மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் செவ்வாய் தன் சொந்த வீட்டில் வலுப்பெற்றிருக்கிறார். குரு 6-ல் வக்கிரமாகவும், சுக்கிரன் 12-ல் வக்கிரமாகவும் உலவுவது நல்லது. இதர கிரக நிலைகள் சிறப்பாக இல்லை. எனினும், உங்கள் சுய பலம் இப்போது கூடியிருக்கும். எதிர்ப்புகளைக் கடந்து வாழ்வில் வெற்றி காண்பீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். பிரச்சினைகள் குறையும். பொதுப்பணிகளில் ஆர்வம் உண்டாகும்.
ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வாரப் பின்பகுதியில் சந்திரன் 12-ம் இடத்துக்கு மாறி சூரியன், புதன் ஆகியோருடன் சேருவதால் செலவுகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 23, 26. l திசைகள்: தெற்கு, வடமேற்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, மெரூன், வெண்மை. l எண்கள்: 3, 6, 7, 9.
பரிகாரம்: சூரியனையும், புதனையும் வழிபடவும்.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 10-ல் கேது, 11-ல் சூரியன், புதன், சுக்கிரன் உலவுவது சிறப்பாகும். புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பிறருக்குத் தாராளமாக உதவி செய்வீர்கள். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். முன்னேற்றத்துக்கான தகவல் வந்து சேரும். உடன்பிறந்த சகோதரிகள் உதவுவார்கள். மக்களால் நலம் உண்டாகும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். ஆன்மிக, அறநிலையப் பணிகளில் ஈடுபாடு கூடும். திரவப் பொருட்கள் லாபம் தரும். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியம் நிறைவேறும். புதிய பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 23, 26. l திசைகள்: வடகிழக்கு,
தென் கிழக்கு, கிழக்கு, வடக்கு. l நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம், பச்சை.
எண்கள்: 1, 3, 5, 6, 7. l பரிகாரம்: துர்க்கை, சுப்பிரமணியரை வழிபடுவது நல்லது.
மிதுன ராசி வாசகர்களே
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி, ராகு அனுகூலமாக உலவுகிறார்கள். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். வழக்கில் நல்ல திருப்பமோ, தீர்ப்போ கிடைக்கும். போட்டிப் பந்தயங்களிலும் விளையாட்டுகளிலும் வெற்றி காணலாம். அரசியல்வாதிகளுக்கும் அரசுப்பணியாளர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். உயர் பொறுப்புகள் உங்களைத் தேடிவரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு அதிகரிக்கும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும்.
அதிர்ஷ்டமான தேதி: மார்ச் 26. l திசைகள்: கிழக்கு, தெற்கு, தென் கிழக்கு, வடக்கு, தென் மேற்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, சிவப்பு, பச்சை. l எண்கள்: 1, 4, 5, 6, 8, 9.
பரிகாரம்: குரு ஸ்தானத்தில் உள்ளவர்களை வணங்கி நல்வாழ்த்துக்களைப் பெறவும்.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் வக்கிர குருவும், 9-ல் வக்கிர சுக்கிரனும் 10-ல் செவ்வாயும் உலவுவது நல்லது. கணவன் மனைவி உறவு நிலை சீராகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். எடுத்த காரியங்களில் துணிவோடும் தன்னம்பிக்கையோடும் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும்.
இயந்திரப்பணியாளர்களுக்கும் பொறியாளர்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். வேலையில்லாதவர்களுக்கு வாய்ப்பு கூடிவரும். அரசு விவகாரங்களில் அனுகூலமான திருப்பத்தைக் காணலாம். 2-ல் ராகுவும் 8-ல் கேதுவும் உலவுவதால் சிறுசிறு இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படும். பேச்சிலும் உணவுப் பழக்கத்திலும் கட்டுப்பாடு தேவை. விஷ பயம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 23, 28 (காலை).
திசைகள்: தெற்கு, தென் கிழக்கு. l நிறங்கள்: வெண்மை, சிவப்பு, இளநீலம்.
எண்கள்: 6, 9. l பரிகாரம்: நாகரை வழிபடவும்.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் வக்கிர குருவும் 8-ல் புதனும் 9-ல் செவ்வாயும் உலவுவது நல்லது. எதிர்ப்புகள் கட்டுக்குள் அடங்கியே இருக்கும். காரியானுகூலம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகமாகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். பேச்சில் திறமை வெளிப்படும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். ஜல சம்பந்தமான பொருட்கள் லாபம் தரும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள்.
இன்ஜினீயர்களுக்கு வரவேற்பு கூடும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தான, தர்மப்பணிகளிலும்; தெய்வப்பணிகளிலும் ஈடுபாடு அதிகரிக்கும். ஜன்ம ராசியில் ராகுவும் 4-ல் சனியும் 7-ல் கேதுவும் 8-ல் சூரியனும் இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். உடல் சோர்வு உண்டாகும். உஷ்ணாதிக்கம் கூடும். கண் உபத்திரவம் ஏற்படும். கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 23, 26. l திசைகள்: தெற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, பொன் நிறம். l எண்கள்: 3, 9
பரிகாரம்: நாகரையும் ஆஞ்சநேயரையும் வழிபடவும்.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 6-ல் கேதுவும் உலவுவது நல்லது. மனத்தில் தெளிவு பிறக்கும். ஆன்மிக, அறநிலையப்பணிகளில் ஈடுபாடு கூடும். தியான, யோகப் பயிற்சிகளில் ஈடுபாடுள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். பொது நலப்பணிகளுக்கு வரவேற்பு கூடும். தொழிலாளர்களது கோரிக்கைகள் சில நிறைவேறும். எதிர்ப்புகள் இருந்தாலும் அவற்றைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும்.
இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள் லாபம் தரும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. இயந்திரப் பணியாளர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. பயணத்தால் சங்கடம் ஏற்படும் .
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 23, 26. l திசைகள்: மேற்கு, வட மேற்கு.
நிறங்கள்: நீலம், மெரூன். l எண்கள்: 7, 8.
பரிகாரம்: சுப்பிரமணியரையும் விரய ராகுவுக்காக துர்க்கையையும் வழிபடுவது நல்லது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
16 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago