வார ராசி பலன் 03-09-2015 முதல் 09-09-2015 வரை (துலாம் முதல் மீனம் வரை)

By சந்திரசேகர பாரதி

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும், 10-ல் செவ்வாயும், 11-ல் சூரியனும் குருவும் சஞ்சரிப்பதால் வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கூடிவரும். நண்பர்கள் உதவுவார்கள். காரியத்தில் வெற்றி கிட்டும். நற்பணிகளின் ஈடுபாடு கூடும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். நல்ல தகவல் வந்து சேரும். பணப் புழக்கம் திருப்தி தரும்.

அரசாங்கத்தால் எதிர்பார்த்திருந்த காரியங்கள் நிறைவேறும். முக்கியஸ்தர்களது சந்திப்பு நிகழும். வாரப் பின்பகுதியில் சுப காரியங்கள் நிகழும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். பிரச்சினைகள் எளிதில் தீரும். தர்மப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பிறருக்குத் தாராளமாக உதவுவீர்கள். 5-ம் தேதி முதல் சனி 2-ம் இடம் மாறுகிறார். என்றாலும் அவர் உங்கள் ராசிக்கு யோகக்காரகன் என்பதால் பொருளாதார நிலையில் வளர்ச்சி காண வழி பிறக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 3, 9.

திசைகள்: கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு, தெற்கு.

நிறங்கள்: மெரூன், இள நீலம், வெண்மை, பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 6, 7, 9.

பரிகாரம்:

துர்க்கை, மகாவிஷ்ணுவுக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரனும், 10-ல் சூரியனும், 11-ல் புதனும் ராகுவும் உலவுவது விசேஷம். எதிர்ப்புகளைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புகூடிவரும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைக்கும். கலைத் துறையினருக்கு வரவேற்பு கூடும். அரசியல்வாதிகளுக்கும் அரசுப் பணியாளர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும்.

வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் ஆதாயம் கிடைக்கும். பயணத்தால் நலம் உண்டாகும். கணவன்-மனைவி உறவு நிலை சிறக்கும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். மேலதிகாரிகள், முக்கியஸ்தர்கள் ஆகியோரது ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 3, 5, 9.

திசைகள்: தென்மேற்கு, வடக்கு, கிழக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், பச்சை, ஆரஞ்சு.

எண்கள்: 1, 4, 5, 6.

பரிகாரம்: சனிக்கும் செவ்வாய்க்கும் பரிகாரங்களைச் செய்வது நல்லது.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசி அதிபதி குரு 9-ல், 9-ம் வீட்டோடு சூரியனுடன் கூடி இருப்பது விசேஷம். புதன், சுக்கிரன், சனி, ராகு ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் வாழ்வில் சுபிட்சம் கூடும். நல்லவர்கள் உதவி புரிவார்கள். பொருளாதார நிலை திருப்தி தரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகரிக்கும். சொத்துகளும் பொருட்களும் சேரும். எதிரிகள் அடங்கிப் போவார்கள்.

அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழி பிறக்கும். கலைத் துறையினர், மாதர்களுக்கு அளவோடு நலம் உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்பு ஆக்கம் தரும். எதிரிகள் அடங்குவார்கள். வாழ்க்கைத் துணைவராலும் தந்தையாலும் அனுகூலம் ஏற்படும். வியாபாரிகள், மருத்துவர்கள், விஞ்ஞானிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 3, 5.

திசைகள்: வடக்கு, தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு, மேற்கு.

நிறங்கள்: பச்சை, புகை நிறம். வெண்மை, கருப்பு, இளநீலம், பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 4, 5, 6, 8.

பரிகாரம்:

செவ்வாய், கேது, சனிக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 10-ல் சனி உலவுவது நல்லது. புதன் 9-ல் இருந்தாலும் தன் சொந்த, உச்ச, மூலத்திரிகோண ராசியில் உலவுவதால் நலம் புரிவார். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகள் நலம் கவனிப்பின்பேரில் சீராகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உழைப்புக்கும் அலைச்சலுக்கும் உரிய பயன் கிடைத்துவரும். தொழிலாளர்களது கோரிக்கைகள் சில இப்போது நிறைவேறும்.

விவசாயிகளுக்கு வருவாய் அதிகமாகும். எதிரிகள் இருப்பார்கள் என்றாலும் சமாளித்து வருவீர்கள். 7-ல் செவ்வாயும் சுக்கிரனும் உலவுவதால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகமாகும். விட்டுக் கொடுத்துப் பழகிவருவது நல்லது. கூட்டாளிகளால் தொல்லைகள் சூழும். 8-ல் சூரியனும் குருவும் இருப்பதால் பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படும். பிறரிடம் சுமுகமாகப் பேசிப் பழகவும்

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 3, 5, 9.

திசைகள்: மேற்கு, வடமேற்கு, வடக்கு.

நிறங்கள்: பச்சை, நீலம், மெரூன்.

எண்கள்: 5, 7, 8.

பரிகாரம்:

குருவுக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாயும், 7-ல் குருவும், 8-ல் புதனும் உலவுவது சிறப்பு. எதிர்ப்புகளைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். வழக்கு, விசாரணைகளிலும்; போட்டி பந்தயங்களிலும்; விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். மரைன் இன்ஜினீயரிங்ங் துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் சுபிட்சம் கூடும். பொருளாதார நிலை திருப்தி தரும்.

முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் நிறைவேறும். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற துறைகள் லாபம் தரும். எதிர்பாராத திடீர் பொருள் வரவு உண்டாகும். 5-ம் தேதி முதல் சனி 10-ம் இடம் மாறுவதால் செய்து வரும் தொழில் விருத்தி அடையும். உழைப்புக்குரிய பயன் கிடைக்கும். 6-ல் சுக்கிரனும், 7-ல் சூரியனும் இருப்பதால் மனைவியாலும், பிற பெண்களாலும் பிரச்சினைகள் சூழும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 3, 5, 9.

திசைகள்: வடக்கு, தெற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: பச்சை, நீலம், பொன் நிறம், செந்நிறம்.

எண்கள்: 3, 5, 8, 9.

பரிகாரம்: சர்ப்ப சாந்தி செய்து கொள்ளவும். பராசக்தியை வழிபடவும்.

மீன ராசி வாசகர்களே

கோசாரப்படி சூரியனும் சுக்கிரனும் மட்டுமே அனுகூலமாக உலவுகிறார்கள். இதர முக்கியமான கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் எதிலும் முழுமையான வளர்ச்சிக்கு இடமிராது. சிறுசிறு இடர்பாடுகள் அவ்வப்போது ஏற்படவே செய்யும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. பொருளாதாரப் பிரச்சினை ஏற்படும்.

தொழில் சம்பந்தமான வழக்கு, விசாரணைகளில் ஈடுபட வேண்டிவரும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரும். பயணத்தால் சங்கடம் உண்டாகும். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். மாதர்கள் நலம் சிறக்கும். அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். நிறுவன, நிர்வாகத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். 5-ம் தேதி முதல் சனி 9-ம் இடம் மாறுவதால் பிரச்சினைகள் சற்று குறையும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 3, 5, 9.

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, வெண்மை, இளநீலம்.

எண்கள்: 1, 6.

பரிகாரம்:

சர்ப்ப சாந்தி செய்து கொள்ளவும். வேதம் படித்தவர்களுக்கு உதவவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

14 hours ago

ஆன்மிகம்

16 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்