வரலக்ஷ்மி விரதம்: ஆகஸ்ட் 12
அஷ்ட லஷ்மிகளும் ஐஸ்வரியங் களைத் தருபவர்கள் என்றாலும் ஒவ்வொரு லஷ்மியும் ஒவ்வொரு வகையான ஐஸ்வர்யத்தைத் தருவாள் என்பதால் ஒவ்வொரு லஷ்மிக்கும் அதற்குரிய சிறப்புப் பெயர் தரப்பட்டுள்ளது. வர லஷ்மியின் சிறப்பு அஷ்டலஷ்மிகள் அளிக்கும் அனைத்தையும் தனி ஒருத்தி யாக அளிக்கக்கூடியவள் என்பதுதான்.
வித்யா லஷ்மி, வீர லஷ்மி, அன்ன லஷ்மி, திருமடப்பள்ளி நாச்சியார், மோட்ச லஷ்மி, கோலபுர நாயகி, மகுட லஷ்மி, குபேர லஷ்மி, தீப லஷ்மி எனப் பல திருநாமங்கள் வரலஷ்மிக்கு உண்டு.
ஆதி லஷ்மி: உடல்நலம் தருபவள்.
தான்ய லஷ்மி: நிறைந்த தானிய வகைகளை அளிப்பவள்.
தைரிய லஷ்மி: மனோதிடத்தை அளிப்பவள்.
கஜ லஷ்மி: அனைத்துச் செல்வங்களையும் அருளக்கூடியவள்.
சந்தான லஷ்மி: மழலைச் செல்வம் சந்தான பாக்கியம் அளிப்பவள்.
விஜய லஷ்மி: வெற்றியை அளிப்பவள்.
வித்யா லஷ்மி: கல்வி கேள்விகளில் சிறக்கச் செய்பவள்.
தன லஷ்மி: செல்வ வளத்தை அளிப்பவள்.
கிருக லஷ்மி: இல்லத்துக்கு அஷ்ட லஷ்மிகளையும் வரவழைப்பவள்.
வரலஷ்மி: அஷ்ட ஐஸ்வர்யம்
மட்டுமல்ல, இல்லத்தில் அமைதியையும் ஆனந்தத்தையும் தருபவள். வரலஷ்மிக்கு மட்டுமே இல்லத்தில் விரதம் என்ற பண்டிகை உண்டு. அவளே அனைத்து லஷ்மிகளின் சொரூபமாகக் கருதப்படுவதால், வர லஷ்மி விரத வெள்ளிக் கும்பத்தில் அஷ்ட லஷ்மிகளின் திருவுருவத்தையும் பதிப்பது வழக்கம்.
விரதம் இருப்பது எப்படி?
வரலஷ்மி விரதத்தை முதன்முதலில் தொடங்குபவர்கள் மாமியார் எடுத்துக் கொடுக்க, மருமகள் செய்யலாம். மருமகள் புதிய வரலஷ்மி அம்மனை வைத்து வழிபடத் தொடங்க வேண்டும். இந்த அம்மன் திருமுகத்தைப் பிறந்த வீட்டுச் சீதனமாகப் பெற்றோர் அனுப்புவார்கள்.
பிறந்த வீட்டுச் சீதனமாக வரும் புதிய திருமுகத்தையும் கலசத்தையும் அலங்கரிக்க வேண்டும். இதை மாமியார் வரலஷ்மி திருமுகம் மற்றும் கலசத்தின் அருகில் வைக்க வேண்டும். பின்னர் மந்திரித்த மஞ்சள் கங்கணக் கயிறுகளையும், தாலிச் சரடையும் இந்தக் கலசத்தின் அருகே வைக்க வேண்டும். வரலஷ்மியைத் துதித்துச் செய்யப்படும் இந்தப்பூஜை நிறைவுற்றபின் புதிய தாலிச் சரடை அணிய வேண்டும்.
இந்தப்பூஜை பல தலைமுறைகளாக இல்லத்தில் நடந்துவருவதால் விரதம் எடுத்துக்கொண்டவர்கள் ஆண்டுதோறும் தொடர்ந்து இதைச் செய்துவர வேண்டும்.
குடும்ப பூஜை என்பதாக அல்லாமல் புதிதாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம். லஷ்மியைத் தாயாக நினைத்துக் கொண்டு, தாமே இப்பூஜையைச் செய்யலாம். அதன் பிறகு அதனைக் குல வழக்கமாக ஆக்கிக்கொள்ளலாம். சில பெண்களின் பிறந்த இல்லத்தில் இவ்வழக்கம் உண்டு; புகுந்த வீட்டில் இல்லையே என வருந்துவார்கள். அவர்கள் புகுந்த வீட்டிலும் விரதம் எடுத்துக்கொள்ளலாம். பிறந்த வீட்டில் இந்த வழக்கம் இல்லாமல் புகுந்த வீட்டில் இருந்தால் முதல் ஆண்டிலிருந்தே விரதம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், லஷ்மி திருமுகம் பிறந்த வீட்டிலிருந்து சீதனமாக வர வேண்டும்.
வரலஷ்மி வந்த கதை
மகாலஷ்மி தாயார் தன்னை முகமாகப் வைத்து பூஜிக்குமாறு, தன் பக்தை ஒருத்தியின் கனவில் முகம் காட்டி கூறியதால், முகம் மட்டுமே வைத்து பூஜிக்கப்படும் வழக்கம் வந்தது என்று சொல்லப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, திருமுகத்தை எடுத்து வைத்து பூஜை செய்யும் வழக்கமுள்ள இந்த விரதத்தின் மூலம் பிற நாட்களில் அம்மனைக் காண முடியாமல் இருக்கும். இதற்காகக் கிராமங்களில் இல்லத்துச் சுவரில் அம்மனின் திருமுகத்தை வரைந்து தினமும் பூஜிப்பது பழக்கமானது. அன்னையை ஆராதித்தால் ஆனந்தமாய் இல்லத்தில் வீற்றிருந்து அருள்பாலிப்பாள் என்பது ஐதீகம்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
19 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago