துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் 11-ல் ராகுவும் உலவுவது நல்லது. வியாபார முன்னேற்றத்திட்டங்கள் கைகூடும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். அயல்நாட்டுத் தொடர்பால் ஆதாயம் கிடைக்கும். சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். 5-ல் கேதுவும் 12-ல் குருவும் உலவுவதால் மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். மறதியால் அவதி ஏற்படும். வயிறு, கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். 2-ல் சனியும் 8-ல் சூரியனும் அமர்ந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தந்தையாலும், அரசாங்கத்தாராலும் சங்கடங்கள் சூழும். உஷ்ணாதிக்கம் அதிகரிக்கும். 7-ல் சுக்கிரன் செவ்வாயின் வீட்டில் உலவுவதால் கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறையும். கூட்டுத் தொழிலில் அதிக கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 1, 4, 5, 6.
திசைகள்: தென்மேற்கு, வடக்கு.
நிறங்கள்: சாம்பல்நிறம், பச்சை.
எண்கள்: 4, 5. l பரிகாரம்: பெரியவர்களை வணங்கி வாழ்த்துக்களைப் பெறுவது நல்லது.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். ஜன்ம ராசியில் வக்கிரச் சனியும், 9-ல் செவ்வாயும் உலவுவதால் உடல் நலம் ஒருநாளைப் போல் மறுநாளிருக்காது. அதிகம் உழைக்க வேண்டிவரும். வீண்வம்பு, வழக்குகள் வந்து சேரும்; எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உடன்பிறந்தவர்களாலும், வாழ்க்கைத் துணைவராலும் தொல்லைகள் சூழும். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்தொழிலில் அபிவிருத்தி காணலாம். குரு பலம் இருப்பதால் பண வரவு சீராக இருந்துவரும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். புத்திசாலித்தனம் வெளிப்படும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும் ஆசிரியர்கள் போற்றப்படுவார்கள். எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் போன்ற நவீன விஞ்ஞானத் துறைகளில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 1, 4.
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம்.
எண்கள்: 3, 4. l பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடவும். சனிப் பிரீதி செய்து கொள்ளவும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 5-ல் சுக்கிரனும் 6-ல் சூரியனும் புதனும் உலவுவது நல்லது. தெய்வப் பணிகளிலும் தர்மப் பணிகளிலும் நாட்டம் உண்டாகும். துணிச்சலான காரியங்களில் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு சுபிட்சம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகள் லாபம் தரும். நிறுவன, நிர்வாகத் துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் காண வாய்ப்பு கூடிவரும். மூத்த சகோதர, சகோதரிகளால் நலம் உண்டாகும். வாரப் பின்பகுதியில் முக்கியமான காரியங்கள் இனிதே நிறைவேறும். நல்லவர்களின் நட்பு நலம் சேர்க்கும். நல்லவர் அல்லாதவர்களை விட்டு விலகுவது அவசியமாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 4, 5, 6.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை, சிவப்பு.
எண்கள்: 1, 5, 6, 7. l பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடவும்.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் 9-ல் குருவும் 11-ல் சனியும் உலவுவது நல்லது. வார ஆரம்பம் சாதாரணமாகவே காணப்படும். 3-ம் தேதி முதல் நல்ல திருப்பம் உண்டாகும். தெய்வப் பணிகள் ஈடேறும். தரும குணம் வெளிப்படும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். பெற்றோரால் மக்களுக்கும் மக்களால் பெற்றோருக்கும் அனுகூலம் உண்டாகும். மகப்பேறு பாக்கியம் கிட்டும். சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். விருந்து, உபசாரங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சி பெறுவீர்கள். நிலம், மனை, வீடு, வாகனம் முதலிய சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மூலம் வருவாயும் கிடைக்கும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 4, 5, 6.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடகிழக்கு, தெற்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம், சிவப்பு.
எண்கள்: 3, 6, 8, 9. l பரிகாரம்: நாகரை வழிபடுவது நல்லது.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 4-ல் புதனும் 10-ல் சனியும் உலவுவது நல்லது. மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்துவரும். மனத்தில் துணிவு கூடும். கலைத் துறை ஊக்கம் தரும். உடன்பிறந்த சகோதரிகள் உதவுவார்கள். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சூரியன், செவ்வாய், குரு, ராகு, கேதுவின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் அலைச்சல் கூடும். மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். பயணத்தால் சங்கடம் உண்டாகும். அரசு சம்பந்தமான காரியங்களில் விழிப்பு தேவை. குடும்ப நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. பொருளாதாரப் பிரச்சினை ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 5, 6.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடக்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, பச்சை.
எண்கள்: 5, 6, 8. l பரிகாரம்: குருவையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும்.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும், 3-ல் சூரியனும் 6-ல் ராகுவும் 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வெளிநாட்டுத் தொடர்பால் நலம் உண்டாகும். பயணம் பயன்படும். வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். நல்லவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். சுப காரியங்கள் நிகழும். பண நடமாட்டம் அதிகமாகும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். விருந்து, உபசாரங்களிலும் கேளிக்கை, உல்லாசங்களிலும் ஈடுபாடு கூடும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். முக்கியப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 1, 4.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: புகைநிறம், இளநீலம், வெண்மை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 4, 6. l பரிகாரம்: மகாவிஷ்ணுவை வழிபடவும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago