். மாணவர்களது நிலை உயரும். மாதர்களது எண்ணம் ஈடேறும்.
கலைஞர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். 15-ஆம் தேதி முதல் சூரியன் 12-ஆமிடம் மாறுவதால் உஷ்ணாதிக்கம் கூடும். வாழ்க்கைத் துணைவராலும் தந்தையாலும் சில இடர்ப்பாடுகள் உண்டாகும். 20-ஆம் தேதி முதல் சுக்கிரன் 11-ஆமிடம் மாறுவதால் முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகளும் அலங்காரப் பொருட்களும் சேரும். வாழ்க்கைத் துணைவரால் நலம் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மக்களால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். மூத்த சகோதர, சகோதரிகளால் நலம் ஏற்படும். அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 15, 20.
பரிகாரம்: ஆதிசேஷனை வழிபடவும். | எண்கள்: 5, 6, 8, 9.
திசைகள்: மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, தெற்கு. l நிறங்கள்: பச்சை, நீலம்.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும் 7-ல் குருவும் 9-ல் சுக்கிரனும் 10-ல் சூரியனும் புதனும் உலவுவது சிறப்பாகும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் நலம் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற இனங்கள் லாபம் தரும். மாணவர்களது நிலை உயரும். 15-ஆம் தேதி முதல் சூரியன் 11-ஆமிடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
அரசாங்கத்தாரால் நலம் கூடும். மேலதிகாரிகள் உங்களைப் போற்றுவார்கள். பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும். 8-ல் செவ்வாய் இருப்பதால் சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். உடன்பிறந்தவர்களால் மன அமைதி குறையும். எரிபொருட்கள், மின்சாதனங்கள், வெடிப்பொருட்கள், கூரிய ஆயுதங்கள் ஆகியவற்றின் பக்கம் நெருங்கும்போது பாதுகாப்பு தேவை.
எண்கள்: 1, 3, 4, 5, 6. l பரிகாரம்: முருகனுக்கு அர்ச்சனை, ஆராதனை செய்வது நல்லது.
திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடகிழக்கு. | நிறங்கள்: பொன் நிறம், வெண்மை, பச்சை, வான் நீலம், ஆரஞ்சு.
அதிர்ஷ்ட தேதிகள்: ஜனவரி 15, 20
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
7 hours ago
ஆன்மிகம்
9 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago