வார ராசிபலன் 22-6-2017 முதல் 28-6-2017 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

By சந்திரசேகர பாரதி

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 3-ல் சூரியனும் செவ்வாயும் 11-ல் கேதுவும் உலவுவதால் குடும்ப நலம் சீராகும். தோற்றப்பொலிவு கூடும். பேச்சில் திறமை வெளிப்படும். போட்டிகளிலும் வழக்குகளிலும் வெற்றி கிட்டும். இசைக் கலைஞர்கள் புகழோடு பொருளும் பெறுவார்கள். l நிலபுலங்கள் சேரும். சொத்துக்கள் மூலம் வருவாயும் கிடைக்கும். அரசு உதவி பெற வாய்ப்புக்கூடிவரும். நிர்வாகத் திறமை பளிச்சிடும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகளில் லாபம் இருக்கும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் உண்டாகும். ராகு 5-லும், குரு 6-லும் உலவுவதால் மக்கள் நலம் பாதிக்கும். பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படும். அதிர்ஷ்டத்தை நம்பி ஏமாற வேண்டாம். சனி 8-ல் இருப்பதால் அதிகம் உழைக்க வேண்டிவரும். கெட்டவர்களின் தொடர்புகூடாது. நல்லவர்களின் நட்பை நாடிப் பெற்று, அவர்களின் ஆலோசனைகளை மதித்து ஏற்றுக் கொள்வது நல்லது. தொழிலில் அதிக கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 25, 26, 28.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு, கிழக்கு

‎நிறங்கள்: சிவப்பு, வெண்மை, இளநீலம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 6, 7, 9.‎

பரிகாரம்: புதனுக்கும், சனிக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும். திருமாலையும், ஆஞ்சநேயரையும் வழிபடவும்.



ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 5-ல் குருவும் 10-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. செல்வாக்கும் மதிப்பும் உயரும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். பேச்சில் திறமை வெளிப்படும். கண்டிப்பும் கறாரும் கூட இருக்கும். குடும்பத்தில் சிறு சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். வீண் விவகாரங்களில் ஈடுபடலாகாது. நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வாய்ப்புகள் கூடிவரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். மாணவர்களது நோக்கம் நிறைவேறும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். 4-ல் ராகுவும் 7-ல் சனியும் இருப்பதால் கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது. குரு பலம் இருப்பதால் பண வரவு கூடும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். மகப்பேறு பாக்கியம் சிலருக்கு கிடைக்கும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். சிந்தனையில் தெளிவு பிறக்கும். தெய்வானுகூலம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 25, 26, 28. . .

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, வடக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, பொன் நிறம், பச்சை.

எண்கள்: 3, 5, 6, 7.

பரிகாரம்: செவ்வாய்க்கும் முருகனுக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்.

மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் புதன் ராசியிலேயே இருப்பது நல்லது. 3-ல் ராகுவும், 6-ல் சனியும், 11-ல் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் மதிப்பு உயரும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். உழைப்பு வீண்போகாது. பொது நலப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். ஆடை, அணிமணிகள் சேரும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். ஆடவர்களுக்கு பெண்களால் நலம் உண்டாகும். ஜன்ம ராசியில் சூரியனும் செவ்வாயும் இருப்பதால் உஷ்ணாதிக்கம் கூடும். தலை சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். எதிரிகள் இருப்பார்கள். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. 9-ல் கேது இருப்பதால் தந்தை நலனில் கவனம் தேவைப்படும். குரு 4-ல் இருந்தாலும் 10-ம் இடத்தைப் பார்ப்பதால் செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். வாரப் பின்பகுதியில் பண வரவு கூடும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 25, 26, 28.

திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: வெண்மை, இளநீலம், வெண்சாம்பல்.

எண்கள்: 4, 5, 6, 8.

பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடுவது நல்லது.

கடக ராசி வாசகர்களே

கோசாரப்படி கிரகங்கள் சாதகமாக உலவவில்லை. சந்திரன் மட்டுமே ஓரளவு நலம் புரிவார். ஜனன கால ஜாதகப்படி தற்சமயம் யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் கவலைப்படத் தேவையில்லை. ஜாதக பலமும் இல்லாதவர்களுக்கு துன்பங்களும் துயரங்களும் அதிகரிக்கும். இறை வழிபாட்டிலும், கிரக வழிபாட்டிலும் முழுமையாக ஈடுபடுவது நல்லது. பெரியவர்கள், ஆன்மிகவாதிகள், ஞானிகள் ஆகியோரது நல்லாசிகளைப் பெறுவதன் மூலம் சங்கடங்கள் குறைய வாய்ப்புண்டு. எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கடல் வாணிபம் செய்பவர்களுக்கெல்லாம் அளவோடு நலம் உண்டாகும். வாரப் பின்பகுதியில் ஜலப் பொருட்களால் லாபம் கிடைக்கும். பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படும். வீண் செலவுகளைத் தவிர்ப்பதுடன், கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. அரசாங்கம் மற்றும் உடன்பிறந்தவர்கள் மூலம் பிரச்சினைகள் சூழும். கண், கால் சம்பந்தமான உபத்திரவங்கள் ஏற்படும். மக்களால் மன அமைதி குறையும். தொழிலில் விரும்பத்தகாத மாற்றங்கள் உண்டாகும். சகிப்புத் தன்மையும் பொறுமையும் அவசியம் தேவைப்படும் நேரமிது.

அதிர்ஷ்ட தேதிகள்: ஜூன் 23, 26, 28. .

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெண்மை, இளநீலம்.

எண்கள்: 2, 6.

பரிகாரம்: குல தெய்வ வழிபாடு நலம் தரும். நவக்கிரக வழிபாடு செய்வது சிறப்பாகும்.

சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 9-ல் சுக்கிரனும் 11-ல் சூரியனும் செவ்வாயும் புதனும் உலவுவது சிறப்பாகும். எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் ஆதாயம் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்துவரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். அரசியல்வாதிகளுக்கு வரவேற்பு கூடும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் ஆதாயம் கிடைக்கும். நிலம், மனை, வீடு, வாகனங்கள் சேரும். சொத்துக்கள் மூலம் வருவாயும் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். வாரப் பின்பகுதியில் செலவுகள் சற்று அதிகரிக்கும். வீண் அலைச்சல் ஏற்படும். உடல் சோர்வு உண்டாகும். புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 15, 23, 25,.

திசைகள்: தெற்கு, வடகிழக்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, பொன் நிறம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 5, 6, 9.

பரிகாரம்: பராசக்தியை வழிபடுவது நல்லது.



கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 6-ல் கேதுவும் 8-ல் சுக்கிரனும் 10-ல் சூரியனும் செவ்வாயும் புதனும் உலவுவது நல்லது. தொலைதூரத் தொடர்பால் நலம் உண்டாகும்,. தான, தர்மப்பணிகளிலும் தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு அதிகரிக்கும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு கூடும். நிர்வாகத்துறையினருக்கு வரவேற்பு அதிகமாகும். தந்தையால் நலம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். வியாபாரம் பெருகும். கணிதம், எழுத்து,, பத்திரிகை, தரகுத் துறையினர் வளர்ச்சி காண்பார்கள். அரசு உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் துறைகள் லாபம் தரும். நிலம், மனை, வீடு, வாகனங்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய பொருட்களும் சேரும். திரவப் பொருட்களால் லாபம் பெற வாய்ப்பு கூடிவரும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டிப் பந்தயங்களிலும் விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி கிடைக்கும். வாரக் கடைசியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை தேவை. பயணத்தின்போது விழிப்புடன் இருப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 25, 26.

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடமேற்கு, வடக்கு.

நிறங்கள்: நீலம், மெரூன்,, பச்சை.

எண்கள்: 1, 6, 6, 7, 8, 9.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்