துலாம் ராசி நேயர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 11-ல் சூரியன், சுக்கிரன் உலவுவதால் மனதில் துணிவு பிறக்கும். எதிர்ப்புக்கள் கட்டுக்குள் இருக்கும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணச் சந்தர்ப்பம் கூடும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். கணவன் மனைவி உறவுநிலை சீராக இருந்துவரும். நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் தேடிவரும். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு கூடும்.
ஆன்மிக, அறநிலையப் பணியாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவும். உழைப்பு வீண்போகாது. முக்கியமான எண்ணங்கள் ஈடேற வழி பிறக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் சிறுசிறுப் பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் நஷ்டத்தைத் தவிர்க்கலாம். பயணத்தின்போது பாதுகாப்புத் தேவை.
அதிர்ஷ்டமான நாட்கள்: செப்டம்பர் 11, 12
திசைகள்: வடமேற்கு, கிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: மெரூன், வெண்மை, ஆரஞ்சு
எண்கள்: 1, 6, 7
பரிகாரம்: துர்கை, திருமாலை வழிபடவும்.
விருச்சிக ராசி நேயர்களே
உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசியிலேயே குரு பார்வையுடன் உலவுவது சிறப்பு. 9-ல் குரு, 10-ல் சூரியன்,11-ல் புதன், ராகு சஞ்சரிப்பது குறிப்பிடத்தக்கது. பிள்ளைகளால் பெற்றோருக்கும் பெற்றோரால் பிள்ளைகளுக்கும் நலம் உண்டாகும். எதிரிகள் அடங்குவர். எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். நல்ல நண்பர்கள் அமைவார்கள். பண வரவு அதிகமாகும். அரசாங்கப் பணிகள் நிறைவேறும்.
அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் கிட்டும். நிறுவன, நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்கள், உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், வியாபாரிகள் ஆகியோரது நோக்கம் நிறைவேறும். ஆராய்ச்சியாளர்களுக்குப் புகழ் கூடும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். தெய்வப் பணிகள் ஈடேறும். 5-ல் கேது, 12-ல் சனி இருப்பதால் மனதில் ஏதேனும் சலனம் ஏற்பட்டு விலகும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். தொழிலாளர்கள் அதிகம் பாடுபட வேண்டிவரும்.
அதிர்ஷ்டமான நாட்கள்: செப்டம்பர் 12, 14, 15
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: பொன் நிறம், வெண்சாம்பல் நிறம், பச்சை, இளநீலம், ஆரஞ்சு
எண்கள்: 1, 3, 4, 5, 6, 9
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடவும். சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றவும். ஹனுமன் சாலீஸா படிப்பதும் கேட்பதும் நல்லது.
தனுசு ராசி நேயர்களே
உங்கள் ராசிக்கு 9-ல் சூரியன், சுக்கிரன், 10-ல் புதன், ராகு, 11-ல் சனி சஞ்சரிப்பது சிறப்பு. அலைச்சல் கூடும் என்றாலும் பயனும் கிடைக்கும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். முக்கியஸ்தர்களது தொடர்பு பயன்படும். கலைஞர்கள் அளவோடு வளர்ச்சி காண்பார்கள். சொந்தத் தொழில் லாபம் தரும். வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளச் சந்தர்ப்பம் உருவாகும்.
புதிய துறைகளில் ஈடுபாடு உண்டாகும். ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்பு உயரும். கணவன்-மனைவி உறவு நிலை திருப்தி தரும். கறுப்பு நிறப்பொருட்கள் லாபம் தரும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவும். சமுதாய நலப்பணியாளர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். 4-ல் கேது, 8-ல் குரு, 12-ல் செவ்வாய் இருப்பதால் சிறுசிறு பிரச்சினைகள் அவ்வப்போது ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய் மற்றும் பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை.
அதிர்ஷ்டமான நாட்கள்: செப்டம்பர் 11, 12, 14, 15
திசைகள்: தென்மேற்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு
நிறங்கள்: ஆரஞ்சு, நீலம், பச்சை, புகை நிறம், இளநீலம், வெண்மை
எண்கள்: 1, 4, 5, 6, 8
பரிகாரம்: விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகனை தொடர்ந்து வழிபடவும். வேத விற்பன்னர்களுக்கு உதவவும்.
மகர ராசி நேயர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 7-ல் குரு, 8-ல் சுக்கிரன், 9-ல் புதன், 10-ல் சனி, 11-ல் செவ்வாய் உலவுவதால் மனதிற்கினிய சம்பவங்கள் நிகழும். போட்டிகளில் வெற்றி கிட்டும். எதிரிகள் விலகுவார்கள். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். சுப காரியங்கள் நிகழும். திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். தெய்வப்பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு கூடும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். கலைஞர்களுக்கு அளவோடு நலம் உண்டாகும். உத்தியோகஸ்த்ர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். இயந்திரப் பணியாளர்களுக்கு லாபம் கூடும். பொறியாளர்களது நிலை உயரும். 8-ல் சூரியன், 9-ல் ராகு உலவுவதால் தந்தை நலனில் கவனம் தேவை. அரசியல், நிர்வாகம் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்படவும்.
அதிர்ஷ்டமான நாட்கள்: செப்டம்பர் 11, 12, 14, 15
திசைகள்: வடகிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம், மெரூன், பச்சை
எண்கள்: 3, 5, 6, 7, 8, 9
பரிகாரம்: ஆதித்தனை வழிபடவும். ஆதித்ய ஹ்ருதய பாராயணம் செய்வது நல்லது.
கும்ப ராசி நேயர்களே
உங்கள் ராசிக்கு 8-ல் புதன், 10-ல் செவ்வாய் உலவுவதால் வியாபார நுணுக்கம் தெரியவரும். மாணவர்களது நிலை உயரும். எடுத்த காரியங்களில் வெற்றி பெற சந்தர்ப்பம் கிடைக்கும். மனத்துணிவு கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். பொறியாளர்களது நோக்கம் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் தொழில் ரீதியாக உதவுவார்கள்.
உற்றார் உறவினர்களால் அனுகூலம் ஏற்படும். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் வீண்வம்பு, சண்டைகளில் ஈடுபடகூடாது. பயணத்தின்போது பாதுகாப்புத் தேவை. கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சகிப்புத் தன்மை அவசியம். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். ஆசைகளைக் குறைத்துக் கொள்ளவும். கேளிக்கை, உல்லாசங்களைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்டமான நாட்கள்: செப்டம்பர் 11, 12, 14, 15
திசைகள்: வடக்கு, தெற்கு
நிறங்கள்: பச்சை, சிவப்பு
எண்கள்: 5, 9
பரிகாரம்: லட்சுமி பூஜை செய்வது நல்லது. ஸ்ரீசூக்தம் படிக்கவும் கேட்கவும் செய்யலாம். ஏழைப் பெண்களுக்கு உதவவும்.
மீன ராசி நேயர்களே
உங்கள் ராசிநாதன் குரு 5-ம் இடத்தில் பலம் பெற்று சஞ்சரிப்பதாலும் சூரியன், செவ்வாயின் நிலை சிறப்பாக இருப்பதாலும் புத்திசாலித்தனம் பளிச்சிடும். மனதில் தெளிவும் தன்னம்பிக்கையும் பிறக்கும். தெய்வ அனுகூலம் உண்டாகும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். உத்தியோகஸ்தர்களது எண்ணம் ஈடேறும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். அரசியல் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.
அரசுப்பணியாளர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். பிள்ளைகளால் பெற்றோருக்கும் பெற்றோரால் பிள்ளைகளுக்கும் நலம் உண்டாகும். 6-ல் சுக்கிரன், 7-ல் புதன், ராகு இருப்பதால் வாழ்க்கைத் துணையின் நலனில் கவனம் தேவை. சனி 8-ல் இருப்பதால் அதிகம் பாடுபட வேண்டிவரும். தொழிலாளர்களுக்கு உழைப்புக் கூடுமே தவிர அதற்கான பயன் கிடைக்காமல் போகும். சுரங்கப் பணியாளர்கள் விழிப்புடன் செயல்படவும். பிற மொழி, இனத்தவரிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
அதிர்ஷ்டமான நாட்கள்: செப்டம்பர் 11, 12, 14, 15
திசைகள்: கிழக்கு, வடகிழக்கு, தெற்கு
நிறங்கள்: ஆரஞ்சு, பொன் நிறம், சிவப்பு
எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: சர்ப்ப கிரகங்களை வழிபடவும். சுமங்கலிப் பிரார்த்தனை செய்யவும். ஏழை, எளியவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவவும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
13 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago