மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 11-ல் கேது, 12-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்ப்புக்களைச் சமாளிக்கும் வல்லமை உண்டாகும். புத்திசாலித்தனம் கூடும். பொருள்வரவு அதிகரிக்கும். கணவன்-மனைவியிடையே நல்லுறவு நீடிக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். பங்குதாரர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். ஆன்மிகப்பணிகளில் நாட்டம் உண்டாகும். அதனால் மனதில் தெளிவு ஏற்படும். வாரப் பின்பகுதியில் சந்திரன் 8-ம் இடம் மாறி, செவ்வாய், சனியுடன் கூடுவதால் சுகம் குறையும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். சொத்து சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. ஜலம், ரத்தம், மறைமுக உறுப்பு சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் விவகாரங்களில் தலையிடலாகாது. எதிலும் யோசித்து ஈடுபடுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 21, 22 (முற்பகல்).
திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 6, 7.
பரிகாரம்: திருச்செந்திலாண்டவனை வழிபடவும்.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 10-ல் கேது, 11-ல் சுக்கிரன் உலவுவதால் பிள்ளைகளால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். சுகமும் சந்தோஷமும் பெருகும். வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களின் சேர்க்கை நிகழும். எதிரிகள் விலகுவார்கள். பெண்களால் அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்களால் ஆதாயம் கிடைக்கும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு கூடும். உத்தியோகஸ்தர்கள், இயந்திரப்பணியாளர்கள், அரசுப்பணியாளர்கள், வியாபாரிகள் ஆகியோருக்கெல்லாம் பிரச்சினைகள் சூழும். பக்குவமாக சமாளிக்கவும். பொருளாதாரம் சம்பந்தமான தொழிலில் விழிப்புத் தேவை. கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். பெற்றோர் மற்றும் பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். அலைச்சல் கூடும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 21, 25.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம்.
எண்கள்: 6, 7.
பரிகாரம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபடுவது நல்லது. ஏழை மாணவர்கள் கல்வி பயில உதவவும்.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 6-ல் செவ்வாய், சனி, 11-ல் சூரியன், புதன் உலவுவது சிறப்பு. குடும்ப நலம் சீராக இருந்துவரும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். பணப் புழக்கம் அதிகமாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். நிறுவன, நிர்வாகத் துறையினருக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவும். தொழில்நுட்பத் திறமை வெளிப்படும். அரசுப் பணியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், தரகர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் வளர்ச்சி காண்பார்கள். பயணத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள் : ஏப்ரல் 21, 25.
திசைகள்: தென்மேற்கு, தெற்கு, வடக்கு, கிழக்கு.
நிறங்கள்: கறுப்பு, பச்சை, வெண்மை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 4, 5, 9.
பரிகாரம்: விநாயகர் அகவல் படிக்கவும். கணபதிக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுவது நல்லது.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 5-ல் செவ்வாய், 9-ல் சுக்கிரன், 10-ல் சூரியன் புதன் ஆகியோர் சஞ்சரிப்பது சிறப்பு. முக்கியமான தகவல் வந்து சேரும். நண்பர்கள், உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். பெற்றோரால் அனுகூலம் ஏற்படும். குடும்ப நலம் திருப்தி தரும். அரசியல் ஈடுபாடு பயன்படும். புதிய பதவி, பட்டங்கள் வந்து சேரும். பிள்ளைகளால் அளவோடு நலம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் தொழில் லாபம் தரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். 2-ல் ராகு, 8-ல் கேது உலவுவதால் பேச்சில் நிதானம் தேவை. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம். புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். 5-ல் சனி வக்கிரமாக இருப்பதால் மறதி ஏற்படும். பிள்ளைகளால் மன அமைதி குறையும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்கள் விழிப்புடன் இருப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 21, 22 (முற்பகல்), 25.
திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: பொன் நிறம், ஆரஞ்சு, சிவப்பு.
எண்கள்: 1, 3, 5, 6, 9.
பரிகாரம்: ராகு, கேது, சனிக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும்.
சிம்ம ராசி வாசகர்களே
சுக்கிரன் ஒருவரே கோசாரப்படி அனுகூலமாக உலவுகிறார். செவ்வாய் 4-லும், சூரியன் 9-லும் இருந்தாலும் நலம் உண்டாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு உண்டாகும். பெண்களால் நலம் ஏற்படும். சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைத்துறைகள் ஆக்கம் தரும். பேச்சில் இனிமை கூடும். அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். நிறுவன, நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். நிலம், மனை, வீடு, வாகனங்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய சொத்துகளும் சேரும். குரு, ராகு, கேது ஆகியோரது நிலை சிறப்பாக இல்லாததால் அலைச்சல் அதிகமாகும். உடல் அசதி கூடும். கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது. அயல்நாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. வாழ்க்கைத்துணைவரால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். பொருளாதாரம் சம்பந்தமான தொழிலில் எச்சரிக்கை தேவை. பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 21, 22 (முற்பகல்), 25.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, இளநீலம், வெண்மை.
எண்கள்: 1, 6, 9.
பரிகாரம்: துர்கை, விநாயகரை வழிபடுவது நல்லது.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் சனி, 6-ல் கேது, 8-ல் புதன் உலவுவது நல்லது. குரு 12-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். பண வரவு அதிகமாகும். முக்கியமான எண்ணங்களில் சில இப்போது நிறைவேறும். மதிப்பும் அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெறுவீர்கள். பொறியியல், சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். எதிரிகளின் கரம் வலுக்குறையும். போட்டிகள், வழக்கு, வியாஜ்ஜியங்கள், விளையாட்டுகளில் வெற்றி கிட்டும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். மறைந்த பொருள் கிடைக்கும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு வரவேற்பு கூடும். வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. பயணம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 21, 25.
திசைகள்: வடக்கு, வடமேற்கு, தெற்கு.
நிறங்கள்: பச்சை, மெரூன்.
எண்கள்: 5, 7, 9.
பரிகாரம்: சூரிய நாராயணர், துர்க்கையை வழிபடுவது நல்லது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago